Monthly Archives: August 2017

காப்புறுதிப் பணம் பெறுவதற்காக ; 89 பவுண் நகைகள் திருட்டு என திட்டமிட்டு பொய் முறைப்பாடு – பொலிஸ் இறுதி விசாரணை அறிக்கையில் தகவல்

சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் யாழில் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை  கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ளவே 89 பவுண் நகைகள் கொள்ளையென கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் திட்டமிடப்பட்ட பொய் முறைப் பாடு என கண்டறியப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7-ம் திகதி திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணி யளவில் நுழைந்த திருடர்கள் ...

Read More »

தொடரும் முஸ்லிம்கள் எதிர்ப்புப் பிரச்சாரம்

முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் சில இணையதளங்களும் , தொலைகாட்சிகளும் செய்திகளை மிகைப்படுத்தியும், திரிவுபடுத்தியும் வெளியிட்டு வர்கின்றன. ஐபிசி தொலைக்காட்சி இதை முன்னின்று செய்து வருகின்றது, இன்னொன்று தீவிர புலிகளின் இணையதளமான பத்திநாசம்.கொம். இந்த இணையதளம் பொய்யான படங்களைப் போட்டு முஸ்லிம்கள் தான் தமிழர்களைக் கொன்றார்கள் என்று செய்திகளை மிகைப்படுத்தி முஸ்லிம்கள் மீது தமிழ் மக்கள் மேலும் வெறுப்புக் கொள்ள வைக்கிறார்கள். முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவில்லையென்ற காரணத்தினால் புலிகள் காட்டுத்தனமான முறையில் முஸ்லிம்களை வெளியேற்றியும் அவர்கலைக் கொன்றும் முஸ்லிம் மக்களை ஆயுதமேந்த ...

Read More »

குற்றத்தைக் கண்டும் காணாமல் இருப்பது பாவத்துக்கு நிகர்!

நல்லாட்சி என்பது, உலக வங்கியின் எண்ணக் கருவாகும். 1989ஆம் ஆண்டு, இந்த எண்ணக் கரு, முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்தது. ஆபிரிக்க நாடுகளின் ஆட்சி நெருக்கடியை அடையாளப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணக்கருவானது, 1990களில் நன்கொடை அமைப்புகளினதும் நாடுகளினதும் முக்கிய கவனத்தைப் பெற்றது. ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், 1990களின் நடுப்பகுதியில் இந்த எண்ணக்கருவின் உள்ளடக்கத்தை விருத்தி செய்தது. ஐ.நா சபை 1992ஆம் ஆண்டு வெளியிட்ட, ‘ஆட்சியும் அபிவிருத்தியும்’ எனும் ஆவணத்தில் இந்த எண்ணக்கரு மேலும் தெளிவுபடுத்தப்பட்டது. நல்லாட்சி என்பதன் பொருள், ஊழல்களையும் ...

Read More »

தாராளமயமாதலும் வணிக, அரசியல் அதிகார கூட்டு முதலாளித்துவமும்!

சிவப்பு குறிப்புகள் 2018     ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான பேச்சு வார்த்தைகளும் ஒதுக்கீடுகளும் நடந்து கொண்டுள்ளன. பிரதமர் விக்கிரமசிங்க, வரவு செலவுத் திட்டத்துடன் அடுத்த சுற்றுத் தாராளமயமாதல் நடக்கும் என்று கூறுகின்றார். பணக்காரர்களுக்கு சாதகமான, தனியார் மயமாதலுக்கான உந்துதலுக்கு எதிரான போராட்டங்களை, தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதற்கு, அரசாங்கம் பொல்லடி, தண்ணீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகை, இராணுவத்தினரின் ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பதில் அளித்து வருகின்றது. அரச சொத்துகளைக் கொள்ளையடிப்பதாக அரசாங்கமும் கூட்டு எதிரணியும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கையில், விவாதங்களில் ஊழல் ...

Read More »

தமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் வகிப்பதில்லை என்கிற முடிவுக்குத் தமிழரசுக் கட்சி வந்திருக்கின்றது. அதன் பிரகாரம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த மருத்துவர் ப.சத்தியலிங்கம், தன்னுடைய பதவியிலிருந்து நேற்றுமுன்தினம், திங்கட்கிழமை விலகியிருக்கின்றார். தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்று, நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அனந்தி சசிதரன், தமிழரசுக் கட்சியின் அனுமதியில்லாமலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரனால் அண்மையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அனந்தியைத் தமது கட்சி சார்பு அமைச்சராகத் தமிழரசுக் கட்சி கருதவில்லை. அதைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா முதலமைச்சரிடம் ...

