போலி செய்திகளை எதிர்கொள்ளுதல்: தேவை கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் !

நாம் எங்கிருந்தாலும் நம்மோடு உலகம் பேசுவதற்கும் நாம் உலகத்தோடு பேசுவதற்கும் நவீன மின்னணு ஊடக பயன்பாடுகளை மெச்சத்தான் வேண்டும். ஆனால் அதில் சில சமயங்களில் பொய்யான தகவல்களும் வந்து விழுகின்றன. பல நேரங்களில் அதை உண்மை எனவும் நாம் நம்பிவிடுகிறோம்.

இந்தியர்கள் மற்றும் ‘இந்திய தேசிய கீதம்’ ஆகியவை யுனெஸ்கோவின் சிறந்த தேர்வாக இருப்பது இணையத்தில் ஒரு பொதுவான செய்தியாக பரவியது. இந்த தவறான தகவல்கள் தீங்கற்றதாக இருந்தாலும்கூட, இன்று நாம் சந்திக்கும் பெரிய அச்சுறுத்தலாக இப்பொய்ச் செய்திகள் உள்ளன. தற்காலத்தில், டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் வருகையினால் போலியான செய்திகள், அரசியல் மற்றும் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவை பரவிக் கிடக்கின்றன.

உதாரணத்திற்கு கடந்த சில நாட்களில் ஒரு செய்தி வந்தது. புகழ்பெற்ற தென்னிந்திய திரையிசை பாடகி பி.சுசிலாவைப் பற்றிய ஒரு வதந்தி. அவரும் அமெரிக்காவிலிருந்து தான் நலமாக இருப்பதாக ஒரு செய்தியை வெளியிட்டு ரசிகர்களை நிம்மதியில் ஆழ்த்தி கவலையிலிருந்து விடுவித்தார். ஆனால் அவரது மறுப்பு வரும்வரையில் எவ்வளவு பதட்டம், எவ்வளவு வருத்தங்கள்..

மட்டுமீறிவரும் தவறான தகவல்கள்

ஹார்வர்டில் உள்ள மீடியா, அரசியல் மற்றும் பொது கொள்கை பற்றிய ஷரோன்ஸ்டீன் மையத்தின் ஒரு பகுதியாக தற்போது பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான கிளாரே வார்டில் வெளியிட்டுள்ள தனது முதல் அறிக்கை, இந்த மாதிரி தவறான தகவல்களை ஏழு பிரிவுகளாகபிரிக்கிறது.

அதாவது நையாண்டி அல்லது பகடி, தவறான உள்ளடக்கம், ஏமாற்றும் உள்ளடக்கம், கட்டுக்கதை போன்ற உள்ளடக்கம், தவறான இணைப்பு, தவறான உள்ளடக்கம் மற்றும் சூழ்ச்சித்திறன் உள்ளடக்கம் என ஏழுவகையாகப் பிரிக்கிறது.

இந்த வடிவங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ளன என்றாலும், கற்பனை மற்றும் தவறான தகவல்கள் பொதுநீரோட்டத்தில் கலந்துவிடுகின்றன, இது வன்முறைகளை உருவாக்கவும் மற்றும் சமூகத்தை பாதிக்கவும் செய்யும். டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற சக்திவாய்ந்த தளங்களில் போலி மற்றும் தவறான செய்திகள் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

சக்திவாய்ந்த தளங்களில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களின் எழுச்சி போலி மற்றும் தவறான செய்திகளின் விளைவை பெரிதாக மாற்றியுள்ளது. பாரம்பரிய ஊடகங்கள் போல் அல்லாமல் ஏதோ சில எண்ணிக்கையிலான செய்திகள்/தகவல்களின் வலைதளங்களில் செல்வது அவ்வளவு எளிதல்ல.

வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள்

தலைவர்களை/கட்சிகளை குறைகூறும் எதிர்சிந்தனைக் கருத்துக்களைப் பதிவிடுபவர்களால் வகுப்புவாதப் பிரிவினைகள் ஆழமாகும். அதன் கருத்துக்கள் கடந்த சில ஆண்டுகளாக வெறுப்பை உமிழும் வேலையை செய்துவருகிறது. கூடுதலாக, சிலரது தவறான சிந்தனைகளால் சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது. இத்தகையப் பொய்ச்செய்திகள் மிக வேகமாக பரவுகிறது.

இத்தகைய பொய்ச்செய்திகளின் அடிப்படையில் தலைவர்கள் / குழுக்கள் மீது கண்டனங்கள் உருவாகவும் குறைகூறும் சாத்தியங்கள் ஏற்படுகின்றன. பொய்ச்செய்திகளால் வகுப்புவாத பிளவு மேலும் அதிகரிப்பதோடு வெறுப்புணர்வும்  தூண்டப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இது பெருகிவருகிறது.

கடந்த காலத்தில், இந்தியாவில் வகுப்புவாத வன்முறை என்பது ஓர் உள்ளூர் பிணைப்பாகவே மாறியிருந்தது. இன்று, அது பரவலாக இணையத்தில் ஊட்டி வளர்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஆன்லைன் மற்றும் மொபைல் தளங்களில்வழியே ஆத்திரமூட்டும் உள்ளடக்கம், தவறான தகவல், உள்நோக்கத்தோடு வெளியிடப்படும் புனைவு வீடியோக்கள் மற்றும் படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன. பெரும்பாலும் இத்தகைய நோடல் ஏஜென்ஸீக்களைப் போன்ற இணைய தளங்கள் விஷயம் சரியானதுதானா அல்லது விஷமமானதா என்று சரிபார்க்காமலேயே வெளியிடுகின்றன.

பெரிய எண்ணிக்கையில் ‘க்ளிக்’

உலகெங்கிலும் உள்ள ஊடக ஆய்வாளர்கள் இப்படி வெளியிடப்படும் போலி செய்திக் காட்சிகளை விசாரிக்கும்போது, படைப்பாளர்களிடமும் அதற்குப் பின்னால் உள்ள உள்நோக்க செயல்கள் பற்றிய சிறிய அளவிலான நம்பக தகவல்கள் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் எண்ணற்ற இணைய தளங்கள் தலைப்புச் செய்திகளை க்ளிக் செய்வதன்மூலம் மட்டுமே போலி செய்திகளை விற்பனை செய்ய அமைக்கப்பட்டுள்ளன. இதை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மை என்னவென்றால், பெரிய எண்ணிக்கை அளவில் ‘கிளிக்’ செய்வோர்களால் கிடைக்கும் விளம்பரங்களின் வாயிலாக பணம் சம்பாதிப்பது முதன்மைநோக்கமாக உள்ளது, அடுத்ததாக மக்களை தொடர்ந்து வாசிப்பதற்கும் தக்கவைத்துக் கொள்ளவும் அரசியல் மற்றும் பிற சமூகக் குழுக்களால் இவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை சமூக ஊடகங்களின் பக்கங்களோடு இணைத்து வைரலாகும் வகையில் நன்கு நிர்வகிக்கப்பட்டு வருபவையாகும்.

கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை உள்ளடக்க விநியோகத்திற்கான மிகப்பெரிய தளங்களாக, போலி செய்திகளை வடிகட்டக்கூடிய அமைப்புகளை உருவாக்குபவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த முயற்சிகள் ஒப்பீட்டளவில் புதியவை. இந்தியாவில் வாட்ஸ்அப் இணையதளம், இப்பொழுதும் குறியீட்டுச் சொற்களை மறைக்கும் சுதந்திரத்தில் சமரசம் செய்துகொள்வதற்கான தொழில்நுட்பத்தை விலக்கிவிடுகின்றன. அதன் மூலம் போலி செய்திகளின் பரவலை களைவதற்கான அவசரத் தேவையை முடுக்கிவிட்டுள்ளது. போலி செய்திகளின் மிகப்பெரிய ஒதுக்கலை வாட்ஸ்அப் இணையதளம் செய்துவருகிறது.

பொறுப்பேற்பவர்கள் இல்லை

போலி செய்திகளின் வருகை புதியதாகவோ அல்லது அண்மைக்காலமாகவோதான் என்பதில்லை. இணைய தளங்கள் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மக்கள் இலவசமாக பெறத் தொடங்கியதிலிருந்து இத்தகைய செய்திகள் மக்களை அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துவிட்டது. இணைய தளங்களைப் பயன்படுத்துவோர் வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தை உருவாக்குவதோடு அதை பகிர்ந்துகொள்ளவும் செய்தால், இந்திய தண்டனைச் சட்டத்தின் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம்.

