Road to Nandikadal !

அத்தியாயம் 1:
நித்திய சமாதானத்தின் வித்துக்கள்
———————————————————-
”இறுதி மூச்சை அச்சமின்றி விட்டிடவும்,
அமைதியான மனதுடன் சாந்தியடைந்தியடைவதற்காக
ஒரு மனிதனாக எனது கடமைகளை செய்வதால்
தெளிந்த மனசாட்சியோடு மரணத்தை எதிர்நோக்குவேன்”
ஆனந்தா கல்லூரியில் சிறுவனாக இருந்த காலங்களில் பெரும் மதிப்புக்குரிய இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க நேர்ந்தது. புகழ்பெற்ற அந்த பாடலின் இந்த நான்கு வரிகளும் என் மனதில் ஆழமாக பதிந்துபோயின. அந்த நேரத்தில் இந்த தேசபக்தி பாடல் எமது இதயகளில் ஆழமாக ஒலித்ததிர்ந்ததால் எங்கள் காலத்தில் மிக பிரபலமான பாடலாகவே இது இருந்தது.. அந்த பாடலில் இந்த வரிகளை நான் ஏன் நேசித்தேன் என்பதற்கான காரணம், வரலாற்றில் இந்த மிக சிறப்பான நேரத்தில் இன்றுதான் எனக்கு சடுதியாக விளங்கியது. முதன்முதலில் எப்போது இந்த பாடலை கேட்டேனோ அப்போதிருந்தே இந்த நாட்டின் மிகச்சிறந்த பாடலசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் சுனில் ஆரியரட்ண ஏன் இதை எழுதினார்? எங்கள் காலத்தின் அந்தமில்லா பாடகரான திரு அபேவர்த்தன பாலசூரிய ஏன் இதை அப்படி ஒரு பேராவர்த்துடன் பாடினார் என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முயன்றுகொண்டே இருந்தேன். அந்த உணர்வுகளின் ஆழம் என்னுள்ளே அசைந்துகொண்டிருந்திருக்கின்றன. என் வாழ்நாள் முழுவதுமமே ஏன் இன்றும் கூட அவை என்னுள்ளே கிளர்ந்துகொண்டுள்ளது. அந்த வரிகளின் முக்கியத்துவம் என்மீது சாய்ந்துள்ளது. இந்த தருனம் இலங்கையர்கள் அனைவருக்குமானது. மூன்று தசாப்தங்களாக வயது, இனம், மதம் கடந்து அவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நாம் கனவில் கூட காண பயந்த அந்த நாள் இறுதியாக வந்தே விட்டது.
19 மே 2009, நேரம் கிட்டதட்ட காலை 10.30 இருக்கும். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எங்கள் தாய்நாட்டை சீரழித்த அந்த மனிதன், எங்கள் பாசத்துக்குரிய நாட்டின் சாபமாக மாறியிருந்த அந்த மனிதன் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை இரத்தம் தோயத்தோய கொலை செய்ததுடன் பல்லாயிரக்கணக்கானோரை துன்பத்துக்குள் தள்ளிய அந்த மனிதன், இந்த தேசத்துக்கு சொல்லெனா துயரத்தை கொடுத்த அந்த மனிதன், எனது கட்டளைக்கு உட்பட்ட 53வது படையணியின் உயர்வான படையினரால் இறுதியாக கொல்லப்பட்டுவிட்டான். இரத்தம் வழியும் உடல் கொண்டுவரப்பட்டு இதோ எனது காலடியில் போடப்பட்டுள்ளது. கீழே கிடக்கும் அந்த கொடிய மனிதனை பார்ப்பது என்பது இராணுவ சேவையில் மட்டுமல்ல என் வாழ்நாளிலேயே மிக உன்னதமான, நினைவில் நிற்கும் தருனமாகும்.
படையினரின் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு துப்பாக்கி வேட்டுசத்தங்களுடன் இணைசேர்ந்துவிட்டது. வானை நோக்கிய வேட்டு சத்தங்கள் வெளிப்படையாகவே மெய்சிலிக்கவைக்கும் வகையில் எதிரொலித்தன. இல்லாவிட்டால் நத்திகடல் கரையோரம் மயான அமைதியில் இருந்திருக்கும். மிககொடிய பயங்கரவாதியான வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விழுந்த போது ஒலித்த அந்த வெற்றி பேரிகை என் செவிகளில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கின்றது. அது வெறுமனே ஒரு சில படையினரின் மகிழ்ச்சியல்ல;.
