Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (9)

800×800 சதுர மீற்றர் நிலப்பரப்புக்குள் மூன்றுபக்கமும் இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலையில் தப்பிப்பதற்காக மூர்க்கத்தனமாக முயன்று கொண்டிருந்த பயங்கரவாதிகளின் கடைசி மணித்துளிகளை மீட்டி பார்ப்பது முக்கியமானது என நான் நம்புகின்றேன். முன்பே கூறியது போல் மே 17 விடிகாலை பொழுதில் நந்திகடல் நீரேரியின் மேற்கு கரையோரத்தில் இருந்த முன்னரங்க நிலைகள் மீதுகடற்புலிகளின் 06 தற்கொலை படகுகளின் உதவியுடன் அவர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் முல்லைத்தீவு காடுகளுக்குள் அவர்களால் சென்றிருக்க முடியும். அங்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவு, வெடிபொருட்கள், ஆயுதங்களின் துணையுடன் பல மாதங்கள் தாக்குபிடித்திருக்க முடியும். போரும் தொடர்ந்து கொண்டிருக்கும். எப்படியிருந்தாலும் தைரியமும் தளம்பல் இல்லா போராடும் உத்வேகத்தையும் கொண்ட எமது படையினர் அவர்களின் முயற்சியை நாசமாக்கிவிட்டனர். ஆகையால் அவர்கள் வேறு ஒரு திட்டடம் போட வேண்டி இருந்தது.
அந்த சதுர நிலப்பரப்புக்குள் அடுத்த நாள் வரை அகப்பட்டிருதால் அவர்களின் முடிவை நெருங்குவாரகள் என்பது தெள்ளத்தெளிவாகவே இருந்தது. சுவரை தள்ளுவதுபோன்று தப்பிப்பதற்காக அதி உச்சளவிலான மூர்க்கதனமான முயற்சித்தனர், மரணபுள்ளியில் உள்ள அவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள எதையும் செய்ய்பும் நிலையில் இருந்தனர். நந்திக்கடல் நீரேரியின் ஓவ்வொரு மூலையும் படையினரால் சூழ்ப்பட்ட நிலையிலும் கூட அவர்கள் ஏதாவது ஒன்றை செய்தேயாக வேண்டும் என்கின்ற கட்டயத்தில் இருந்தனர். எதுவும் செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதான். இருந்தாலும் இந்த முயற்சிகள் தெளிவில்லாமல் ஒரு முறையான திட்டம் இல்லாமலும் செய்யப்பட்டதாகவே நான் உணர்கின்றேன்.
அந்த சதுர நிலத்தினுள் அண்ணளவாக 700 பயங்கரவாதிகள் இருந்திருக்ககூடும். பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான், பாணு, ஜெயம், சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் போன்ற மேல் நிலை தலைவர்களும் அவர்கள் மத்தியில் இருந்தனர். மே 17ல் சூசை தலைமையிலான அவர்களின் பெரும் முயற்சி தோல்வியில் முடிந்து பின் அடுத்ததாக அவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்துகொண்டனர். முதல் குழு யாரோ ஒரு மூத்த தலைவரால் தலைமை தாங்கப்பட்டது. இரண்டாவது குழுவை ரட்ணம் மாஸ்டரும் சாள்ஸ் அண்டனியும் தலைமை தாங்க மூன்றாவது குழு பிரபாகரன் தலைமையில் எஞ்சியுள்ள ஏனைய புலி தலைமைத்துவமாக இருந்தது. முதலாவது குழு அந்த நிலப்பகுதியிலேயே தங்கியிருக்க தீர்மாணித்திருந்தது. பெரும்பாலான பயங்கரவாதிகள் இன்னும் அந்த பகுதியிலேயே இருக்கின்றனர் என எம்மை நம்பவைத்து ஏனையவர்களை தேடபிடிக்க முடியாத வகையில் தப்பிசெல்ல வைக்கும் ஒரு தந்திரோபாய புகைதிரையாகவே அதனை நான் பார்கிறேன். இருள தொடங்கியபடியால் இரண்டாவது, மூன்றாவது குழுக்கள் கிழக்கு கரை வழியாக கடல் நீரேரிக்குள் இறங்கிவிட்டனர். கிட்டதட்ட 1 ½ கிலோ மீற்றர் தூரம் மேற்கு நோக்கி நடந்து பின் வடக்கு நோக்கி 4 கிலோமீற்றர் தூரம் நடந்து பொதுமக்கள் தப்பிவருவதற்க்காக படையினரால் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலைக்கு