இறுதிபோரில் பொதுமக்களை ஐ.நா காப்பாற்ற தவறியதா?

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் போது ஐ.நாவின் நிலைப்பாடு பற்றி அன்றுதொடக்கம் இன்று வரை தமிழ் ஊடகங்களும், முன்னணி அரசியல் ஆய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரும் மக்களுக்கு தொடர்ந்து தவறான கற்பிதங்களையே செய்துவருகின்றனர். அதாவது பொதுமக்களை மீட்க ஐ.நா எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்கின்ற தொணிபட அவர்களின் வியாக்கியானங்கள் இருந்து வருவதை கடந்த ஏழுவருடங்களாக காணக்கூடியாதாக இருந்து வருகின்றது.

நான்காவது ஜெனிவா உடன்படிக்கையின் பிரகாரமும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் உருப்பு 3ன்படி, பின்வரும் மூன்று விடயங்களில் புலிகள் போர்குற்றத்தில் ஈடுபடுவதாக என ஐ.நா கருதியது.

1.பொதுமக்களை பணயக்கைதிகளாக அல்லது மனித கேடையங்களாக பயன்டுத்தியமை.

2.பொதுமக்கள் நிலைகள் மீதும், தப்பித்து வெளியேற முயற்சித்தவர்கள் மீதும் தாகுதல்கள் நடத்தியமை.

3.கட்டாயமாக பொதுமக்களை போர்க்களங்களில் போரிட அல்லது பணிபுரிய வைத்தமை.

எனவே புலிகளிடம் சிக்கிக்கொண்ட மக்களை மீட்கின்ற அரசின் நடவடிக்கைகளை ஐ.நா மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த்தது. அரசின் இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து மிகுந்த கரிசனையுடன் ஐ.நா செயற்பட்டிருந்ததுடன் அரசுதரப்பினரிடம் அதனை அவ்வப்போது கூறியும் வந்தனர்.

அதாவது புலிகளுக்கு எதிரானபோரில் ஈடுபாட்ட அரசுபடைகள் போர்க்களங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டதையும் அதறகாக அவர்கள் கையாண்ட வழிகளையும் ஐ.நா ஏற்றுக்கொண்டிருந்தது.

இதனை வேறு விதமாக கூறினால் போரில் சிக்கிக்கொண்டவர்களை ஐ.நாவுக்காக மீட்டெடுக்கும் வேலையை அரசு படையினரே மேற்கொண்டனர். அதாவது அரசு படைகளின் உதவியுடன் ஐ.நா பொதுமக்களை மீட்டெடுத்திருந்தது அல்லது காப்பாற்றியது என்பதுதான் அதன் அர்த்தம்.

இறுதிப்போரில் முடிந்தளவுக்கு ஐ.நா மக்களை காப்பாற்றிருந்தது என்பதுதான் உண்மை.

( Article 3, which stipulates that “persons taking no active part in the hostilities … shall in all circumstances be treated humanely … To this end, the following acts are and shall remain prohibited at any time and in any place … (a) violence to life and person, in particular murder of all kinds, mutilation, cruel treatment and torture; (b) taking of hostages; (c) outrages upon personal dignity.”)

Rajh Selvapathi

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...