6 மாதக் காலத்தில் 10 இலட்சம் சுற்றுலாப்பயணிகள்!

இந்த வருடத்தின் 6 மாதக் காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையானது 1 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனவரியிலிருந்து ஜூன் மாதம் வரை 10 இலட்சத்து 10ஆயிரத்து  நானூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக, அச்சபை தெரிவித்துள்ளது.

இதனை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 4.8 வீதம் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. அதாவது கடந்த ஆண்டில் 9 இலட்சத்து அறுபத்தி நான்காயிரத்து இருநூற்றி அறுபத்தி ஏழு சுற்றுலாப் பயணிகளே வருகைத்தந்து இருந்ததாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த 6 மாதக் காலப்பகுதியில் எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி இந்தியாவிலிருந்து 1 இலட்சத்து 72 ஆயிரத்து எண்ணூற்றி தொன்னூற்றி நான்கு சுற்றுலாப் பயணிகளும் சீனாவிலிருந்து 1 இலட்சத்து 34 ஆயிரத்து எழுநூற்றி நாற்பத்தி நான்கு சுற்றுலாபயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஆனால் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதக் காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. காரணம் இக்காலப்பகுதில் நாட்டில் டெங்கு தொற்று நோய் அதிகரித்து இருந்தமை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்​டிருந்தமை என, அச்சபை தெரிவித்தது.

இந்த வருடத்தில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருகை தரச் செய்வதே எமது இலக்காகும். ஆனால் அந்த இலக்கை அடைவது கஸ்ட்டம் என, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...