அருகில் வந்துவிட்டார்கள். இரண்டாவது குழுவை சேர்த சிலர் சாள்ஸ் அண்டனி தலைமையில் இராணுவ நிலையை அனுகி தாங்கள் பொதுமக்கள் எனக்கூறி தங்களை உள்ளே அனுமதிக்குமாறு கேட்டார்கள். முதல் தடவை நிராகரிக்கப்பட்ட போது மீண்டும் கடல் நீரேரிக்கே திரும்பி சென்றவர்கள் ஒரு மணித்தியாலத்தின் பின் மீண்டும் அதே கோரிக்கையுடன் வந்தனர். அவர்கள் எங்களிடம் வருவதற்கு முன்பாகவே அநத இராணுவ நிலைக்கு அருகே கிழக்கு கரையில் ஒரு பெரும் குழு தாக்குதலுக்கு தயார் நிலையில் கூடியிருதது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த அதிகாரி வானை நோக்கி சுடவே கரையோரமாக நீருக்குள் நிலைபடுத்தப்பட்டிருந்த எதிரிகள் படையினரை நோக்கி சுடத்தொடங்கினர். இது எதிர்பாக்கப்படாத மோசமானதாக்குதலாக இருந்தது. இரண்டாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 350 பயங்கரவாதிகள் முன்னரங்க நிலைகளை உடைத்துக்கொண்டு எமது பகுதிகளுக்குள் ஊடுறுவிட்டார்கள். உடனடியாகவே ஆட்லறி, மோட்டார் தாக்குதலை நடத்துமாறு நான் உத்தரவிட்டேன். இதனால் உள்நுழைய தாயாகாக சற்று தொலைவில் இருந்த பிரபகரனுடன் இருந்த மூன்றவது குழு வடக்கு பக்கமாக தள்ளப்பட்டு அடர்ந்த கண்டல் காட்டினுள் மெதுவாக நகர்ந்து தப்பி சென்றுவிட்டனர்.
மூன்றாவது குழு கண்டல் பற்றைகளுக்குள் தப்பி சென்றதற்காக அறிகுறிகள் எதுவும் எமக்கு தென்படவில்லை. அதே நேரம் இரண்டாவது குழுவுடன் கடும் சண்டை மூண்டது. அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய சண்டை முற்பகல் 11.00 மணிவரை தொடர்ந்து. அடுத்தநாள் சாள்ஸ் அண்டனி, ரட்ணம் மாஸ்டர் உட்பட 350 பயங்கரவாதிகள் கடைசியாக கொல்லப்பட்டிருந்தனர். இதற்கிடையே அந்த 800×800 சதுர மீட்டர் நிலபகுதியின் மீது காலை 10.00 மணியளவில் தாக்குதலை தொடங்கப்பட்டு முழுமையாக எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. முதலாவது குழுவை சேர்ந்த கிட்டதட்ட 150 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அன்று மாலைவரை முதலாவது, இரண்ண்டாவது குழுக்களை சேர்ந்த 500 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
மதியம் 12.30 மணியளவில் சூசையுடன் சேர்ந்த குழு ஒன்று கண்டல் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக எமக்கு கிடைத்த தகவல் படி மூன்றாவது குழுவினர் மீதான தாக்குதலை ஆரம்பித்தோம். மாலை 6.30 மணியளவில் சண்டை ஓய்ந்தது. உயர் நிலை புலி தலைவர்கள் உட்பட150 மேற்பட்ட பயங்கரவாதிகள் செத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியிருந்தாலும் சிறு சிறு மோதல்களுக்கு மத்தியில் பிரபாகரன், சூசை உடபட மேலும் 50 பேர்கள் எனது படையினருக்கு அகப்படாமல் கண்டல் பற்றைக்குள்ளேயே மறைந்து கொண்டிருந்தனர். அடுத்த நாள் காலை வரை நான் எனது படைகளை அவ்விடத்தை விட்டு நகர்த்தாத படியால் 19ம் திகதி காலை பிரபாகரனும் சூசையும் ஏனைய 50 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டை உறுதிபடுத்தியது வரை அவர்களால் தொடர்ந்து பதுங்கியே இருப்பதை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி தோட்டா இருக்கும் வரை, கடைசி பயங்கரவாதி இருக்கும்வரை அந்த கடைசி குழு போராடிக்கொண்டிருந்ததை நான் கூறியே ஆக வேண்டும். அவர்கள் எங்கள் எதிரியாக இருந்தாலும் அவர்கள் உண்மையான சண்டைவீரர்கள்.
