கட்டுரைகள்

ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்!

குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை. கடந்த வாரம், ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்குகொண்ட ...

Read More »

நடிகை கஸ்தூரியும், கொலெற்ரறல் டமேஜூம்!

எதுவோ ஒன்று தன் வாயால் கெட்டது போல சும்மா இருக்க மாட்டாமல் பிரபாகரனை பெண்ணியவாதி என்று சொல்லப் போய் நடிகை கஸ்தூரி தன்னை எல்லோரும் கழுவிக் கழுவி ஊத்திறாங்களாம், ஏன் கழுவிக் கழுவி ஊத்திறாங்கள்.  சர்வதேசத்தாலும் பயங்கரவாதி  என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனை பெண்ணியவாதி என்று சொல்லலாமா?  இலங்கைக்குச் சென்று நேரடியாகப் புலிகளைச் சந்தித்தவர்கள் கூட பிரபாகரனை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிடவில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல்வாதிகூட பிரபாகரனை ஒரு பெண்ணியவாதி என்று கூறவில்லை. மாறாக பிரபாகரன்மேல் சிறுவர்கள் பெண்களைப் பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்தது ...

Read More »

பொய் செய்திகளை கண்டறிய உதவும் சில கையடக்க கருவிகள்!

ஒரு அரசியல்வாதியோ பிரபலமானவரோ ஒரு தவறை செய்திருக்கிறார். அதனால் அவரை ஆதரிக்க வேண்டாம் என்று ஆதாரத்தை முன்வைக்காமல் உங்கள் வாட்சப் குழுக்களில் வரும் செய்திகளால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் படிக்கும் இணையக் கட்டுரையின் பக்கத்தில் தோன்றும், ஒரு மர்மமான பழத்தை உண்டால் புற்று நோய் நீங்கும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி உங்களை அப்பழத்தை உண்ண நிர்ப்பந்திக்கும் இணையதள பக்கங்களின் இணைப்பால் சலிப்படைந்துள்ளீர்களா? அல்லது நீங்கள் முன்னர் கேள்விப்பட்டிராத பதிப்பகம் ஒன்றில், சாத்தியமற்றதாகத் தோன்றும் உங்களால் நம்ப முடியாத செய்தி தலைப்பைக் கண்டு குழம்பியுள்ளீர்களா? இருக்கட்டும். நீங்கள் ...

Read More »

இந்தியா – சீனா: எல்லையில்லா எல்லைகள்!

எல்லைப்பிரச்சினைகள் எப்போதும் சிக்கலானவை. இரண்டு வீட்டாருக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளே தீராத பகையாகி தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கிறபோது, நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளின் தன்மைகளைச் சொல்லவேண்டியதில்லை. எல்லைப் பிரச்சினைக்கு எல்லையில்லை; அது எவ்வகையான வடிவத்தையும் தன்மையையும் எடுக்கவியலும். இதுதான் எல்லைகளின் எல்லையில்லாத தன்மை. நாடுகளுக்கிடையிலான எல்லை தொடர்பான சிக்கல் அதன் புவியியல் தன்மைகளுக்கும் மேலாக, அயலுறவுக் கொள்கை, தேசிய அரசியல், வரலாற்றைத் திரித்தல் போன்ற பல காரணங்களுக்காக தீர்ப்பதற்கு கடினமானதாகியுள்ளது. 1962 இல் நடந்து முடிந்த இந்திய-சீனப் போருக்குப் பின்னர், இந்திய-சீன எல்லைகள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து ...

Read More »

திசைமாறும் வடக்கு மாணவர்களின் செயற்பாடுகள்!

கல்வி வளர்ச்சி என்பது, பலதுறைகளில் அசுரவேகத்தில் முன்னேற்றம் அடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. தொழில்நுட்ப ரீதியிலானதும் விஞ்ஞான ரீதியிலுமானதுமாக வளர்ச்சியைக்காணும் உலகில், அதனை மேம்படுத்திச்செல்லும் கருவியாக, கற்றலும் கற்பித்தலும், காணப்படுகின்றது. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளே, இன்று பெருமளவில் பேசப்படும் விடயங்களாக மாறி வருகின்றன. குறிப்பாக, மேற்கத்தேய நாடுகளில், மாணவர்கள், ஆராச்சியில் ஈடுபடுவதன் பலனாக, பல்வேறான புதிய தொழில்நுட்ப விடயங்களை, உலகுக்கு அறிமுகம் செய்யும் செயற்பாடுகள், அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கையின் கல்வி நிலை, மேற்கத்தேய கல்விநிலையோடு, போட்டிப் போட்டு, ஆராய்ச்சி மாணவர்கள் என்ற ...

Read More »

இலங்கை தமிழ் தேசியவாத அரசியலின் தோல்வி!

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மீது, வடக்கு மாகாண சபையின் ஒரு பிரிவினர் கொண்டுவந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியலில் ஆழமான பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விக்னேஸ்வரன் கோரியிருந்தார். மேலும், இருவரைக் கட்டாய விடுப்பில் செல்லுமாறும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்துதான் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது. இதற்கிடையே தமிழ்த் தேசியவாதக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, விக்னேஸ்வரன் தொடர்ந்து பதவியில் நீடிக்க வழிவகுக்கப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர் ...

Read More »

என்னவொரு நடிப்புடா சாமீ!

நாங்கள் பகிரச் சொல்லிக் கேட்கும் அதிகாரங்கள் என்ன மாதிரியானவை என்பதைத் தெளிவுபடுத்தாமல், வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரே அலகுக்குள் சமஷ்டியே தீர்வு என்று தேர்தல் நேரத்தில் வெறுமனே அடித்து விடுவது, இரண்டு பக்கத்திலும் சூட்டைக் கிளப்பி விடத்தான் என்பது பலருக்கும் புரியும். கவனித்துப் பாருங்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பற்றிச் சிங்கள மக்களை உசுப்பேத்தும் விதமாக “இதுதாண்டா தேர்தல் சூடு” என்று அங்கே உள்ள தலைவர்கள் பட்டையைக் கிளப்புகிறார்கள். அதையெல்லாம் இங்கே தமிழ் மக்களுக்குத் திரும்பப் போட்டுக் காட்டி, “சமஷ்டி ...

Read More »

முதலமைச்சர் வீசிய குண்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆன சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர் கஜேந்திரகுமார் அணிக்கே சாதகமாகப் பேசி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் தொடர்பாக தன் நிலையை விளக்கி முதலமைச்சர் இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் – வட மாகாண முதலமைச்சர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்பதாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தான் இந்த நாடாளுமன்றப் பொதுத் ...

Read More »

அவதூறு பொழியும் அரசியல்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அலை ஒன்று ஏற்படுவது போன்ற மாயை ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இப்படி தமிழ் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கூட்டமைப்புக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கும் நிலை எதனால் ஏற்பட்டது?” இப்படியொரு தூண்டில் கேள்வியை தமிழரசுக் கட்சிப் பத்திரிகை தமிழரசுக் கட்சித் தலைவரிடம் வீசி, தங்களது கட்சிக்கெதிரான அலையை ஆராய்ந்து மக்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறது. முதலில் தெரிவது, இம்முறை தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான அலை எழுந்திருப்பதைக் கூட்டமைப்பு தெரிந்து கொண்டிருக்கிறது என்பதும், அதுகுறித்து வெகுவாகப் பதற்றமுற்றிருக்கிறார்கள் என்பதுமாகும். அதற்கான நீண்ட ...

Read More »

குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்!

இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றன. இனம்காணப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி ...

Read More »