இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: ராஜபக்ச கட்சி அபார வெற்றி !

இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபக்ச தலைமையிலான இலங்கை மக்கள் முன்னணி (எஸ்எல்பிபி) கட்சி ஒட்டுமொத்தமாக 44.65% சதவீத வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் 341 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இலங்கையில் உள்ள 24 நகராட்சி கவுன்சில்கள், 41 ஊரக கவுன்சில்கள், 275 பிரதேசிய சபாக்கள் என பல்வேறு உள்ளாட்சி அமைப்பகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.
இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா கட்சி அல்லது இலங்கை மக்கள் முன்னணி, அதிபர் சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி, தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், 341 கவுன்சில்களுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெருமுனா(எஸ்எல்பிபி) கட்சி 222 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜபக்சவின் கட்சி 4,941,952 வாக்குகள் பெற்று 3369 இடங்களையும், ஐக்கிய தேசிய கட்சி3,612,259 வாக்குகளைப் பெற்று 2385 இடங்களையும் பெற்றதாக செய்தி தெரிவிக்கிறது. ஒட்டுமொத்தமாக ராஜபக்சவின் கட்சி 44.65% சதவீத இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் சிறிசேனவின் இலங்கை மக்கள் கட்சி 7 ஊரக கவுன்சில்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி 41 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 34 இடங்களிலும் வென்றுள்ளன.
கடந்த 2015-ம்ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் தோல்விக்கு பின் ராஜபக்ச கட்சிக்கு மீண்டும் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவருக்கு அங்குள்ள சிங்கள, புத்தமத சமூகத்தினர் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு இந்த தேர்தலில் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது ஆதரவாளர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”இந்த வெற்றியை மிகவும் அமைதியாக கொண்டாடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ராஜபக்ச கட்சிக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி அந்த நாட்டின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, பிரதமர் விக்ரமசிங்கேயை பதவிவிலகக் கோரி மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமரவைக்கவும் நெருக்கடி அளிக்க வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

x

Check Also

New laws to recover massive losses Presidential statement on bond probe commission report

* PTL profits in secondary market exceed Rs.11 bn * Cases ...