பிரபாகரனின் மரணத்தை தொடர்ந்து பல்வேறுவிதமான வதந்திகள் நாடுமுழுவதும் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தன. எந்த படையணி பிரபாகரனை கொன்றது எனபது விவாதத்துக்கான எலும்புதுண்டாகியது. எங்களுடைய சில அதிகாரிகளும் படையினரும் அதற்கான உரிமை கோரியதுதான் இந்த குழப்பங்களுக்கான மூல காரணம். சிலர் தாங்கள் முதல் நாளே பிரபாகரனை கொன்றுவிட்டு அவருடைய பிஸ்டலை எடுத்துவந்து விட்டதாகவும் அவரது உடல் 4வது விஜயபாகு படையினரால் பின்னர் மீட்கப்பட்டது எனவும் கோரினர். இந்த வதந்திகளை கேள்விப்பட நான் முற்றாகவே மனமுடைந்து போனேன். பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு மே 18ம் திகதியே கொழும்புக்கு கொண்டு செல்லப்படதாகவும் அங்கே ஜனாதிபதிக்கு முன்பாக நிறுத்தியபோது, ஜனாதிபதி அவரை அறைந்து முழங்காலில் மண்டியிட செய்ததாகவும் பின்னர் 19ம் திகதி நந்தி கடல் நீரேரிக்கு கொண்டு சென்று பிரபாகரனை கொலை செய்ததாகவும் மற்றும் ஒரு வதந்தியும் எழுந்தது. சிலர் அவர் சினைப்பர் தாக்குதல் கொல்லப்பட்டதாகவும் வேறு சிலர் பிரபாகரன் கொமாண்டோ தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறினார்கள். யார் இந்த பச்சை பொய்- பிரட்டு கதைகளை பரப்பினார்கள் என்று என்னால் கற்பனைகூட செய்ய முடியாமலிருக்கின்றது. மே 19 காலை வரை பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியாது. 4வது விஜயபாகு படைபிரிவை சேர்ந்த தலா 8 பேர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள் மேஜர் ரோஹித் அலுவிகார தலைமையில் நடத்திய தாக்குதலில்தான் பிரபாகரன் மே 19 காலை 9.45 மணியளவில் கொல்லப்பட்டுருக்கின்றார் என இராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பான படையணியின் தளபதி என்கின்ற வகையில் அனைத்து ஊகங்களைளுக்கு ஐயம் திரிபுற கூறுக்கொள்ள விருபுகின்றேன். ஏனைய அத்தனை கதைகளும், ஊகங்களும், வதந்திகளும், முற்றிலும் பொய்யானவையாகும்.
அடுத்த சில நாட்களில் கடல் நீரேரிய மேலும் சோதனையிட்டபோது அழுகிக்கொண்டிருக்கும் இறந்த உடல்களையும் பெருந்தொகையில் ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றினோம். புதுமாத்தளனின் முழு பகுதியும் பூலோக நரகம் போன்று காட்சியளித்தது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அந்த பகுதியில் குழுமியிருந்ததால் அதனை அந்த ஒடுங்கிய நீளமான பகுதியால் கொள்ள முடியாமல் இருந்தது. கோடிக்கணக்கில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அந்த மெல்லிய நீண்ட நிலப்பகுதியில் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை நிறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டு சட்டங்களாக காட்சியளித்தன. இருந்தாலும் கடைசி போர்க்களமான புதுமாத்தளனும் நந்திக்கடல் நீரேரி பகுதியும் வெற்றி நிலமாகவே இன்னும் எங்களால் மரியாதையுடன் கருதப்படுகின்றது.
அன்று மாலை என்னையும் எனது படையணியின் அதிகாரிகளையும் அழைத்து பாராட்டிய பாதுகாப்பு செயலாலர்” கமால் என்னிடம் இருந்து உனக்கு எனன வேண்டும்?” எனக்கேட்டார். அவரது கேள்வியால் நகர்த்தப்பட்ட நான் உடனனேயே “ எனக்கு ஒன்றும் வேண்டாம் சேர்” என பதிலித்தேன். சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர் “ கமால் நான் அதே கேள்வியைத்தான் மீண்டும் உன்னிடம் கேட்கின்றேன. சொல்லு உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?” என கேட்டார். ஒருகாலத்தில் எனது மூத்த கட்டளை அதிகாரியாக இருந்த இந்த அதிகாரியிடம் இருந்து விசுவாசமாகவே இந்த கேள்வி வருகின்றது என எனக்கு தெரியும். “ சேர் எனக்கு எதுவுமே வேண்டாம், அப்படி தேவை என்றால் உங்களுக்கு அதனை தெரியப்படுத்துகின்றேன்.” எனக்கூறினேன். எனது நிலையை ஏற்றுக்கொண்ட அவர் மீண்டும் எங்கள் எல்லோரையும் வாழ்த்தினார்.
( மிகுதியை இனிமேல்தான் மொழிபெயர்க்க வேண்டும்)
இதன் முந்தைய பகுதியை வாசிக்க இந்த இணைப்புக்கு செல்லுங்கள்.
https://www.facebook.com/Rajhsevapa…/posts/2110382902335468…

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது ...