கட்டுரைகள்

பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது எளிதல்ல. அவை நீண்ட காலத்துக்கு முடிவின்றி இழுபடுவதுண்டு. இது உலக அரசியலில், கூட்டிணைவிலிருந்து ஒரு நாடு பிரிந்து போகும்போதும் ...

Read More »

கும்பலாட்சி!

கிராஃபிக்ஸ்: ரெமோ ரீகன் ராஜ் பிரெஞ்சு தத்துவ மேதை சார்த்தர் இப்படிச் சொன்னார்: “பாசிஸம் என்பது அதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டல்ல, அவர்களை எந்த விதத்தில் அது கொல்கிறது என்பதை வைத்துத்தான் வரையறுக்கப்படுகிறது.” இந்தியாவின் பொதுவெளிகளைக் கும்பல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கும்பல் கொலை என்பது அரசியல் கருத்து வெளிப்பாடுகளின் மிகக் கொடூரமான வடிவம். சமீபத்திய சம்பவம், மதுராவுக்குச் செல்லும் ரயிலில் கடந்த 22-ம் தேதி நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரவிருந்த ரம்ஜானுக்கென்று புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹஃபீஸ் ஜுனைத் ...

Read More »

அவசியம் வாசியுங்கள்!

வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழந்தபோதே வடமாகண மக்களை பிரித்து அவர்களுகாகுள்ளே சண்டை மூட்டிவிடும் திட்டமும் வகுக்கப்பட்டுவிட்டது. ஆயுதபோராட்டத்தை உருவாக்கியவ்களே அதனை அழித்து முடிவுக்கு கொண்டுவந்தது போல் யாழ்மைய தமிழ் தேசிய அரசியலை உருவாக்கி உரம்போடாடு வளர்தாதவர்களே அதனை அழித்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர். இலங்கையை தமது பிடிக்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் யாழ் மைய தமிழ்தேசிய அரசியலையும் இதற்கு நிகர் எடையாக சிங்கள தேசியத்தையும் உருவாக்கினர். ஆனால் தமிழ் தேசியத்தை அபரிவிதமாக வளரச்செய்து தமிழ்-சிங்கள மக்களிடையே இனத்துவேசம், வெறுப்பு, குரோதம் ...

Read More »

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுடன் ‘துரோகிகள்’ இலங்கையில் சமாதானத்தை விரும்பவில்லை!

சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து “சிலோன் டுடே’ ...

Read More »

‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு……

தோழர் ‘ஜீவா’ எங்கள் குடும்பத்தின் இனியநட்பிற்குபாத்திரமானவர். எனது தந்தை யாழ்ப்பாணத்தில் வேலை செய்த காலங்களில் எனது தந்தையின் நண்பராக ஜீவா இருந்தார். அவரும் நயினாதீவினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததை எனது தந்தை கூறி அறிந்துள்ளேன். எனது சகோதரர் பரராஜசிங்கம் சுன்னாகம் ஸ்கந்தாவில் கல்விகற்ற வேளையில் கட்சித் தொடர்பு, ஜீவா தொடர்பு என விரிந்திருந்தது. அப்போது எனக்கு 15 வயதிருக்கும். ஜீவாவின் ‘தண்ணீரும், கண்ணீரும்’என்றநூலினை நயினாதீவில் விற்பனை செய்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினேன். அதுபோலவே அவரது ‘பாதுகை’ பலத்த வரவேற்பைப் பெற்றது. நான் கல்வி கற்ற மகாவித்தியாலயத்திலுள்ள வாசிகசாலையில் ...

Read More »

தமிழுக்கு சிவப்பென்றும் பேர்!

