Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)

அன்று இரவு எனது கஜபா ரெஜிமெண்டை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் சார்பிலும் மிக முக்கியனான கடமை ஒன்றை செய்தேன். கஜபா ரெஜிமெண்டை உருவாக்கியவரும், இராணுவத்துக்கு மிகபெரிய பங்களிப்பு செய்தவரும் ஆனால் துரதிரதிஸ்டவசமாக இன்று இந்த வெற்றியின் இனிமையை அனுபவிக்க இயலாதவாறு உயிருடனேயே இல்லாமல் போன மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ணவின் பாரியாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினேன். “ மேடம் எங்களுடைய கடமையை செய்ய்துவிட்டோம். எங்களுடைய மகா ஜெனரலின் கொலைக்கு பலிவாங்கிவிட்டோம். நாம் அவரின் புதல்வர்கள். இதோ இன்று நாம் பிரபாகரனை கொன்றுவிட்டோம்” அதிகமாக உணர்ச்சிவசப்பட்டவராக “ கமால் விஜயா உங்கள் அனைவரையும் தனது புதல்வர்களாகவே கருதினார். அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் உங்கள் வெற்றியை பார்த்து ஆனந்தப்பட்டிருப்பார்.” என கூறிய அவர் எங்கள் அனைவரையும் இதயபூர்வமாக வாழ்த்தினார்.
அடுத்த சில நாட்களுக்கு பல நாடுகளில் இருந்தும் உலக முழுவதும் பரந்து வாழும் இலங்கையர்களிடம் இருந்தும் வாழ்த்துக்களை கொண்டுவந்த தொலைபேசி அழைப்புகள் சுற்றி சுழன்றுகொண்டிருந்தது. படையினருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வுகளும் நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்டு நடை பெற்றுக்கொண்டிருந்தது. போர் முடிந்து ஒருவாரத்தின் பின் நான் வீட்டுக்கு சென்றிருந்தேன். எனது மனைவி, மகள், சகோதரகள், அவர்களுடைய குடும்பத்தினர் என அனைவரும் எனக்கு எழுச்சிமிக்க பிரமாண்ட வரவேற்பளித்தனர். அடுத்தநாள் எனது ஊரான பன்னிபிட்டிய மக்கள் அதிகளவில் திரண்டு எனக்கு பாராட்டு விழாவே எடுத்தனர். நான் பிறந்த இந்த கிராமத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திரண்டு வந்திருந்தனர். பல தசாப்தங்களுக்கு முன் இந்த கிராமத்தில் பொடியனாக ( சிறு பையன்) சுற்றி திருந்திருக்கின்றேன். இந்த பெருமைக்குரிய விழாவை என்னைவிட எனது பெற்றோருக்கான உச்ச மரியாதையாகவே நான் கருதுகின்றேன். இறுதியாக ஒரு சில வார்த்தைகள் பேசுமாறு அழைக்கப்பட்டேன். என் மீது கடவுளின் ஆசீர்வாதத்தினால் கிடைத்த மூன்று வெகுமதிகளை பற்றி இப்படி பேசினேன்.
“ முப்பது வருடகால போரின் கடைசி கட்டமான ஈழப்போர் IVல் கடவுள் எனக்கு மூன்று பரிசில்களை கடவுள் தந்து ஆசீர்வதித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் அதிக சக்திவாய்ந்த தாக்குதல் படைபிரிவினரான உயர்நிலை படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டது எனது முதலாவது பரிசாகும்.
அதி உச்ச அர்பணிப்புடன் தங்கள் தாய் நாட்டுக்காக அதிகளவில் பங்களிப்பு செய்த துணிச்சல் மிக்க அதிகாரிகளையும் படையினரையும் கொண்ட வெல்லும் படைபிரிவை வழி நடத்த கிடைத்தது எனது இரண்டாவது பரிசாகும்.
வேறு பல படைபிரிவுகள் அந்த பகுதியில் இருந்தும், இந்த இறுதி போரின் கடைசி கட்டத்தில் பிரபாகரனும் அவருடைய மூத்த சகாக்களும் எனது படைபிரிவுடன் மோதலில் ஈடுபட நேர்ந்தது எனது கடவுள் எனக்கு கொடுத்த மூன்றாவது பரிசு என நான் கருதுகின்றேன்.”
