செய்திகள்

MS, Ranil and Sambandan in pooja at Trinco Kali Kovil ஜனாதிபதி, பிரதமர் பத்திரகாளி கோவிலில் வழிபட்டனர்

President Maithripala Sirisena , Prime Minister Ranil Wickremasinghe and opposition leader R. Sambandan participated in a Hindu pooja at the Kali Kovil in Thrincomalee yesterday. Pics by Pradeep Pathirana திருகோணமலையில் இடம்பெறும் யொவுன்புர நிகழ்வில் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் வழிபட்டனர். அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனும் இருந்தார்.

Read More »

எனக்கு ஏன் வீட்டை மறுக்கிறார்கள்?

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?

Read More »

இரட்டைமடியையும் சுருக்குமடியையும் ஒன்றெனக் கருதுவது அறியாமை இல்லையா?

ராமேஸ்வரத்தில் அரசு சார்பில் தண்டோரா போட்டிருக்கிறார்கள். “கடலுக்குப் போகும் படகுகள் கண்டிப்பாய் மீன் துறையிலிருந்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். இந்திய எல்லையைத் தாண்டி போகக் கூடாது. இரட்டைமடி / சுருக்குமடி பயன்படுத்தக் கூடாது.’’ இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கடல் தொழில் தொடர்பாக எதுவுமே தெரியாதவர்களை வைத்து இந்த அரசாங்கம் மீனளத் துறையை நடத்தும். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவர்கள் தம் அறியாமையால் கடலோடிகளை வதைப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. மீனளத் துறையிலிருந்து அனுமதிச் சீட்டு பெற்றுத்தான் கடலுக்குப் போக வேண்டும் என்பது ஏற்கெனவே ...

Read More »

இலங்கையில் மன அழுத்த நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்ன?

இலங்கையில் மனஅழுத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்டு உலக சுகாதார தினம், ஏப்ரல் 7ம் தேதி ”மன அழுத்தம் பற்றி பேசுவோம்” என்ற தலைப்பில் கடைபிடிக்கப்பட இருக்கும் வேளையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர் ஜேக்கப் குமரேசன் இலங்கையில் 8 லட்சம் பேர் மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக கூறியிருக்கின்றார்.

Read More »

 ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படாத அந்த 7 அறிக்கைகள்!

இலங்கை பாதுகாப்புப் படையினர், போர்க் குற்றங்களைச் செய்யவில்லை என, சர்வதேச போர்க் குற்றங்கள் தொடர்பான தேசிய நிபுணர்களால் முன்வைக்கப்பட்ட 7 அறிக்கைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றில் எவற்றையும், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்று, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தைத் தவிர, மாற்று அரசியல் குழுவொன்றும், இம்முறை ஜெனீவா அமர்வில் கலந்துகொண்டது என்றும் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் மேலும் கூறினார்.

Read More »

நெதர்லாந்து தேர்தல் மூலம் நிலைநிறுத்தப்படும் உண்மைகள் !

ஐரோப்பா முழுவதும் வெகுஜன ஈர்ப்பு அலை பரவும் என்று எழுந்த கணிப்பைப் பொய்யாக்கியிருக்கின்றன நெதர்லாந்து தேர்தல் முடிவுகள். பிரதமர் மார்க் ருட்டேயின் மைய வலதுசாரிக் கட்சியான ‘சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக் கான மக்கள் கட்சி’(விவிடி) 33 இடங்களில் வென்றிருப்பதன் மூலம் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

Read More »