Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (7)

தளபதி தொடர்ந்து என்னை கடுமையாக திட்டிக்கொண்டே இருந்தார். மேலதிகமாக விளக்கம் கொடுத்தது நியாயப்படுத்த முயல்வது வீண்ணது என எனக்கு புரிந்தது. அது அவரை மேலும் கோபமூட்டுவதாக இருக்கும். சில நிமிடங்களுக்கு முன் இருந்த சந்தோசம் குதூகலம் இப்போது மறைந்து போய் சோகமும் வேதனையும் இதயத்தை பாரமாக்கியது. அவரின் காட்டு கத்தலை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் இப்படி ஏதோ திடீரெனெ கத்துபவர் அல்ல, வழக்கமாகவே தாராளமாக இப்படிதான் எல்லோரிடமும் நடந்து கொள்வார் என்பதுதான் அவர் என்னை திட்டுவதற்கான ஒரே காரணமாக இருக்க வேண்டும்.
கத்துவதை நிறுத்திவிட்டு பிரபாகரன் சீருடை அணிந்திருந்தானா என கேட்டார். ஆம் என நான் அதை உறுதிபடுத்தியபோது, ஒரு இராணுவத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சீருடை அணிய தகுதியானவர்கள், எனவே அந்த சீருடையை கழற்றிவிடு என்று அடுத்த நொடியே எனக்கு உத்தரவிட்டார். ஏற்கனவே ஆயிரக்கணக்கான படையினரும், செய்தியாலர்களும் அங்கே குழுமிவிட்டதால் அதனை செய்வது அவ்வளவு சாத்தியமானதல்ல என நான் அவருக்கு விளங்கப்படுத்த முயன்றேன். ஆனால் அந்த முயற்சியானது அவரது கோபத்தை மீண்டும் கிளறிவிடவே எனக்கு உதவியது.
”அதுதான் பிரச்சினையே, எல்லாவற்றுக்கும் முன்பாகவே நீ மீடியாவை அழைத்திருக்கின்றாய்.” அவர் வெடித்து சிதறினார். ” இல்லை சேர், நான் அவர்களை இங்கே அழைத்துவரவில்லை. ஊடகங்களை நான் எப்போதும் தள்ளியே வைப்பவன். அவர்கள் அனைவரும் இராணுவ தலைமையகத்தால் அனுப்பபட்டவர்கள்.” நான் அமைதியாக பதிலலித்தேன். ”அங்கு யார் இருந்தாலும் எனக்கு அக்கரையில்லை. நீ அவனது சீருடையை கழற்றிவிடு” தொலைபேசியை வைக்க முன்பு அவர் இறுதியாக எனக்கு கட்டளையிட்டார்.
முழு உலகமே பாரத்துக்கொண்டிருக்க பிரபாகரனின் சீருடையை கழற்றிவிட்டு வேறு ஒன்றை அந்த உடலில் போட எனக்கு எப்படி இருந்தாலும் விருப்பமில்லாமல்தான் இருந்தது. நான் இன்னும் சிந்தித்துக்கொண்டே இருந்த போது சரியாக 15 நிமிடங்கள் கழித்து எனது தொலைபேசி அலறியது. அது மீண்டும் இராணுவதளபதி.
அவர் இன்னும் கோபமாகவே இருந்தார்.” அந்த ரூபவாகினிகாரன் சீருடை அணிந்த படியேஅந்த மனிதனின் உடலை காட்டுகின்றான். சீருடையை கழற்றிவிடு என்று நான் உனக்கு கூறினேனல்லவா? இராணுவ தளபதியின் கட்டளையை உன்னால் நிறைவேற்ற முடியாதா?” என எரிந்து விழுந்தார். அவருடைய சொற்கள் எனது மனதை ஆழமாக காயப்படுத்தியது. கிட்டதட்ட ஐந்து நிமிடங்கள் வரை ஒரு வார்த்தைகூட பதில் பேசாமல் அவர் என்னை மோசமாக திட்டுவதையே கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவாறு