Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த படையினர் தொடர்ந்து ஆர்பரித்து கொண்டே இருந்தனர். ஒரு படையினன் அசாதாரணமாக நடந்து கொள்வதை அவதானித்த என படையணியை சேர்ந்த அதிகாரிகள் அதனை விரைவாகவே எனது கவனத்துக்கு கொண்டுவந்தனர். பிரபாகரனின் காயங்களில் இருந்து வடிந்த இரத்தம் தோய்ந்த மண்ணை அவன் சேகரித்து அள்ளிக்கொண்டிருந்தான். ஒரு மூத்த அதிகாரி “ என்ன இழவு செய்து கொண்டிருக்கின்ராய்? உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கின்றது?” என கத்தினார். அந்த படையினன் பேய் பிடித்தவன் போன்று எழுந்து நின்றான். அவனது ஒரு கையில் அந்த இரத்தம் தோய்ந்த மண்னை சேகரித்த பை ஒன்று இருந்தது. மறு கையால் பிரபாகரனின் உடலை சுட்டிக்காட்டி” சேர் உங்களுக்கு தெரியுமா? எனது மூன்று அண்ணன்கள் இராணுவத்தில் இருந்தனர், என்னுடைய இரத்தமும் தசையும் அவர்கள். இவன் அவர்கள் மூன்று பேரையுமே கொன்றுவிட்டான். எனது அம்மாவும் அப்பாவும் இன்னும் உயிருடந்தான் இருக்கின்றார்கள். சேர் நான் இந்த இரத்ததை எனது பெற்றோருக்கு காட்டி எனது அண்ணன்களின் மரணத்துக்காக பலிவாங்கியதை கூறப்போகின்றேன்” என கூறிவிட்டு கூட்டத்துக்குள் சென்று மறைந்துவிட்டான்.
எனக்கு சற்று நேரம் கிடைத்தது. அந்த நேரத்தில் எனது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து எனது மனைவியிடமும் மகளிடமும் எனது படைபிரிவினர் பிரபாகரனை கொன்றுவிட்ட செய்தியை கூறி எனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். அவர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியடைந்தனர். ஏற்கனவே இந்த செய்தியை கேள்விபட்டிருந்தனர். களிப்புடன் என்னையும் எனது படையினரையும் வாழ்த்தினர். எனது மனைவி கடந்த மூன்று மாதங்களாகவே ஒவ்வொரு நாளும் பெலன்வில கோயிலுக்கு சென்று என்னை பாதுகாக்குமாறும், பிரபாகரனை பிடிக்கும் எனது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டிக்கொள்வார். இன்று அவருடைய பிரார்த்தனைக்கு பதில் கிடைத்துள்ளது. தன்னுடைய தந்தையும் அவரது படையினரும் தேசத்தின் முதல் நிலை எதிரியை கொண்றுவிட்டார்கள் என என்னுடைய மகள் சந்தோசத்தில் பூரித்து போனாள். முழு நாடுமே ஒரு பெரிய திருமணம் நடப்பது போன்று கொண்டாக்கொண்டிருந்தது. மெய்மறந்த இன்பத்தில் திளைத்திருந்தது. அது அவர்களுக்கு அவ்வளவு விசேடமானதாக இருந்தது. இந்த தருணத்தை அவர்கள் எப்படி சுவைத்துக்கொண்டிருந்தனர் எனபத நான்கூட கற்பனை செய்து பார்த்துக்கொண்டேன்.
அன்று மதியம் அந்த உடலை முறையாக அடையாளம் காண்பதற்காக இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர கருணா அம்மான் மற்றும் தயா மாஸ்டருடன் ஒரு ஹெலிகொபடரில் வந்தடைந்தார். அடையாளம் காணும் பணி பிரிகேடியர் சவீந்திர சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஆகையால் நானும் மேஜர் ஜெனரல் ஜகத் டயசும் சற்று ஒதுங்கி நின்று நடப்பதை கவணித்துகொண்டிருந்தோம். கருணா அம்மான் எங்களை கடந்து சென்றபோது அருகே நின்றிருந்த விசேட படையணியை சேர்ந்த கோப்ரல் ஒருவர் “ இவன் முதலிலேயே வெளியேறிய இருக்காவிட்டால் இவனுடைய உடலும் இங்கேதான் கிடந்திருக்கும்” என்றவாறே சுற்றி பார்த்தார். அவருக்கு நாங்கள் நிற்பது சட்டென்று நினைவுக்கு வந்தவுடன் அப்படி கூறியதற்காக அவசர அவரசரமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மூத்த புலிதலைவர் என்ற வகையில் கருணா அம்மான் கூட இராணுவத்துக்கு அதிக சேதத்தை கொடுத்தவர்தான்.அதனால் வெற்றி மயக்கத்தில் படையினர் எதிர்வினையாற்றலாம் என்பதை கருத்தில் கொண்டு கொமாண்டோக்களின் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் அவர்களை இராணுவ தலைமயகம் நந்திக்கடலுக்கு அனுப்பி இருந்தது.
பிரபாகரனின் உடலை பார்த்த உடனேயே கருணா அம்மானின் முகம் பெரிய புன்னகையால் பின்னப்பட்டது. ஒருகாலத்தில் நண்பனாகவும் பின் எதிரியாகவும் ஆகிய பிரபாகரனின் இறந்த உடலை பார்பதே கருணா அம்மானின் மகிழ்ச்சிக்கும் பெரும் ஆறுதலுக்கும் காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கடைசி வரைக்கும் ஆதரவாளராகவும் விசுவாசியாகவும் இருந்த தயாமாஸ்டர் மிகுந்த துக்கமடைந்தார். இந்த கொடூரமான மனிதனின் உடலை உற்று பார்த்தபோது கண்ணீரில் அவரின் கண்கள் கலங்கின. அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட பின் எங்களிடம் வந்த கருணா அம்மான் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக கைகுலுக்கினார். ஊடகங்களுக்கும் புகைப்படங்கள் எடுக்க போஸ் கொடுத்தார். அதன் பின் கொக்கா கோலா ஒரு கோப்பை பருகினார். மகிழ்ச்சியில் இன்னும் பல்லிளித்துக்கொண்டிருந்த அவர் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த பூமியில் எங்கேயாவது ஒரு இடத்தில் பிரபாகரனின் உடலை நாம் புதைத்தால் அந்த துட்டகைமுனு மன்னன் காலத்தில் எல்லாளனின் புதைகுழி புனித பூமியாகியது போல் ஒரு தசாப்தகாலத்தின் பின் அவருடைய ஆதரவாளர்களால் வழிபாட்டிடமாக மாற்றப்பட்டுவிடும். ஆகையால் அன்றே அவருடைய இறுதி கிரிகைகளுக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டோம்.
( மிகுதியை இனிமேல்தான் மொழிபெயர்க்க வேண்டும்)
இதன் முந்தைய பகுதியை வாசிக்க இந்த இணைப்புக்கு செல்லுங்கள்.

Road to Nandikadalஅத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும்…

Opslået af Rajh Selvapathi på 17. marts 2018

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது ...