அவர் எழுத்தாளர் அல்ல. போர்க்களத்தில் நின்றுபோரிட்ட இராணுவ தளபதிகளில் ஒருவர். கடைசிநாள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இவரது தலைமையிலான படையினராலேயே நடத்தப்பட்டன.

19 மே 2009, காலை 7.00 எனது தொலைபேசி மணி சத்ததை கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நான் விழித்துக்கொண்டேன். மறு முனையில் அழைத்தவர் எனது நண்பரும், அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவருமான ஜாலியா விக்ரமசூரிய. “ கமால், பிரபாகரனுக்கு என்ன நடந்து?” இதுவே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. நான் வழமை போலவே “ எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என பதிலளித்தேன். அவருடைனான உரையாடலை தொடர்ந்து கேணல் ரவிபிரிய, லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே ஆகியோரை அழைத்து 4வது விஜயபாகு படையணியினரை அனுப்பி சதுப்பு நிலக்காடுகளை முழுமையாக ஒரு இடம் விடாமல் தேடுமாறு அறிவுறுத்தினேன். இன்னும் 7 அல்லது 8 பயங்கரவாதிகள் அங்கே பதுங்கி இருக்கலாம், நாங்கள் இறந்து போன எல்ல பயங்கரவாதிகளினதும் உடல்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றவில்லை என எனக்கு உள்ளுணர்வு ஓடிக்கொண்டிருந்தது. காலை 9.00 மணிக்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்த போகின்றார் என கேள்விபட்டேன். அதனை தொலைக்காட்சியில் பார்ப்பது எனவும் முடிவு செய்திருந்தேன். படையினர் காலை உணவுக்கு பால்சோறு சமைத்திருந்தனர். அவற்றில் இரண்டு மூன்று துண்டுகளை எடுத்துக்கொண்டு பாராளுமன்றில் நடப்பதை பார்ப்பதற்காக தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தேன். ஜனாதிபதி பாராளுமன்றத்தினுள் கம்பீரமாக உரையாற்ற தொடங்கினார். சில நிமிடங்களுக்குள்ளாகவே என்னுடைய CDMA தொலைபேசி அழைத்து. மறுமுனையில் கேணல் ரவிபிரிய.” சேர் சதுப்பு காட்டுக்கு அருகில் ஒரு பிரச்சினை, விரைவாக வாருங்கள்” என அழைத்தார். போர் உத்தியோகபூர்வமாக முடிவடைந்திருந்தாலும் இப்படியான் சிலவற்றை நான் எதிர்பார்த்திருக்க வேண்டியிருந்தது. பாதி சாப்பிட்ட நிலையில் உணவையும் தொலைகாட்சியையும் விட்டு என்னுடைய லாண்ட் ரோவர் வாகனத்தில ஏறி அந்த சதுப்பு பற்றை காட்டு பகுதிக்கு விரைந்து சென்றேன்.

நான் அங்கே சென்றடைந்த போது “ சேர், சதுப்புபற்றைகளினுள் இன்னும் சில பயங்கரவாதிகள் ஒழிந்துள்ளதாக எம்முடைய 4வ்து விஜயபாகு படையினர் கூறுகின்ற்னர்” என கேணல் ரவிப்பிரிய என்னிடம் கூறினார். படையினருடன் நின்றிருந்த லெப்டினண்ட் கேணல் லாலந்த கமகே அழைத்து எவரும் தப்பி செல்ல முடியாதவாறு அந்த பகுதியை சுற்றி வளைக்குமாறு அறிவுறுத்தினேன். மேலும் கடைசி கசப்பான முடிவு வரை அவர்கள் உங்களை தாக்ககூடும் என்னுடைய பெடியல் ( பையன்கள்) கடைசி நேரத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்வதை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவதானமாக செய்ற்படுங்கள் என அவர்களை எச்சரித்தும் இருந்தேன். ஏற்கனவே படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்திருந்ததால் நான் அவர்களுக்கு அறிவுறுத்திய சில நிமிடங்களுக்குள்ளாகவே அங்கே மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதலை தொடங்கிவிட்டனர். எதிர்பாராத விதமாக தாக்குதல் மிக மோசமான நிலையை அடைந்தது. பயங்கரவாதிகள் மிக குறுகிய இடத்தினுள் சுற்றி வளைக்கப்பட்டு இருந்த்ததால் எம்மால் ஆட்டிலரி அல்லது மோட்டார் தாக்குதலை நடாத்த முடியாமல் இருந்தது. எனவே 4வ்து விஜயபாகு படையினருக்கு தங்களது இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தங்களது தனிப்பட்ட ஆயுதங்களுடனுமே அந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டி இருந்தது. சில நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவு பயங்கரவாதிகள் அங்கே மறைந்திருந்தது தெளிவாகியது. தாக்குதலை தொடங்குவதற்கு முதல் அவர்களை சரணடையுமாறு அறிவிப்பு செய்தோம். எங்கள மீதான தாக்குதலையே அவர்கள் அதற்கு பதிலாக கொடுத்ததனால் அவர்களை தாக்கி அழிப்பதை தவிர எங்களிடம் வேறு தெரிவுகள் எதுவும் இல்லாமலேயே போய்விட்டது.

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ( Road to Nandikkadal)

Rajh Selvapathi
x

Check Also

‘Orumiththa Nadu’ and ‘Ayikkiya Nadu’ is mere word play TNA deceiving the people with word games!

The Jaffna District MP, former Minister and the Leader of the ...