Road to Nandikadal ! அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும்

( தொடர்ச்சி..)
எனது காலடியில் ஒரு நாயை போல கிடக்கும் பொய்களின் மொத்தவடிவத்தின் உடலை நன்கு ஆராய்ந்தேன். கண்கள் இரண்டும் அகலதிறந்திருந்தது. புலிகளின் வரி கமோபிளேக் சீருடையில் கட்சியளித்தது அந்த உடல். பிரபாகரன் சிலநாட்களாக முகச்சவரம் செய்திருக்கவில்லை. நரைத்த முடிகட்டைகள் அவரது முகம் முழுவதும் பரவி இருந்தது. அவருடைய நெற்றி ஆழமாக மண்டையோடு வரை பிளந்திருந்த்திருந்தது. இதை தவிர அவரின் உடலில் ஒரு சிறு கீறல்கூட ஏற்பட்டிருக்கவில்லை. அகல திறந்திருந்த கண்களை பார்க்கும்போது அதிர்ச்சியையாகவும் பயங்கரமாகவும் இருந்தது. நான் அந்த உடலை தொட்டபோது இன்னும் உயிருடன் இருப்பது போலவே சூடாக இருந்தது. 30 நிமிடம்க்களுக்கு முன்பாகவே இறந்திருக்க வேண்டும். காயத்தில் இருந்தும், காதுகளில் இருந்தும் இரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தது. சட்டை பையினுள் இருந்து கண்டெடுக்கப்பட்ட 01543301002 என இலக்கம் , அடையாள அட்டையையும் , கழுத்தில் தொங்கிய இலக்க தகட்டையும் ஒரு படைவீரன் என்னிடம் எடுத்து கொடுத்தார். ஒரு இலக்க தகடு என்பது பெயர்,அடையாள இலக்கம், இரத்தவகை ஆகிய விபரங்கள் பொறிக்கப்பட்டு ஒவ்வொரு போர்வீரனின் கழுத்திலும் தொடங்கும் உலோக தகடு ஆகும். பிரபாகரனின் தகட்டில் “001” என பொறிக்கப்பட்டிருந்தது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட நேர்ந்தாலோ அல்லது இக்கட்டான சூழ்நிலையிலோ தற்கொலை செய்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு புலிகள் இயக்க உறுப்பினரும் சயனைடு குப்பியை தங்கள் கழுத்தில் மாட்டியிருக்க வேண்டும். அடிப்படை பயிற்சியை முடிக்கும் ஒவ்வொருவருக்கும் மூத்த புலிகள் இயக்க தலைவர் ஒருவரால் சயனைடு குப்பி பரிசளிக்கப்படுவதுண்டு. அதனை அணிந்திருப்பவர் இயக்கத்தினுள் ஒரு முழுமையான போராளியாக அடையாளம் காணப்படுவார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ல் பிரபாகரன் தனது ஈழ அபிமானிகளுக்காக உரையாற்றுவதை வழக்கமாக வைத்திருந்தாரல்லவா, இலங்கையிலும், புலம்பெயர்தேசங்களிலும் இருக்கும் தமிழர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த உரைகள் உலகம் முழுவதிலும் ஒளிபரப்பபடுவதுணடல்லவா, அப்போதெல்லாம் கறுப்பு நூலில் தொங்கவிடப்பட்ட சயனைடு குப்பி அவரது சட்டை பையினுள் இருக்கும. அவரது நிகழ்வுகளில் அது முக்கிய அடையாளமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் கண்டெடுத்த உடலில் அவருடன் அந்த சயனைடு இருக்கவில்லை. வேறு வழியே இல்லை என்கின்ற சந்தர்ப்பசூழநிலைகளில் பயன்படுத்துவதற்க்காக தங்கள் அதிவணக்கத்துக்குரிய தலைவரின் கட்டளைப்படி சயணைட் குப்பியை யாழ்ப்பாண குடாநாடு, வன்னி, கிழக்கு மாகாணம் என ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மகிழ்ச்சியாக அணிந்து