Author Archives: Editor

மீண்டும் கேட்கிறார் சுரேஷ்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் என்று அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். இந்த நாட்டின் பிரதமர் பதவியையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று முழங்கவும் அவருக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அத்தனை ஆசனங்களையும் வென்றால் தாங்கள் செய்யக்கூடியது என்ன என்று அவர் விளக்குவதுதான் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலின் ஊடாக கிடைக்கும் ஆதரவு மூலம் தமிழ் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதார நலன் சார்ந்து உள்நாட்டிலும் ...

Read More »

புலிகளை விற்கத் தடை வந்தது!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிகளைத் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதை மேலும் விளக்கி, முன்னாள் விடுதலைப் புலிகளின் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல, முன்னாள் விடுதலைப் புலிகளும் தற்போது ஜனநாயகப் போராளிகள் கட்சியாகவும் பரிணமித்திருப்பவர்களுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை பற்றிய அவரது அலட்சியத்தில், ஏக சக்ராதிபத்தியத் தலைமையாகத் தம்மைக் கருதிக் கொள்ளுவதின் அகங்காரம் வெளிப்பட்டு விடுகிறது. தேர்தலில் போட்டியிட வேண்டுமென தங்களை சந்தித்த ...

Read More »

முடியாது என்றால் முடியாதுதான்!

நமது மக்களின் துன்பங்கள் தொடர்வதற்கும், பிரச்சினை தீராமலிருப்பதற்கும் நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். சிலர் அப்போதைக்கிருக்கும் அரசாங்கம்தான் காரணம் என்று சொல்லக் கூடும். இன்னும் சிலர் இந்த நாட்டில் இதுவரை இருந்த, இனி வரப்போகும் எல்லா அரசாங்கங்களுமே காரணமென்னக் கூடும். வேறு சிலர் இந்தியாவையும் அதேபோல் அமெரிக்காவை, சீனாவை, ரஷ்யாவை, முழு சர்வதேசத்தையும் விரல் நீட்டக் கூடும். மேலும் பலர் இந்த எல்லாமே காரணங்கள்தான் என்று விளக்கம் வைத்திருக்கக் கூடும். யார் கண்டது, சோதிடத்தை, கிரக பலன்களைக் காரணமாய்ச் சொல்லக் கூடியவர்களும் ...

Read More »

கூட்டமைப்பின் ‘கோமாளி’ முகங்கள்!

தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்கள் எல்லாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குகளைப் போட வேண்டும் என்று கேட்கிறார்கள் கூட்டமைப்பினர். கூட்டமைப்பின் தமிழ்த் தேசியம் என்ன மாதிரியானது என்ன குணவிசேசங்களைக் கொண்டது என்று யாருக்காவது விளங்கப்படுத்திச் சொல்ல முடியுமா? கூட்டமைப்பிலுள்ள யாருடைய தமிழ்த் தேசியத்தை கூட்டமைப்பின் தமிழ்த் தேசியமாய் கருதுவது? “மைத்திரி – ரணிலுடன் கதைத்துத் தீர்வை எடுக்கப்போகிறோம்” என்கிற நல்லிணக்க அரசியலின் பாதைதான் இன்று தமிழ்த் தேசியத்தின் பாதை என்பதாக அடையாளப்படுத்துகிறார்கள் சம்பந்தனும் சுமந்திரனும்.

Read More »

பாகிஸ்தான் குழந்தைக்கு 4 மாத மருத்துவ விசா வழங்கியது இந்தியா

பாகிஸ்தானைச் சேர்ந்த பச்சிளம் குழந்தைக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, இந்திய அரசு அந்த குழந்தைக்கு 4 மாத மருத்துவ விசா வழங்கியுள்ளது.  . பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமானோர் மருத்துவ விசாவில் வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 500 நோயாளிகள் வரை பாகிஸ்தானில் இருந்து வருவதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. இவர்களில் பெரும்பாலான நோயாளிகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக வருகின்றனர். இதற்காக ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மருத்துவ செலவு ஆகிறது. ஆனால், தற்போது இரு ...

Read More »

தமிழ் நாட்டு அரசியல் வாதிகளே, :- தமிழச்சி

தமிழ் நாட்டு உறவுகளே நீங்கள் எங்கள் தொப்புள் கொடி உறவாக இருந்ததால் ,இலங்கை தமிழர்கள் ஒரு அருணாக்கொடி கூட இல்லாமல் இறந்து போனார்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் நீங்கள் தொப்புள் கொடி உறவாகஇருந்தால் மட்டும் போதும். இலங்கையில் ஈழம் புடுங்கி கொடுக்கிறோம் என்று கூறி மேலும் தமிழர்களை படுகுழியில் தள்ளவேண்டாம், உங்களுக்கு ஈழம் வேண்டுமென்றால் 7 கோடி தமிழர்கள் உள்ள தமிழ்நாட்டில் , சீமானை வைத்து ஈழத்தை பெற்றுக்கொள்ளவும். கூலிக்காக ராஜீவகாந்தியை கொலைசெய்து தன் போராளிகளை, தமிழர்களின் இலச்சியமான, ஈழம் என்ற கனவை ...

Read More »

துருக்கியில் ஹெலிகொப்டர் விபத்து .இராணுவத்தினர் பலி

துருக்கி – ஈராக் எல்லையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள்  13 பேர் பலியானதாக துருக்கி ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து:  7 வீரர்கள் பலியானதாக தகவல் துருக்கியின் வடகிழக்கு பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மின்வயர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானதில், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள்  13 பேர் உயிரிழந்ததாக துருக்கி ராணுவம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி – ஈராக் எல்லையில் உள்ள ஸ்ரீநாக் மாகாண ...

Read More »

காபூலில் நாங்கள் குண்டு வைக்கவில்லை- பாகிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய லாரியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஹக்கானி தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹக்கானி குழுவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக ...

Read More »

அப்துல் ரகுமான் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்

உடல்நலக்குறைவால் நேற்று காலமான கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு ரஜினிகாந்த், கமல் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், வைகோ ...

Read More »

கருணாநிதிக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய முகவரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அந்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி இருப்பதாவது:- உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை நான் தெரிவிக்கிறேன். மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார். மேலும் கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

Read More »