கட்டுரைகள்

Singapore’s Lee Kuan Yew advised Pres. JRJ not to start fly srilankan . He insisted it was necessary.

Read More »

இறுதி நடையும் இறுதிப் பயணமும் : ஏ.ஆர்.எம்.மன்சூர் பற்றிய ஒரு நினைவுக்கு குறிப்பு !

“எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்ட முடியாமல் போகலாம் எனக்கு முன்னே நடக்காதே நான் உன்னை பின்பற்ற முடியாமல் போகலாம்  என்னுடனே நட , எனது நண்பனாக  இரு” ( ஆல்பர்ட் கேமஸ் )   25 ஜூலை 2017 இல் மறைந்த முன்னாள் அமைச்சரான ஏ ஆர்.எம். மன்சூரின் அரசியல் பதவி நிலை பற்றியும்  , அவரின் மக்கள் பணி பற்றியும் பலர் , அவரின் மரணத்தையொட்டி  இன்று சிலாகித்துக்  கூறுவதையும் ,பாராட்டி  எழுதுவதையும்  கேட்க , பார்க்க  கூடியதாக உள்ளது. அந்த வகையில் ...

Read More »

கைபேசி.. ஒரு கையடக்க ஆபத்து!

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம் இன்றைய இளைஞர்களின் சக்தி ஆச்சர்யமூட்டுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அரபு வசந்தம் தொடங்கி மெரினா புரட்சி வரை உதாரணங்களைச் சொல்லலாம். அதேசமயம் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. ஆம், கைபேசி மூலம் சமூக ஊடகங்களை கையாளும் இளைஞர்களில் கணிசமானோர் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றே தெரிகிறது. அறிவியலின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்களில் ஆண்ட்ராய்டு அலைபேசிகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சொல்லப்போனால், கைபேசி இல்லாத ...

Read More »

குற்றத்தைக் கண்டும் காணாமல் இருப்பது பாவத்துக்கு நிகர்!

நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின் நடுப்பகுதியில் இந்த எண்ணக்கருவின் உள்ளடக்கத்தை விருத்தி செய்தது. ஐ.நா சபை 1992ஆம் ஆண்டு வெளியிட்ட, ‘ஆட்சியும் அபிவிருத்தியும்’ எனும் ஆவணத்தில் இந்த எண்ணக்கரு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது. நல்லாட்சி என்பதன் பொருள், ஊழல்களையும் ...

Read More »

தாராளமயமாதலும் வணிக, அரசியல் அதிகார கூட்டு முதலாளித்துவமும்!

சிவப்பு குறிப்புகள் 2018     ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் ஒதுக்கீடுகளும் நடந்து கொண்டுள்ளன. பிரதமர் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்டத்துடன் அடுத்த சுற்றுத் தாராளமயமாதல் நடக்கும் என்று கூறுகின்றார். பணக்காரர்களுக்கு சாதகமான, தனியார் மயமாதலுக்கான உந்துதலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு, அரசாங்கம் பொல்லடி, தண்ணீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகை, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பதில் அளித்து வருகின்றது. அரச சொத்துகளைக் கொள்ளையடிப்பதாக அரசாங்கமும் கூட்டு எதிரணியும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கையில், விவாதங்களில் ஊழல் ...

Read More »

தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம், திங்கட்கிழமை விலகியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று, நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் அனுமதியில்லாமலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அனந்தியைத் தமது கட்சி சார்பு அமைச்சராகத் தமிழரசுக் கட்சி கருதவில்லை. அதைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சரிடம் ...

Read More »

நிதானமாக யோசித்துப் பார்த்தால்…

ஒரு விஷயம் பரபரப்பாக தோன்றுவதும் பின்னர் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்பதும் மிகவும் தாமதமாகவே நமக்குத் தோன்றிவிடுகிறது. உதாரணமாக பிக்பாஸ். பொழுதுபோக்கு ஊடகத்தைப் பொறுத்தவரை ஒரு டிவி நிகழ்ச்சியின் வெற்றி உறுதி என்பது அது ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே பலவகையில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட வேண்டும். ”நம் எல்லோருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. உங்களைச் சுற்றி 64 கேமராக்கள்…. நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி… வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், பொது இடத்தில் ஒரு ...

Read More »

‘ஓவியா’க்களின் பலம் என்பது.. பிக்பாஸை முன்வைத்து காதலெனும் சிந்தனைவெளி !

ஒரு பெண்ணை ‘போடி, போடீ’ என்றும், ஆணை ‘போடா!’ என்றும் வெகு இயல்பாக திட்டி கோபம் காட்டிய பெண்ணை ஒட்டு மொத்தமாய் நேசித்திருக்கிறார்கள். அந்தப் பெண் அப்படியொரு கோபத்தை வெளிப்படுத்த காரணமான பெண்ணை வெறுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை நேசிக்கப்பட்டவர் வெளியேறியதும், வெறுக்கப்பட்டவரும் வெளியேற்றப்பட்டதும்தான். ஓவியாவின் வெளியேற்றத்தில் சமூக நீதியும், உண்மையும், சமூகத்தின் வக்கிரப் போர்வையும் படிந்தே இருக்கிறது. இதில் ‘பிக்பாஸ் ஓவியா’ என்பது வெறும் குறியீடாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. அதை பற்றிய அழுத்தமான பதிவாக இந்த கட்டுரையை கொள்ளலாம் என்றாலும் கூட அதற்கு முன்னர் ...

Read More »

இனிமேல் போலிச் செய்திகளின் காலம்தானா?

இ து ஃபோட்டோஷாப் யுகம், புகைப்பட வடிகட்டிகளின் யுகம், சமூக ஊடகங்களின் யுகம். முறைதவறி மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களுக்கு நம்மில் பெரும்பாலானோர் பழகிவிட்டிருக்கிறோம்- புகைப்படத்தில் இருப்பவர்கள் உண்மையில் இருப்பதைவிட மேலும் மெலிதாகவோ, நளினமாகவோ காணப்படுவார்கள்; அல்லது ஸ்னாப்சாட்டில் வருவதுபோல் நாய்க்குட்டிகள்போல் தோற்றமளிப்பார்கள். இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி, ஒலியையும் காட்சியையும் திருத்தியமைப்பதற்கான புதிய வகை தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்திலும் கணினி வரைகலையிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன. பிரபலங்களின் காணொலிக் காட்சிகளை இந்தத் தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தி அவர்கள் பேசாததையும் பேசும்படிக் காட்ட முடியும். நீர்விளையாட்டுகள்மீது ...

Read More »

அச்சம் !

அரசியல் எதிராளிகளுக்கு, ஆட்சியாளர்கள் நிறையவே பயப்படுகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.   தேர்தல் களமொன்றில், எதிரணியினரைச் சந்திப்பதற்கு, ஆட்சியாளர்கள் கடுமையாக அச்சப்படுகின்றனர். அதனால்தான், ஒக்டோபர் மாதம் பதவிக் காலம் நிறைவடையும் மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் இரண்டு வருடங்களுக்குத் தள்ளிப் போடுவதற்கான தந்திர வேலைகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, உள்ளூராட்சித் தேர்தல்களையும் நடத்தாமல், நாட்களைக் கடத்தி வருகின்றனர். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலங்கள், ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடைகின்றன. இரண்டாம் திகதி, தேர்தல் குறித்து அறிவிப்புச் செய்வதற்கான ...

Read More »