அவர் முடித்துவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்த பின் எனது அருகே நின்றுகொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை திரும்பி பார்த்து மிகுந்த துக்கத்துடன் அவரிடம் கூறினேன்” சேர் இராணுவத்தில் இருக்கும் ஒருவன் மிகபெரியதாக செய்யக்கூடியது எது? இந்த நாயை கொள்ளுவதுதானே? அதனை செய்த பின்னும் இவ்வளவு மோசமாக வசைகளை நான் ஏன் கேட்கவேண்டும்? அனுதாபத்துடன் எனது தலையில் கைவைத்து” கவலைபடாதே சகோதரா, கொஞ்சம் சூடுதணிந்தபின் பொஸ் உன்னை மீண்டும் அழைப்பார்” என நேசத்துடன் கூறினார். அவர்கூறியது போன்றே15 நிமிடங்கள் கழித்து இராணுவ தளபதி என்னை அழைத்தார்.
“கமால்” அவருடைய குரல் தணிந்திருந்தது, இராணுவ புலனாய்வை சேர்ந்த பிரிகேடியர் அமல் கருணாசேகர அங்கே கருணா அம்மானையும் தயா மாஸ்டரையும் அழைத்துக்கொண்டு வருகின்றார். பிரபாகரனை முறையாக அடையாளம் காண்பதற்கான ஏற்பாடுகளை செய் என கூறினார். வசை மழையால் இன்னும் ஏமாற்றத்துடனேயே இருந்த நான் அது நிச்சயமாக பிரபாகரந்தான் மேலதிகமான அடையாளம் காணல் தேவையில்லை என கூறினேன். ” நான் என்ன உனக்கு கூறுகின்றேனோ அதை நீ செய்” என கோபத்துடன் கடுந்தொணியில் கூறிவிட்டு தொலைபேசியை துண்டித்துவிட்டார்.
இதற்கிடையே கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் உடல்கள் எடுத்துவரப்பட்டு குவிக்கப்பட்டன. ஓரளவு உயரமான நல்ல உடல்வாகுடன் ஒரு உடலும் அங்கு கொண்டுவரப்பட்டது. அதனை மேலும் ஆராய்ந்ததில் ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அது கடற்புலிகளின் தலைவர் சூசையினுடையது. இந்த குற்றவாளிதான் கடற்படையின் துன்பங்களுக்கு காரணமானவன். நல்லகாலம் அவன் கொல்லப்பட்டுவிட்டான், அதுவும் எனது படையணி வீரர்களால்.
பிரபாகரன் உட்பட அனேகமாக புலிகளின் மேல்நிலை தலைவரகள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர். இன்னும் நாங்கள் கண்டுபிடிக்காமல் இருப்பது பிரபாகரனின் நெருங்கிய சகாவும் புலிகளின் புலனாய்வு தலைவருமான பொட்டு அம்மானைத்தான். எங்களுக்கு கிடைத்த தகவல்படி எங்களுடைய தாக்குதல் ஒன்றில் புலிகள் சிலருடன் பொட்டு அம்மானும் அவருடைய மனைவி மற்றும் இரு மகன்களும் கொல்லப்பட்டுவிட்டனர். நந்திக்கடல் நீரேரியில் அவருடைய மனைவி , இரண்டு மகன்களின் உடல்களை நாம் கண்டெடுத்திருந்தாலும் நந்திகடல் நீரேரியில் பொட்டு அம்மானின் உடலை எங்களால் காணமுடியவில்லை.
( மிகுதியை இனிமேல்தான் மொழிபெயர்க்க வேண்டும்)
இதன் முந்தைய பகுதியை வாசிக்க இந்த இணைப்புக்கு செல்லுங்கள்.

அத்தியாயம் 50: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின்…

Opslået af Rajh Selvapathi på 16. marts 2018

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...