திகதிமட்டும் எழுதினால் போதும் என்கின்ற நிலையில் தங்கள் மரணசான்றிதலை முன்பே எழுதி வைத்துக்கொண்டு உயிரை தியாகம் செய்ய தயாராகி தங்கள் தாய்நாட்டுக்காக போராடிய தீரமிக்க இதயங்களின் மகிழ்ச்சி ஆர்பரிப்பு அது.
தங்களுக்கென்று சொந்தமாக ஒரு அங்குல நிலம் கூட இல்லாத ஆனால் எதிர்கால சததியினரின் வருகைக்காக தங்கள் தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் கொடிய பயங்கரவாதிகளுடன் போரிட்டு மீட்ட படையினரின் மகிழ்ச்சி ஆர்பரிப்பு அது.
பாதுகாக்கப்படவும் காப்பாற்றப்படவும் வேண்டிய மக்களுக்காக இதயத்தில் அள்ளிக்கொடுக்கின்ற அன்பையும் நேசத்தையும் தங்களிடத்தே கொண்டு ஒரு கையில் சுடுகலன்களையும் மறுகையில் ”மனித உரிமைகள் மற்றும் அர்பணிப்பு விதிமுறைகளையும்” தாங்கி நாட்டுக்காக போராடிய துணிச்சல்மிக்க படையினரின் மகிழ்ச்சி ஆர்பரிப்பு அது.
தமது குழந்தைகளுக்கு இரத்ததை பாலாக ஊட்டி வளர்த்த பெருமைக்குரிய தாய்மார்களின் மகன்களினதும், அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே கடுமையாக உழைத்த பெருமை மிக்க தந்தைமார்களாலும் ஊட்டி வளர்க்கப்பட்ட மகன்களினதும் மகிழ்ச்சி ஆர்பரிப்பு அது..
எமது தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் காப்பாற்ற மூன்று தசாப்ப்தங்களாக தங்கள் அவையவங்களை, உடல் உறுப்புக்களை இழந்த எங்கள் தேசத்தின் புதல்வர்களின் மகிழ்ச்சி ஆர்பரிப்பு அது.
எமது பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் என அச்சமின்றி இந்த பெருமை மிக்க நாடு பட்டொளிவீசுவதை காணுவதற்காக தங்கள் பார்வையையே தியாகம் செய்ய தயாரக இருந்த புதல்வர்களின் மகிழ்ச்சி ஆர்பரிப்பு அது.
இன்னும்கூட அந்த ஆர்ப்பரிப்பை என்னால் கேட்க முடிகின்றது;
“ சேர், இதோ பிரபாகரன்”
“ எங்கள் நாட்டை நாசம் செய்த பிரபாகரன் இவன்தான்”
“எங்கள் நாட்டில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றுபோட்ட பிரபாகரன்தான் இவன்”
“ சேர், கடைசியாக நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம்”
க.பொ.த உயர்தர பரீட்சை முடிந்து உடனேயே இராணுவத்தில் இளநிலை பயிற்சி அதிகாரியாக இணைந்து கொண்டேன். ஏனைய பொரும்பாலான இளைஞர்கள் விரும்புவது போன்று இளமைகால மகிழ்ச்சிகளை அனுபவிக்கவில்லையே என நான் இன்று நிச்சயமாக வருத்தப்படவில்லை. எனது இளமைக்காலம் முழுவதையும் வடக்கு, கிழக்கு, வன்னி காடுகளில் அலைந்து திரிவதற்காக செலவளித்தமைக்காக நான் வருத்தப்படவே இல்லை. நேர்த்தியாக ஆடைகள் அணிந்து, ”டை” கட்டிக்கொண்டு சிறிய கார் ஒன்றில் அலுவலகம் சென்று பின் மாலையில் எனது அன்பான அம்மா சமைக்கும் சுவையான உணவுவகைகளை சாப்பிடாமல் போய்விட்டேனே என நான் கவலைப்படவில்லை. நண்பர்களுடன் இனிமையாக பொழுதை கழிக்கும் மாலை நேரங்களை தவற விட்டுவிட்டேனே என நான் வருத்தப்படவில்லை. எனக்கு