Author Archives: Editor

குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்!

இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றன. இனம்காணப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி ...

Read More »

பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது எளிதல்ல. அவை நீண்ட காலத்துக்கு முடிவின்றி இழுபடுவதுண்டு. இது உலக அரசியலில், கூட்டிணைவிலிருந்து ஒரு நாடு பிரிந்து போகும்போதும் ...

Read More »

கும்பலாட்சி!

கிராஃபிக்ஸ்: ரெமோ ரீகன் ராஜ் பிரெஞ்சு தத்துவ மேதை சார்த்தர் இப்படிச் சொன்னார்: “பாசிஸம் என்பது அதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டல்ல, அவர்களை எந்த விதத்தில் அது கொல்கிறது என்பதை வைத்துத்தான் வரையறுக்கப்படுகிறது.” இந்தியாவின் பொதுவெளிகளைக் கும்பல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கும்பல் கொலை என்பது அரசியல் கருத்து வெளிப்பாடுகளின் மிகக் கொடூரமான வடிவம். சமீபத்திய சம்பவம், மதுராவுக்குச் செல்லும் ரயிலில் கடந்த 22-ம் தேதி நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரவிருந்த ரம்ஜானுக்கென்று புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹஃபீஸ் ஜுனைத் ...

Read More »

மகளிர் உலகக்கோப்பை: 257 ரன்களில் 178 நாட் அவுட்; இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி சாதனை!

178 ரன்கள் விளாசிய இலங்கை வீராங்கனை அட்டப்பட்டு ஜெயங்கனி. | படம்.| ராய்ட்டர்ஸ். பிரிஸ்டலில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 257 ரன்களைக் குவித்துள்ளது. இதில் 3-ம் நிலையில் களமிறங்கிய அட்டப்பட்டு சமாரி ஜெயங்கனி என்ற இடது கை விராங்கனை தனியாகப் போராடி, 178 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார், இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் 3-வது அதிகபட்ச தனிநபர் ரன் எண்ணிக்கையாகும். மேலும் அணி எடுத்த 257 ரன்களில் 178 ...

Read More »

அவசியம் வாசியுங்கள்!

வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழந்தபோதே வடமாகண மக்களை பிரித்து அவர்களுகாகுள்ளே சண்டை மூட்டிவிடும் திட்டமும் வகுக்கப்பட்டுவிட்டது. ஆயுதபோராட்டத்தை உருவாக்கியவ்களே அதனை அழித்து முடிவுக்கு கொண்டுவந்தது போல் யாழ்மைய தமிழ் தேசிய அரசியலை உருவாக்கி உரம்போடாடு வளர்தாதவர்களே அதனை அழித்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர். இலங்கையை தமது பிடிக்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் யாழ் மைய தமிழ்தேசிய அரசியலையும் இதற்கு நிகர் எடையாக சிங்கள தேசியத்தையும் உருவாக்கினர். ஆனால் தமிழ் தேசியத்தை அபரிவிதமாக வளரச்செய்து தமிழ்-சிங்கள மக்களிடையே இனத்துவேசம், வெறுப்பு, குரோதம் ...

Read More »

கைலாஷ் மானசரோவரில் நுழைய இந்தியர்களுக்கு சீனா தடை: இந்திய ராணுவம் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டு!

நாது லா வழியாக கைலாஷ் செல்லும் வழி. | கோப்புப் படம்.| பிடிஐ. கைலாஷ் மானசரோவருக்குள் இந்தியர்கள் நுழைவதை தடை செய்திருப்பதை சீனா உறுதி செய்துள்ளது. மேலும் சிக்கிம் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி எல்லையைக் கடக்கின்றனர் என்று இந்தியாவிடம் தன் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் கூறும்போது, “இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் சீனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். எனவே அவரை உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார். ...

Read More »

தமிழ் தேசியம் என்னும் சொர்ப்பண சுந்தரி..

1950களில் பிரித்தானிய உளவுதுறையால் பிரசவித்து 1980களில் இந்திய உளவுதுறைக்கு தத்துக்கொடுக்கப்பட்டு 2010களில் சிங்களவருக்கு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய சொர்பண சுந்தரியை தற்போது வைத்திருப்பது இலங்கை உளவுத்துறையினர். தமிழக ஈழவியாபாரிகள். அதனை பராமரிக்க புலம்பெயர் தமிழர்கள் பணம் கொடுக்கின்றனர். Rajh Selvapathi

Read More »

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுடன் ‘துரோகிகள்’ இலங்கையில் சமாதானத்தை விரும்பவில்லை!

சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து “சிலோன் டுடே’ ...

Read More »

‘மல்லிகை’ஆசிரியர் டொமினிக் ஜீவாஅவர்களின் 90 வது (27-06-2017) பிறந்ததின வைபவங்களை முன்னிட்டு……

தோழர் ‘ஜீவா’ எங்கள் குடும்பத்தின் இனியநட்பிற்குபாத்திரமானவர். எனது தந்தை யாழ்ப்பாணத்தில் வேலை செய்த காலங்களில் எனது தந்தையின் நண்பராக ஜீவா இருந்தார். அவரும் நயினாதீவினைப் பூர்வீகமாகக் கொண்டிருந்ததை எனது தந்தை கூறி அறிந்துள்ளேன். எனது சகோதரர் பரராஜசிங்கம் சுன்னாகம் ஸ்கந்தாவில் கல்விகற்ற வேளையில் கட்சித் தொடர்பு, ஜீவா தொடர்பு என விரிந்திருந்தது. அப்போது எனக்கு 15 வயதிருக்கும். ஜீவாவின் ‘தண்ணீரும், கண்ணீரும்’என்றநூலினை நயினாதீவில் விற்பனை செய்து அவரை மகிழ்ச்சிப்படுத்தினேன். அதுபோலவே அவரது ‘பாதுகை’ பலத்த வரவேற்பைப் பெற்றது. நான் கல்வி கற்ற மகாவித்தியாலயத்திலுள்ள வாசிகசாலையில் ...

Read More »

நயினாதீவு திருவிழாவை முன்னிட்டு கடற்பிரயாண பாதுகாப்பு ஏற்பாடு!

நயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து ஆலயத்துக்கு வரும் பக்த அடியார்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இச்சேவை வருடாவருடம் ஒழுங்கு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் பொருட்டு அனலைதீவு-நயினாதீவு பக்த அடியார்களுக்கும்,  குறிகட்டுவான் – நயினாதீவு ...

Read More »