ஆனால் இணைய தளம் என்பது பரந்துவிரிந்த ஒரு ஊடகம். மக்களில் இதை யார் செய்தது என்பதைக் கண்டறிவது கடினம். மைய நீரோட்ட ஊடகங்களைப் போலன்றி விரிவான கட்டுப்பாடுகளுக்குள் இது வரையறுக்கப்படும், பிணைப்பு விதிகளின் பற்றாக்குறையின் காரணமாக, ஆன்லைன் தளங்களில் தவறான வழிமுறைக்கு வாய்ப்பு உள்ளது. மற்றும் போலி செய்தி தளங்களின் விஷயத்தில் உரிமையாளர்களும் ஆசிரியர்களும் தங்கள் தளங்களை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதற்கான திறன் கொண்டிருக்கிறார்கள்.

போலி செய்திகள் உருவாக்குபவர்களின் முக்கிய பலம்

அத்தகைய முக்கியமான தகவல்கள் இல்லாத நிலையில், அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்த புரிதலே இருக்காது. அதே நேரத்தில் குறிப்பிட்ட தகவல்கள் குறித்த நம்பகத்தன்மையையும் இருப்பதுபோல தங்கள் தளங்களை வைத்திருப்பார்கள். இது போலி செய்திகள் உருவாக்குபவர்களின் முக்கிய பலம், தன்னை யார் என்றே காட்டிக்கொள்ளாத அவரது திறமைதான்.

பொய்ச் செய்திகளின் முக்கிய பலமே அதை உருவாக்குபவர்கள்தான். ஒரு செய்தி ஊடகத்தின் முகமூடிக்குள் இருந்துகொண்டு அதை உருவாக்கும் திறமை அவருக்கு உண்டு. பெரும்பாலான டிஜிட்டல் ஊடகங்கள், அவர்களது வெளியீட்டாளர் அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஊர், தெரு முகவரி,ஆகியவற்றைப் பற்றிய அடிப்படை தகவல் இல்லை. இணைய தளம் தொடங்குதவதற்கான பதிவு விவரங்களை உறுதிபட தெரிந்திருந்தால் போதும் அதற்கான அடிப்படை விதிமுறை வரையறைகளைக் கொண்டு சிறப்பாகவே நாமும் ஒரு இணையதளம் தொடங்கி நடத்த முடியும்.

கடந்த சில மாதங்களில், பல்வேறு மாநிலங்களில் தனித்தனி சம்பவங்கள் பற்றிய உள்ளடக்கங்களை, செய்தி மற்றும் சமூக ஊடகத் தளங்களில் மக்கள் பதிவு செய்துள்ளனர். சில சந்தர்ப்பங்களில், வன்முறைகளைத் தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிட்ட இணையதளங்கள் மூடப்பட்டன, தவறான உள்நோக்கத்தோடு வீடியோக்களை பரப்பிய இணையதளங்கள் நிறுத்தப்பட்டன.

கட்டுப்பாட்டுக் கொள்கைகள் தேவை

ஆனால் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கவோ இப்பிரச்சனையை ஆக்கப்பூர்வமாக கையாளவோ ஒரு திறமைமிக்க உள்ளூர்மயப்படுத்தப்பட்ட வழி ஒன்றும் புலப்படவில்லை. இத்தகைய இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை தடுப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களும், கடும் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் தேவை இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

மொபைல் போன்களின் விரைவான ஊடுருவல் மற்றும் இந்தியாவில் சமூக ஊடகங்களின் பயன்பாட்டின் அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, போலிசெய்தி வெளியிடுவது, ஆன்லைன் உலகில் மட்டுமல்லாமல், குறிப்பாக உலகெங்கிலும் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகவும் தேவையற்ற எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது.

ராகேஷ் ரெட்டி டுப்பூடு மற்றும் தேஜஸ்வி ப்ரதிமா தோடா தலைமையில் நடைபெற்ற உண்மை கண்டறியும் ஓர் ஆய்வு .

தமிழில்: பால்நிலவன்

x

Check Also

ஐகோர்: புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்தல்!

ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை தவிர்க்கவியலாதது. அது இரந்து பெறுவதல்ல; தீரம்மிக்க புரட்சிகரப் போராட்டங்கள், பல்வேறு ...