கிடைத்தலெலாம் கொட்டி சிந்திய உணவுகளும், தண்ணீரும், சில நாட்களுக்கு எனது தோளிகளில் ஏறி இருக்கும் வெடிபொருட்களும்தான். ஒரு கையில் ஆயுதத்தை தூக்கிக்கொண்டு காடுகளை கூட்டி பெருக்கிக்கொண்டும், பயங்கரவாதிகளை துரத்திக்கொண்டு அவர்களின் தடங்களில் வாரக்கணக்காக ஓடிக்கொண்டும் இருந்திருக்கின்றேன். என்னுடைய பாடசாலை சகாக்கள் அவர்கள் வீடுகளில் பஞ்சணைகளில் பாதுகாப்பாக உல்லாசமாக, நிம்மதியாக தூங்கும் போது நான் காடுகளில் ஆற்றங்கரைகளிலும் கடற்கரைகளிலும் கொலைவெறியுடன் தாக்கும் பூச்சிகள் நுளம்புகள் மத்தியில் எண்ணிலடங்கா இரவுகளை கழித்திருக்கின்றேன். இதற்காக நான் இப்போது வருத்தபடவேவில்லை. எனது திருமணத்தின் பின் குடும்பத்தினருடன் நேரத்தை செல்வளிக்க முடியவில்லை. காதல் சரசங்களில் ஈடுபடவில்லை. நாளாந்த வாழ்க்கையை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அன்பையும், அரவணைப்பையும் பாதுகாப்பைம் கொடுக்கவில்லை. அதற்குபதிலாக எனக்கு என்ன நடக்குமோ? பயங்கரவாதிகளில் தொடர்ச்சியான தாக்குதல்களால் எந்த நேரத்திலும் என்னை இழந்துவிடுவோமோ, என்கின்ற அச்சத்திலேயே எனது குடும்பத்தினர் தூக்கமில்லா இரவுகளுடன் வாழ்ந்தனர். நான் அவை எதற்குமே இப்போது வருந்தவே இல்லை. இது எனக்கு மட்டுமல்ல தங்கள் தாய்நாட்டுக்காக இந்த கொடிய யுத்தத்தின் ஆரம்பம் முதல் இறுதி முடிவுவரை என்னோடு கூடவே போராடிய, நான் இணைந்து காலத்தில் இராணுவத்தில் இணைந்துகொண்ட அத்தனை மூத்த இராணுவ அதிகாரிகளுக்கும் பொருந்தும். என்னுடைய நேசத்துக்குரிய தாய்நாட்டை விடுவிக்க போராடுவதிலேயே எனது இளமைகாலம் முழுவதையும் செலவிட்டிருக்கின்றேன். எனது காலப்பகுதியில் என்னையொத்த அதிகாரிகளுக்கு மட்டுமல்ல போர்க்களத்துக்குள் நுழைந்த ஒவ்வொரு இளம் போர்வீரனுக்கும் இதுதான் நடந்து. சிலர் தங்கள் கடைமையை செய்வதற்காக முழுமையாக பயங்கரவாதிகளுடன் போராடினாலும் இறுதி இலக்கை அடையும் திருப்தியை அனுபவிக்காமலேயே பணி ஓய்வு பெறவேண்டியதாயிற்று. சிலர் போர்களங்களில் படுகாயமடைந்து அங்கவீனர்களாக வீடு திரும்பி படுத்த படுகையிலேயே நிர்கதியாக கிடக்கின்றனர். சிலர் வீடு திரும்பவே இல்லை பதிலாக அவர்களின் உடல்களை தாங்கிய சவப்பெட்டிகள்தான் அவர்கள் வீடுகளுக்கு சென்றன. மீளாதுயரில் தங்கள் குடும்பத்தை தவிக்கவிட்டு சென்றவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் பார்க்கவே இல்லை. இன்னும் சிலர் தங்கள் கடமையில் கண்ணாக இருந்து காணாமல் போயுள்ளனர். கடவுளால்கூட அவர்களை மீள கொண்டுவந்து தங்கள் துயரை துடைக்க முடியாது என்கின்ற போதிலும் அவர்களின் உற்றார் உறவினர்கள் கடவுள் அவர்களை மீளவும் வீடுகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பார் என்கின்ற நம்பிக்கையில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர்.
