விஜயகலாவை கைது செய்ய கொழும்பில் ஆர்ப்பாட்டம்! Different murder case! The demonstration in colombo to arrest srilanka Parliament LK Min.Vijayakala

வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...