கொண்டிடுந்தனர். உண்மையில் நாங்கள் பிடிக்க முயன்றபோதும் , பிடித்தபோதும் எத்தனையோ பேர் இந்த சயனைட் குப்பியை கடித்து தற்கொலையும் செய்து கொண்டனர் சயனைட் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியும், பலர் தங்கள் உயிரை போக்கிக்கொள்ள ஊக்கப்படுத்தியும் கொண்டிருந்த நம்பவைத்து கழுத்தறுக்கும் இந்த பயங்கரவாதி ஒரு கோழையாகவே இருந்திருக்கின்றான். இறுதியாக இராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அந்த உலக புகழ்பெற்ற சயனைட் குப்பியை அணிந்திருக்கவும் இல்லை. இறக்கும் போது அவனுடைய உலக வாழ்க்கையின் உடமைகளாக இராணுவ இலக்கதகடு, அடையாள அட்டை,ஒரு கட்டு நீரிழிவு மாத்திரைகள் ஆகியன மட்டுமே இருந்தன.
அந்த உடலை ஆராய்ந்த பின் அங்கே காவல் நிற்குமாறு சில படையினருக்கு கட்டளையிட்டுவிட்டு அந்த தகட்டையும், அடையாள அட்டையையும் எடுத்துக்கொண்டு நகர்ந்து சென்றேன். ITN ஒளிப்பதிவாளர் சமில் ஆணந்த தன்னுடைய கமராவை என்னை நோக்கி திருப்பினார். உலகையே வெற்றி கொண்ட ஒரு அரசனை போன்ற ஒரு உணர்வில் அவரை அகன்ற புன்சிரிப்புடன் கடந்து சென்றேன். ஆனாலும் ஒரு விசையால் உந்தபட்டவனாக அவரை நோக்கி திரும்பி,” தம்பி இதோ…”என அந்த தகட்டை காட்டினேன். இது அன்றிரவு ITN செய்தியிலும் ஒளிபரப்பாகியது. விளைவு அதனை எனது நினைவு சின்னமாக வைத்திருக்கும் சந்தர்பத்தை இழந்தேன். அந்த செய்தியை பார்த்த இராணுவ தளபதி என்னை தொடர்கொண்டு அது என்ன என்று கேட்டார்? அது பிரபாகரனுடைய தகடு என நான் கூறியபோது சிறிது நேரம் யோசித்தபின “கமால் ஈழப்போரின் நினைவு சின்னமாக நான் அதனை வைத்துகொள்ளலாமா? என கேட்டார். இதுவரை எதனையும் கேட்காத ஆனால் சாதாரணமாக கட்டளைகளை மட்டுமே பிறப்பித்துக்கொண்டிருந்த ஒரு இராணுவதளபதி இன்று ஒன்றை கேட்கின்றார். அதனை எனது நினைவு சின்னமாக வைத்துக்கொள்ளலாம் என நம்பி இருந்த போதும், நான் எனக்கு மேல் பணியாற்றிய எனது கட்டளை அதிகாரிகளுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றேனோ அந்தளவு உயர்ந்த மரியாதையை அவருக்கு நான் கொடுப்பதால் அடுத்த நாள் காலையிலேயே ஒரு நம்பிக்கைக்குரிய அதிகாரி மூலம் அதனை அவருக்கு அனுப்பி வைத்தேன். எனக்குரிய ஞாபகசின்னமாக பிரபாகரனைன் அடையாள அட்டையை வைத்துக்கொண்டேன். அதனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கும், பாதுகாப்பு செயலாலர் கோத்தாபாய ராஜபக்சாவுக்கும் ஒருமுறை காட்டியும் உள்ளேன். இன்னும் அந்த அட்டை என்னிடம்தான் உள்ளது. நான் ஓய்வு பெற்று செல்லும் அந்த கடைசி நாளில் வருங்கால சந்ததிக்காக இராணுவ நூதனசாலையில் அதனை ஒப்படைக்க விருப்புகின்றேன்.
( மிகுதியை இனிமேல்தான் மொழிபெயர்க்க வேண்டும்)
இதன் முந்தைய பகுதியை வாசிக்க..

அத்தியாயம் 50: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின்…

Opslået af Rajh Selvapathi på 16. marts 2018

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...