செய்திகள்

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?

சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ...

Read More »

Prime Minister Trudeau photographed with former VP of group on Canada’s terror list – Stewart Bell

TORONTO — A photo of Prime Minister Justin Trudeau posing with Veluppillai Thangavelu, the former vice-president of a group on Canada’s list of outlawed terrorist organizations, has underscored the pitfalls of selfie politics. Thangavelu, who was a senior official in the World Tamil Movement when it was the target of an RCMP investigation, posted a photo on Facebook showing he ...

Read More »

இன்று உலக பூமி தினம்: வீட்டைப்போல் பூமியை பாதுகாப்போம்!

பசுமை போர்த்தி ரம்மியமாக காட்சியளிக்கும், திருநெல்வேலி மாவட்டம் முத்துக்குழிவயல் வனப்பகுதியில் இயற்கையாக தேங்கி நிற்கும் தண்ணீர். (கோப்பு படம்) சுற்றுச்சூழல் மாசு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் போன்றவை மனித வாழ்வாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 2 ஆண்டாக வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் குடிப்பதற்கும், வீட்டின் அன்றாடப் பயன்பாட்டுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் அழிந்து வருகின்றன.

Read More »

அதிமுகவின் அடுத்த ஆளுமை யார்?

ஜெயலலிதா மரணத்துக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் பரபரப்பாக, திடீர் திருப்பங்களைக் கொண்டதாக, கணிக்க முடியாததாக உள்ளது. அதிமுக உட்கட்சியில் ஏற்படும் அதிர்வலைகள் அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. ஜெயலலிதா இருந்தவரை கட்சிக்குள் அவர் எடுப்பதுதான் முடிவு. அது ஏற்புடையதோ, இல்லையோ அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிப்பதோ, எதிர் கேள்வி கேட்பதோ எப்போதும் நிகழாத சம்பவம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சியும், கட்சியும் வேறு வேறு இடத்தில் இருந்தது.

Read More »

மோடியின் அம்பேத்கர் !

இந்த ஆண்டிலிருந்து அம்பேத்கரின் பிறந்தநாள், தேசிய தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. நீராதாரங்களை நிர்வகிப்பதன் அவசியங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் தேசிய தண்ணீர் தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வைஸ்ராய் ஆட்சிக்காலத்தில் 1942-46 ஆண்டுகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பொறுப்பில் நீர்ப்பாசனத் துறையும் இருந்தது. அந்த அடிப்படையில் நீர் மேலாண்மையின் முன்னோடியாக அம்பேத்கரை அடையாளப்படுத்துகிறது மத்திய அரசு. அம்பேத்கருக்கும் தண்ணீருக்குமான உறவில் அது ஒரு புள்ளி மட்டுமே. தண்ணீரைப் பெறுவது ஓர் அரசியல் உரிமை, ஆனால் அது ஒடுக்குமுறையின் கருவியாகவே ...

Read More »

வாழும் கலை நடத்திய விழாவினால் பயங்கர சேதம்; யமுனை நதிச்சமவெளியைச் சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும்: நிபுணர்கள் குழு அறிக்கை!

வாழும் கலை நிகழ்ச்சிக்காக நடைபெற்ற பணிகள். | கோப்புப் படம்.| சந்தீப் சக்சேனா. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நடத்திய மிகப்பெரிய கலாச்சாரத் திருவிழாவினால் சேதமடைந்த யமுனை நதிச் சமவெளியை சீர்செய்ய 10 ஆண்டுகள் ஆகும் என்பதோடு ரூ.13.29 கோடி செலவாகும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. சஷி சேகர் என்கிற நீராதார அமைச்சகச் செயலர் தலைமை வகித்த நிபுணர்கள் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் இந்தத் தகவலை அளித்துள்ளது.

Read More »

அரசியல் பணமயமாதல் தேசியப் பிரச்சினை.. ஆர்.கே. நகர் அதன் எல்லை அல்ல!

தேர்தல் ஆணையம் ‘ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் ரத்து’ என்று அறிவித்தபோது, உடைந்து உட்கார்ந்தவர்களில் எங்களுடைய புகைப்படக்காரரும் ஒருவர். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. அவருடைய மரணத்துக்குப் பின் ஆளும் அதிமுக இரண்டாகிவிட்ட நிலையில், அடுத்து கட்சியின் லகான் யார் கையில் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகளால் ஒன்றாக இந்த இடைத்தேர்தல் மாற்றப்பட்டிருந்தது. விளைவாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஊடகர்கள் பெரும் அலைச்சலில் இருந்தார்கள். இனி ஒரு இடைவெளி விட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திரும்பவும் அலைய வேண்டும். தேர்தல் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், களத்தில் நிற்கும் ...

Read More »

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

Read More »

Indian drug smugglers, village youth gangs make Jaffna a crime-infested zone

A resident of Point Pedro, now living overseas, who was visiting his home town on holiday was approached by a local gang which demanded money so they could have a party with friends. The resident complained to police who then arrested the suspects despite resistance from the villagers, some of whom stoned the law enforcers.

Read More »

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் அழகர்கோவில் பப்பாளி: ஏக்கருக்கு ரூ. 5 ½ லட்சம் வருவாய்

மதுரை அழகர்கோவில் அருகே விவசாயி உற்பத்தி செய்யும் பப்பாளிப் பழங்கள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன்மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கருக்கு 5 ½ லட்சம் ரூபாய் அவர் லாபம் சம்பாதித்துவருகிறார்.

Read More »