யுத்தம், அது எந்த வகையில் இருந்தாலும் ஆபத்தானது, கொடுமையானது. ஆனால் பயங்கரவாதம் அதைவிட மோசமானது. கட்டுப்பாடுகள், தடைகள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் இப்படி எத்தனையோ விடயங்கள் மரபுவழி போரை ஆள்கின்றன. ஆனால் பயங்கரவாததுக்கு இவை எதுவும் கிடையாது. ஒரு நாடாக ஒரு தேசமாக நாங்கள் பயங்கரவாத்தினால் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகவே துன்பப்பட்டுள்ளோம். பல்லாயிரக்கணக்கானோர், அவர்களின் குடும்பத்தினர் என கண்ணீரிலேயே வாழவேண்டி இருந்தது. சொல்லனா துனபத்தை அனுபவிக்க நேர்ந்தது. அதிஸ்டவசமாக இந்த நிலை இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. எமது பிள்ளைகளும் எதிர்கால சந்ததியினரும் அச்சமின்றி அமைதியாக கண்ணியமாக வாழ இபோது வழி ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதம் என்பதற்கே புதிய அர்த்தத்தை கொடுத்த கொடிய தற்கொலைத்தாகுதலை ஒரு கலையாகவே உலகிற்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த அந்த மனிதன் இறுதியாக மௌனமாக்கப்பட்டு இங்கே ஒரு நாயை போன்று எனது காலடியில் கிடத்தப்பட்டிருக்கின்றான். எமது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் தங்களது தந்தையர்கள், பாட்டன்களின் வெளியே கூறப்படாத துயரங்களையும், தியாகங்களையும் தங்களது கடந்த கால அனுபவங்களாக நினைவில் கொண்டு பெருமைபட்டுக்கொள்ல முடியும். எங்கள் நாட்டை பாதுகாக்க அச்சமின்ரி போராடிய சரித்திர வீரர்களான துட்டகைமுணு, விஜயபாகு, பாராகிரமபாகு, பெருமைக்குரிய 1ம் ராஜசிங்கன், பெருமைக்குரிய 1ம் விமலதர்மசூரியன் போன்றோரும், காலனித்துவ சக்கித்களுக்கு எதிராக எமது நாட்டின் விடுதலைக்காக போராடிய பெருமைக்குரிய சுதந்திர போராட்ட வீரர்களான மொனரவில ஹெபிட்டிபொல, கங்காலேகொட பண்டா, வீரபுரன் அப்பு போன்றோர் இப்போது எங்களை பார்த்து ஆனந்த கண்ணீர்விடுவார்கள். அதி உச்சளவில் நிச்சயமற்ற நிலையிலும், நிலையற்ற தன்மையிலும் தப்பி பிழைக்க திக்கி திணறிக்கொண்டும் இருக்கும் ஒரு நாட்டுக்கு அச்ச பிளம்புகள் , அபாயம், நிச்சயமற்ற நிலை, நிலையில்லா தன்மை போன்றவை நிரந்தரமாக அணைந்து போகும் இந்த தருனம் எவ்வளவு மகத்தானதாக இருக்கும்?
“தேசத்தின் எதிரியை” இறுதி நிமிடங்கள் வரை தொடர்ந்த ஒரு படைக்குழுவின் தளபதியாக நான் இருப்பதை நினைக்கும் போது என்னை விட பெருமையடைய கூடியவர்கள் யாருமே இருக்க முடியாது. ஒரு இரக்கமற்ற மனிதனை அழித்த மகிழச்சியில் ஆர்ப்பரிக்கும் தீரமிக்க படையினரின் தலைவனாக நீங்கள் எனது காலணிக்குள் எனது இடத்தில் நின்று கொண்டிருந்ததால், அந்த மகிழ்ச்சி ஆரவாரத்தையும் அவர்கள் கண்களில் ஆனந்தத்தையும் பார்த்திருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? என்னுடைய சப்பாத்துக்கள் என்னுடைய இடத்தில் நீங்கள் நிற்பதாக ஒருமுறை கற்பனை செய்து பாருங்கள். இப்படியொரு அனுபவத்தை பெறும் பாக்கியம் மீண்டும் ஒருதடவை எனது வாழ்நாளில் வருமா என்ன? இந்த அதி உன்னத மறக்கமுடியாத தருனத்தை நினைக்கும் போதெல்லாம் அந்த தேசபக்தி பாடலின் முதல் நான்குவரிகளும் என்மனதில் வராமல் போகாதே. அனைத்து அதிகாரிகள், படையினர், பெரும் சமர்களை வழிநடத்திய எனது சகாக்களான படையணி தளபதிகள், இராணுவதளபதி லெப்டினண்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள் என்னுடைய முன்னாள் கட்டளை அதிகாரியும் பாதுகாப்பு செயலளருமாகிய கோத்தபாய ராஜபகச, வளைக்கவே முடியாத, உத்வேகத்தை கொடுக்கும் தலைமையை எங்கள் எல்லோருக்கும் வழங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இந்த வெற்றியை அடைவதற்காக பங்களிப்பு செய்தவர்கள் என அனைவருமே அந்த தேசபக்தி பாடலில் இந்த நான்கு வரிகளையும் பெருமையோடும் திருப்தியோடும் மீட்டிக்கொள்ளலாம்.
”இறுதி மூச்சை அச்சமின்றி விட்டிடவே
அமைதியான மனதுடன் சாந்தியடைந்தியடைய
ஒரு மனிதனாக எனது கடமைகளை செய்வதால்
தெளிந்த மனசாட்சியோடு மரணத்தை எதிர்நோக்குவேன்”

Rajh Selvapathi

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...