Road to Nandikadal !

அத்தியாயம் 2: பிரபாகரன்
——————————————-
ஈழப்போரின் கடைசி பகுதியில் ( 4வது ஈழப்போர்) அச்சு, இலத்திரனியல் ஊடகவியளார்கள எம்மை சூழ்து கொண்டு எமது நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் வெளியுலகத்துக்கு நன்கு வெளிச்சம்போட்டு காட்டிக்கொண்டிருந்தார்கள். தனிப்பட்ட ஊடக வெளிச்சம் மீதான எனது ஒவ்வாமையை அவர்கள் நன்கு அறிந்தும் இருந்தார்கள். இருந்தாலும் போர்களங்களின்உண்மையில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பான ஆககூடுதளான தகவல்களை வெளியே கூறவேண்டும் என்கின்ற எனது ஊடகங்கள் மீதான கொள்கை மற்றும் நோகத்தின்படி போர்க்களங்களின் என்ன நடக்கின்ரது என்பதை வெளியே கூறி அதற்கான அங்கிகாரத்தை பெறும்வகையில் ஊடகவியலாளர்கள் நடந்து கொள்வதையும் உருதிசெய்திருந்தேன். எனது படையணியுடன் இணைந்துகொண்ட iTN செய்தியாளர் சுஜித் விதானபத்திரன போர்க்களங்களில் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் பொருட்படுத்தாது துணிச்சலுடன் போர்களங்களில் முன்னரங்கில் நடப்பவற்றை யதார்தமாக ஒளிபரப்புகள் செய்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றாவராகியிருந்தார். என்னுடை ஒரு சிறு செவ்வியையாவது பெற்றுக்கொள்வதற்கு அவர் என்னிடம் பல தடவைகள் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் தனிப்பட்டரீதியில் புகழ் அடைவதில் எனக்கு ஈடுபாடு கிடையாது என்பதால் நான் அதனை மறுத்து இருக்கின்றேன். : தம்பி நான் ஏதாவது ஒன்றை பெரிதாக செய்யும் போது சிறு செவ்வி என்ன? அதிரும் வகையிலேயே உனக்கு பேட்டி கொடுக்கின்றேன்.” என அவருக்கு கூறியிருக்கின்றேன்.
பிரபாகரனின் இறந்த உடலின் மீது நான் ஏறி நின்ற அந்த நாளில் அவர் என்னிடம் வந்து “ சேர் இதைவிட இனியொரு அற்புதமான தருனம் வரப்போவதில்லை. நீங்கள் வாக்களித்தபடி இன்று எனக்கு பேட்டி தாருங்கள்” என கேட்டார். என்னுடைய இராணுவ சேவையிலும் தனிப்பட்ட வாழ்விலும் அது உண்மையிலேயே ஒரு மகத்தான தருனம்தான். பெரும் நிம்மதியோடு மகிழ்ச்சி பொங்கும் நிலையில் இருந்த நான் என்னுடைய சக இலங்கையர்களுக்கும், உலகத்துக்கும் எனது எண்ணங்களை பகிர்ந்துகொள்ள இணங்கினேன். எனது செய்தி பெரியலவில் பரவிவியதும் உலகெங்கிலும் இருந்தும் வந்த வாழ்த்து மழை எனனை மூழகடித்துவிட்டது. தன்னிச்சையாக எனது இதயத்தில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் எனது உண்மையான உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தியிருந்தன.
“பல்லாயிரக்கணக்கான பெற்ரோர்கள் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளனர்,
பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்துவிட்டனர்,
பல்லாயிரக்கணக்கன பெண்க தங்கள் கணவர்களை இழந்துவிட்டனர்,
இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருந்த அந்த மனிதன்,
இலங்கை வரலாற்றிலேயே முன்னெப்போதும் பிறந்திராத மிக கொடிய அந்த மனிதன்,
இன்று எமது கம்பீரமான இராணுவ படையினரால் கொல்லப்பட்டுவிட்டான்.”
.
மக்களை பயங்கரவாதிகளாக்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் எழுத்தராக பணிபுரிந்த கரையார சாதியை சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் ஒரு மகனாக வல்வெட்டிதுறையில் பிறந்த்திருக்கின்றார். தன்னுடைய வாழ்ந்நாளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தவிர ஏனைய ஜனாதிபதிகளான J.R.ஜெயவர்த்தன், R. பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என அனேகமாக ஏனைய அனைத்து தலைவர்களையும் தன்முன்னே மண்டியிட செய்யத ஆற்றலும் சக்கியும் தன்னகத்தே கொண்டவராக பிரபாகரன் இருந்திருக்கின்றார். படிப்பறிவற்றவராக இருந்தாலும் முழு புலம்பெயர் தமிழர்களையும் தன்னை சுற்றியும் ஈழ கோட்பாட்டை சுற்றியும்அணிவகுக்குமாறு செய்திருந்தார். கொடிய போரில் தொடக்கம் முதல் இறுதிவரை போரிட்ட ஒரு அதிகாரி என்கின்ற வகையில் இந்த மனிதனின் நடத்தையை நான் நன்கு கற்றிருக்கின்றேன். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தாலும் இவர் ஒரு சாதாரன மனிதன் கிடையாது என்பதை உணர்ந்திருந்தேன். சில சிறப்பான தகுதிகளும், ஆற்றல்களையும் பண்புகளையும் கொண்டிருந்தார். குடும்ப கௌரவத்தில் ஒப்பீட்டளவில் சாதாரணமானவராக இருந்திருந்தாலும் அரசியல் மற்றும் தீவிரவாதங்கள் மீதான தந்து ஈடுபாட்டை தொடர்வதற்காக தனது 13 வயதிலேயே கல்விகற்பதை கைவிட்டுவிட்டார்.

( மிகுதியை இனித்தான் மொழிபெயர்க்க வேண்டும்)

Rajh Selvapathi

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...