Read More »

நிதானமாக யோசித்துப் பார்த்தால்…

ஒரு விஷயம் பரபரப்பாக தோன்றுவதும் பின்னர் நிதானமாக யோசித்துப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்பதும் மிகவும் தாமதமாகவே நமக்குத் தோன்றிவிடுகிறது. உதாரணமாக பிக்பாஸ். பொழுதுபோக்கு ஊடகத்தைப் பொறுத்தவரை ஒரு டிவி நிகழ்ச்சியின் வெற்றி உறுதி என்பது அது ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே பலவகையில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட வேண்டும். ”நம் எல்லோருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. உங்களைச் சுற்றி 64 கேமராக்கள்…. நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி… வீட்டில் ஒரு முகம், அலுவலகத்தில் ஒரு முகம், நண்பர்களிடத்தில் ஒரு முகம், பொது இடத்தில் ஒரு ...

Read More »

வன வள அலுகாரியை வெட்டி விட்டு தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்!

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முட்கொம்பன் – செக்காலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரம் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைப் பிடிக்கச் சென்ற வன வள அலுவலகர்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இவர்களில் ஒருவரை மரம் அரியும் இந்திரத்தினால் வெட்டியும் மேலும் சிலரை தாக்கிவிட்டும் சட்டவிரோதமாக மரம் வெட்டியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவமானது வௌ்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வன வள திணைக்களத்தின் பூநகரி வட்டார அலுவலகத்தில் இருந்து, அதிகாரிகள் சிலர் சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்கு, கள விஜயம் மேற்கொண்டுள்ளனர். ...

Read More »

‘ஓவியா’க்களின் பலம் என்பது.. பிக்பாஸை முன்வைத்து காதலெனும் சிந்தனைவெளி !

ஒரு பெண்ணை ‘போடி, போடீ’ என்றும், ஆணை ‘போடா!’ என்றும் வெகு இயல்பாக திட்டி கோபம் காட்டிய பெண்ணை ஒட்டு மொத்தமாய் நேசித்திருக்கிறார்கள். அந்தப் பெண் அப்படியொரு கோபத்தை வெளிப்படுத்த காரணமான பெண்ணை வெறுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை நேசிக்கப்பட்டவர் வெளியேறியதும், வெறுக்கப்பட்டவரும் வெளியேற்றப்பட்டதும்தான். ஓவியாவின் வெளியேற்றத்தில் சமூக நீதியும், உண்மையும், சமூகத்தின் வக்கிரப் போர்வையும் படிந்தே இருக்கிறது. இதில் ‘பிக்பாஸ் ஓவியா’ என்பது வெறும் குறியீடாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. அதை பற்றிய அழுத்தமான பதிவாக இந்த கட்டுரையை கொள்ளலாம் என்றாலும் கூட அதற்கு முன்னர் ...

Read More »

இனிமேல் போலிச் செய்திகளின் காலம்தானா?

இ து ஃபோட்டோஷாப் யுகம், புகைப்பட வடிகட்டிகளின் யுகம், சமூக ஊடகங்களின் யுகம். முறைதவறி மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்களுக்கு நம்மில் பெரும்பாலானோர் பழகிவிட்டிருக்கிறோம்- புகைப்படத்தில் இருப்பவர்கள் உண்மையில் இருப்பதைவிட மேலும் மெலிதாகவோ, நளினமாகவோ காணப்படுவார்கள்; அல்லது ஸ்னாப்சாட்டில் வருவதுபோல் நாய்க்குட்டிகள்போல் தோற்றமளிப்பார்கள். இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி, ஒலியையும் காட்சியையும் திருத்தியமைப்பதற்கான புதிய வகை தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன. செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்திலும் கணினி வரைகலையிலும் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களால் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன. பிரபலங்களின் காணொலிக் காட்சிகளை இந்தத் தொழில்நுட்பங்களுக்கு உட்படுத்தி அவர்கள் பேசாததையும் பேசும்படிக் காட்ட முடியும். நீர்விளையாட்டுகள்மீது ...

Read More »

இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடு வெற்றி!

இன்று நடைபெற்ற இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகக் களமிறங்கிய வெங்கைய நாயுடு 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இன்று மாலை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பேரனும், முன்னாள் ஆளுநருமாகிய கோபால கிருஷ்ண காந்தியை விட 272 வாக்குகள் அதிகம் பெற்று முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக வெங்கையா ...

Read More »