ஒலித்து ஓய்வதற்கு நீண்ட நேரம் எடுத்த கைத்தட்டல்களுடன் எனது ஒவ்வொரு வசனமும் வரவேற்கப்பட்டு கொண்டிருந்தது. ஒவ்வொரு விழாவிலும் என்னை பாராட்டி டோக்கன்களை கொடுத்தது கொண்டே இருந்தார்கள். எனது மகள் கல்வி க.பொ.த சா/த கற்கும் விசாக வித்தியாலயத்தில் அவருடைய வகுப்பு சகபாடிகள் காலை வணக்க நிகழ்வில் அவளை மேடைக்கு அழைத்து எனக்கு கொடுக்குமாறு வழங்கிய அந்த அழகான ஞாபக சின்னத்தையே நான் அவற்றுள் மிகவும் கௌரவமான ஒன்றாக கருதுகின்றேன். இன்றும்கூட அதை நான் வைத்திருக்கின்றேன்.
முப்பது நீண்ட நெடிய வருடங்களாக எமது நாட்டை பாதித்துக்கொண்டிருந்த பயங்கரவாத அச்சுருத்தல் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. ” இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான இரக்கமற்ற மனிதன்” என நான் அழைக்கும், எங்கள் நிலத்தை இருளடையச்செய்த பயங்கரவாதி வேலுப்பிள்ளை பிரபாகரன் இனிமேல் உயிர்வாழ்பவர்கள் மத்தியில் இல்லை. உச்சகட்ட பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தினர் எல்லோரும் தங்களுக்கு நெருக்கமானவர்களும் அன்பானவர்களும் இனிமேல் தங்கள் வீடுகளுக்கு ஒவ்வொரு நாளும் வருவதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். அச்சத்தில் இருந்து இன்று அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். திகதி குறிப்பிடாத மரண சான்றிதளை கைகளில் வைத்துக்கொண்டு போராடிய படையினர் எல்லோரும் இனிமே தங்கள் காலம் வரும் முன்பே மரணித்துவிட மாட்டார்கள். அங்கவீனமுற்றவர்களாகவோ, படுத்த படுக்கையாகவோ தங்கள் மிகுதி காலத்தை கழிக்க வேண்டி இருக்குமோ என எண்ணி இருந்த படையில் சேர்ந்த 18-20 வயது இளைஞர்களுக்கு இனி அப்படியொரு பயம் இல்லை. தங்கள் பெற்ரோர்களையும் , மனைவிமார்களையும், குழந்தைகளையும் ஒரு நாள் வீடு திரும்பி வரமாட்டார்களா என ஏக்கத்துடன் தவிக்க விட்டு இனிமேல் எந்த ஒரு படையினரும் காணாமல் போகமாட்டார்கள். ஆயிரக்கணக்கான பெற்றோர்களையும், மனைவிகளையும், குழந்தைகளையும் எங்கே தங்கள் அன்பானவன் சவபெட்டியில் வீடு திரும்புவதை பார்க்க வேண்டி இருக்குமோ என விரட்டிக்கொண்டிருந்த பயம், அதனால் அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டுமே என்ற பிரயாசையுடன் கோயில் குளங்கள் என நடந்து திரிந்த நிலை இறுதியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி, ஏனைய தேசிய தலைவர்கள் இனிமேல் சிறைவாசிகள் போன்று தங்கமுலாம் பூசப்பட்ட கூடுகளுக்குள் வாழத்தேவையில்லை. நாடு இப்போது அமைதியாகிவிட்டது, தேசம் விடுதலையடந்துவிட்டது.
இந்த இறுதி போருக்கு தலைமைதாங்கிய மூத்த அதிகாரிகள் பலரும் என்னுடைய பாடசாலையாகிய கொழும்பு ஆனந்தா கல்லூரியை சேர்ந்தவர்களே. கோத்தாபாய ராஜபச, சரத பொன்சேகா, வசந்த கருணாகொட, சரத் வீரசேகர,ஜெகத் டயஸ், பிரசன்ன டி சில்வா, சாகி கலகே ஆகியோரும் இந்த பெருமைக்குரிய கல்விசாலையில் இருந்து வெளியேறிய பெரும் படையதிகாரிகள் வரிசையில் வீற்றிருக்கின்ரனர். இவர்களில் ஒருவனாக நானும் இருக்கின்ரேன். எங்களுடைய கல்விதாய் இந்த தாய்நாட்டுக்காக சேவையாற்றிய தனது புதல்வர்களை பாராட்ட விழா எடுத்திருந்தாள். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். புலிகளுக்கு எதிரான முதலாவது இராணுவ நடவடிக்கையை திருநெல்வேலியில் மேற்கொண்ட லெப்டினன் வாஸ் குணவர்த்தன துரதிஸ்டவசமாக இறந்து விட்டார். 53 வது படையணியின் தளபதி என்கின்ற வகையில் முள்ளிவாய்க்காலில் இறுதி தாக்குதலை நான் நடாத்தியிருந்தேன். இந்த இருதாக்குதல்களிலுமே பிரபாகரன் பங்கெடுத்திருந்தார். அந்த முதலாவது தாக்குதலுக்கு தலைமை தாங்கிய லெப்டினன் வாஸ் குணவர்தனவும் கடைசி தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நானும் ஆனந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் கல்விகற்ற மிக நெருங்கிய நண்பர்கள். ஆனந்தா கல்லூரியின் ஊடக பிரிவு மாணவர்கள் இந்த அற்புதமான தொடர்பை குறிப்பிட்டு சொன்னபோது நானடைந்த பெருமையை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அதன் பின் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபச கூட இதனை குறிப்பிட தவறவில்லை.