தமிழ்நாட்டின் மொழியுரிமைப் போராட்ட வரலாற்றில், ஜூன் 26, 2017-ல் நடக்கவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்புள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் நடத்தும் தமிழர் உரிமை மாநாடு ஒரு முக்கிய மைல்கல். இந்தித் திணிப்புக்கு எதிராகவும் கீழடி வரலாற்றுரிமையை நிலைநாட்டவும் என இரு கருத்துகளை மையமாகக் கொண்டு கூட்டப்படும் இந்த மாநாடு, உண்மையிலேயே மிகப் பொருத்தமான ஒரு காலகட்டத்தில் செய்யப்படும் மிகவும் தைரியமான ஓர் எதிர்வினை. மொழியுரிமை, மாநில உரிமை போன்றவற்றில் அலட்சியம் காட்டிவந்த அல்லது முரணான நிலைப்பாடுகளைக் கொண்ட ஒரு ...

Read More »

One year ago Jo Cox was tragically taken from us. Celebrate her life this weekend at your local event:

Read More »

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தமிழரசுகட்சிக்குள் நடக்கும் குடுமிப்பிடி சண்டை அவர்களின் உட்கட்சி விவகாரம்.

இதில் மற்றைய கட்சியினருக்கு என்னவேலை? ஒரு கட்சியின் ஊழல் / திருட்டு அரசியல்வாதிகளிடையே பதவிக்காக நடைபெறும் குழப்பங்களில் மக்களை ஏன் இழுத்துவிட பார்கின்றீர்கள்? உங்களுக்கு அறிவில்லையா? சில்லரைஅரசியலை மக்களிடம் ஏற்படுத்தாதீர்கள். மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டித நேரம் இது. நீங்கள் சமூகத்தை பற்றி சிந்திப்பவர் என்றால் வடமாகாண சபைக்குள் நடக்கும் கேலி கூத்துக்களுக்கும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு- எதிர்ப்பு என்கின்ற சில்லரை வேலையை விடுத்து இன்று வயிற்றுப்பிழைப்புக்காக போராடும் கிளிநொச்சி/ வன்னி மக்களை சென்று பாருங்கள். திருட்டு அரசியல்வாதிகளுக்கு கொடிபிடிக்கும் பழக்கத்தை கிளிநொச்சி / வன்னி ...

Read More »

“பிர­பா­க­ரனால் விதைக்­கப்­பட்ட சிந்­த­னைகள் குறு­கிய காலத்தில் மறைந்­து­வி­டு­மென நம்­பு­வது முட்­டாள்­தனம்”

வடக்கு, கிழக்கு பகு­தியில் பிர­பா­கரனின் காலத்தில் தற்­கொலை குண்­டு­தா­ரிகள் உரு­வாகும் வகை­யி­லான சிந்­த­னைகள் மக்­க­ளி­டத்தில் விதைக்­க­ப்பட்­டி­ருந்­தன. எனவே குறு­கிய காலத்தில் அந்த சிந்­த­னைகள் மறைந்­து­விடும் என்று கரு­தி செயற்­ப­டு­வ­தா­னது பார­தூ­ர­மான நிலை­மை­யாகும் என முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார். நியூயோர்க் நகரம் போன்று ஒருவ­ரி­டத்­தி­லி­ருந்து மற்­றைய இடத்­தி­லி­ருப்­ப­வர்­களை கண்­கா­ணிக்கும் பாது­காப்பு முறை­மை­களை பின்­பற்றி வந்­த­மை­யி­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தேசிய பாது­காப்பின் பிர­கா­ர­மான செயற்­பா­டு­க­ளாலும்  எமது காலத்தில்  பொது­மக்­களின்  வாழ்க்­கையில் எந்த வித நெருக்­க­டி­களும் ஏற்­ப­ட­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். சிங்­கள ...

Read More »

பிரிட்டன் தேர்தல் முடிவு ஏற்படுத்தியிருக்கும் குழப்பங்கள்!

ஜூன் 8-ல் நடந்த பிரிட்டன் பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரெக்ஸிட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களால் ஏற்கெனவே குழப்பத்தில் இருக்கும் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு. பிரிட்டன் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான தெரசா மேவுக்குத்தான் மிகப் பெரிய சிக்கல். தன் கரங்களை வலுப்படுத்த வேண்டி மக்களின் ஆதரவை எதிர்பார்த்து முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கோரியவர் அவர்தான். இன்றைக்கு ஆட்சியைத் தொடர, கூட்டணியை அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. கன்சர்வேட்டிவ் ...

Read More »