1983ல் முதலாவது தாகுதலை திருநெல்வேலியில் வழிநடத்தியதும் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவனே. அதே போன்று 2009ல் முடிவுக்கு வந்த கொடிய போரில் இறுதியான தாக்குதலை வழிநடத்தியதும் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவன்தான்.
இதனை நான் கேட்டபோது நான் எனது கல்விதாய்க்கு எனது கடனை முழுமையாக செலுத்திவிட்டதாக்வே நினைத்தேன்.
போர் முடிவுக்கு வந்து சில வருடங்கள் உருண்டோடிவிட்டன. நாளாந்த குண்டுவெடிப்புகள், துப்பாக்கி சூடுகள், எறிகணை வீச்சுக்கள், தற்கொலைதாரிகளின் தாக்குதல்கள், தற்கொலை வாகனங்கள், தற்கொலை படகுகள், சிறுவர் போராளிகள் இப்படி எத்தனையெத்தனையோ விடயங்கள் 19 மே 2009 பின் எமது தாய்நாட்டில் கேடகவில்லை. அன்றிலிருந்து ஒற்றை பயங்கரவாத தாக்குதல்கூட இன்றுவரை நடைபெறவில்லை.
இலங்கையில் ஆக்கபூர்வமான சமாதானத்தை எட்டுவதற்காக மூன்று தசாப்தங்களாகவே அளவுக்கு அதிகமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுவிட்டன. கடுமையாக போராடி வெற்றிகொள்ளப்பட்ட இந்த சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது எமது தலைவர்கள், நாட்டுமக்கள், எதிர்கால சந்ததி ஆகியோரின் கடமையாகும். மாணியமாக கிடைத்ததாக எண்ணி யாரும் இதனை வீணடித்துவிடக்கூடாது என்பதே எனது வினையமான பிராந்த்தனையும் நம்பிக்கையுமாகும்.
உச்சகட்ட அர்பணிப்புடன் ஓய்வின்றி உழைத்து எமது தேசத்துக்காக நிலையான சமாதானத்தை கொண்டுவந்தவர்களுக்காக பேராசிரியர் சுனில் ஆரியரட்ன அவர்களால் எழுதப்பட்ட இந்த தேசபகதி பாடலின் முதல் சரணத்தை எமது வாழ்நாளில் அர்ப்பணிப்போம்.
”இறுதி மூச்சை அச்சமின்றி விட்டிடவும்,
அமைதியான மனதுடன் சாந்தியடைந்தியடைவதற்காக
ஒரு மனிதனாக எனது கடமைகளை செய்வதால்
தெளிந்த மனசாட்சியோடு மரணத்தை எதிர்நோக்குவேன்”
( முற்றும்)
நண்பர்களே இந்த நூலின்வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் என்னும் இறுதி அத்தியாயத்தை சுவாரஸ்யம் கருதி இடையில் இருந்தே மொழிபெயர்ப்பு செய்தேன், அது இப்போது முடிவடைந்து விட்டது. ஈழப்போர் VIல் இறுதியான சமர் நாட்களில் என்ன நடந்தது என அறிய ஆவல் கொண்டோருக்கு விடை கிடைக்கலாம் என இந்த இராணுவ அதிகாரி எழுதிய இந்த புத்தகத்தின் மிக முக்கியமான இந்த அத்தியாயத்தை மொழிபெயர்த்தேன். இங்கே அந்த இராணுவ அதிகாரி எப்படியான உணர்ச்சி மிக்க மனநிலையில் தனது கருத்தை வெளிப்படுத்தினாரோ அதே மனநிலையை அப்ப்படியே மொழிபெயர்ப்பிலும் வெளிக்கொண்டுவந்திருந்தேன்.
இந்த வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் என்கின்ற கடைசி அத்தியாயத்தின் முதல் சில பந்திகளையும், ஏனைய அத்தியாயங்களையும் மொழிபெயர்ப்பு செய்வதா அல்லது வேண்டாமா என நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
Bye!
இதன் முந்தைய பகுதியை வாசிக்க இந்த இணைப்புக்கு செல்லுங்கள்.

Road to Nandikadalஅத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும்…

Opslået af Rajh Selvapathi på 22. marts 2018

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது ...