நயவஞ்சகர்கள் புலிகளா இந்தியாவா? – சலசலப்பு சடகோபன்

2005ம் ஆண்டு இந்திய இராணுவ ஜெனெரல்  B.S.தாக்கெர் இலங்கை விமானப்படையில் ஹெலிகொப்டரில் வவுனியா முன்னரங்க எல்லைக்கு விஜயம் செய்து மேஜர் ஜெனெரல் வஜிரா விஜயவர்த்தன, பிரதம தளபதி மேஜர் ஜெனெரல் சரத் பொன்சேகா, மேஜர் ஜெனெரல் சுசில் சந்திரபால, மேஜர் ஜெனெரல் நந்தா மல்லவாராய்ச்சி ஆகிய ,இராணுவ தளபதிகளைச் சந்தித்தார். அவரது விஜயம் நட்பு ரீதியாக இருந்தது.அவரது விஜயம் நடந்து 4 வருடங்களின் பின்னர்தான் புலிகள் அழிக்கப்பட்டனர். இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது அவர் வ‌வுனியா செல்லவில்லை.
அதி தீவிர புலி ஆதரவு இணையதளங்களில் ஒன்றான விவசாயி.கொம் வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 2500 இந்தியப்படைகள் கொல்லப்பட்டார்களாம். அதற்கு பழிவாங்கலாக சரணடைந்த புலிகளை இந்தியப்படைகள் நயவஞ்சகமாக கொன்றுவிட்டதாம்.

புலிகளை அழிப்பதற்கு இந்தியா தொழில் நுட்ப உதவிகளை வழங்கியது என்பது உண்மை. புலிகளின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் , நேரடி தொலை தொடர்பு தொழில் நுட்ப உதவிகளை இந்தியா வழங்கியிருந்தது. ஆனால் இறுதி யுத்ததில் வன்னியில் இந்தியப்படை நின்று போரிட்டது என்பது புலிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் செய்தியாகும்.

இந்தியப் படைகள் இறுதி யுத்தத்தில் பங்குபற்றின என்பதை புலிகளால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியாது. 2500 இந்தியப்படைகள் புலிகளால் கொல்லப்பட்டிருந்தால் அதில் ஒரு இந்திய இராணுவத்தின் உடலைக் கூட ஆதாரமாக புலிகளால் காண்பிக்க முடியவில்லை.

இலங்கை இராணுவம் புலிகளுட‌ன் இரகசியமாக யுத்தம் செய்யவில்லை. இலங்கை இராணுவம் யுத்தம் செய்யும் காட்சிகள் உடனுக்குடன் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அனைத்துப் படைப்பிரிவுகளும் யுத்தம் செய்யும் காட்சியை உலகம் நேரடியாக பார்த்தது. ஒரு இந்திய இராணுவச் சிப்பாய்கூட இலங்கை இராணுவத்துடன் நின்றிருக்கவில்லை.

உலகின் நாலாவது இராணுவத்தை விரட்டினோம், புலிகளை யாரும் அசைக்கமுடியாது, பிரபாகரன் உயிருடன் பிடிபட மாட்டார் என்று மார்தட்டிய புலிகளை இலங்கை இராணுவம் தனித்து நின்று அழித்தது என்பது புலி ஆதரவாள‌ர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று. “மீசையில் மண்படாதவன்” கதை போல புலிகளை இலங்கை இராணுவம் தோற்கடிக்கவில்லை, பல நாடுகள் சேர்ந்துதான் அழித்தன என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

யார் நயவ‌ஞ்சகர்கள் ?

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கிறோம் என்று ஆயுதங்களை ஒப்படைப்பது போலப் பாசாங்கு காட்டி பிரேமதாச அரசுடன் சேர்ந்து இந்தியாவுடன் யுத்தம் செய்தது நயவஞ்சகம் இல்லையா?

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்போது கிழக்கு மாகாணத்தில் வாசுதேவா உட்பட புளொட் இயக்க உறுப்பினர்களைக் கொன்றது நயவஞ்சம் இல்லையா?

புலேந்திரன் குமரப்பாவோடு 14 பேரை சிறையில் வைத்து கொன்றது நயவஞ்சகம் இல்லையா?

ராஜிவ்காந்திக்கு மாலை போடுவது போல பாசாங்கு செய்து அவரைத் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொன்றது நயவஞ்சகம் இல்லையா?

பிரேமதாசாவுடன் நட்புறவு காட்டி நம்பவைத்து மனித வெடிகுண்டினால் கொன்றது நயவஞ்சகம் இல்லையா?

வெளிநாட்டு மத்தியஸ்தர்களை வைத்து சமாதானம் பேசுவது போல நடித்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் கடத்தி சகோதரப் படுகொலைகளையும் அரசியல் படுகொலைகளையும் செய்தது நயவஞ்சகம் இல்லையா?

அமிர்தலிங்கம் , யோகேஸ்வரனிடம் பேசச் சென்றதுபோல அவர்களை நம்பவைத்துக் கொன்றது நயவஞ்சகம் இல்லையா?

பாயாசத்துக்குள் நஞ்சு கலந்து நித்திரையில் வைத்துக் கொல்வது நயவஞ்சகம் இல்லையா?

ஆரம்பகாலம் தொட்டே மாற்று இயக்க உறுப்பினர்களையெல்லாம் புலிகள் கொன்று தள்ளியது நயவ‌ஞ்கமாகத்தானே

அரசியல் தலைவர்கள்மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றது எல்லாமே நயவஞ்சக‌ம் தானே?

நயவஞ்சகத்துக்குப் பேர்போன புலிகள் இயக்கம் ஏனையவர்கள் மீது நயவஞ்சகப் பழிபோடுவது வேடிக்கையானது.

புலி ஆதரவு இணையதளத்தில் வெளிவந்த இந்தப் படங்களில் காணப்படும் இந்தியப் படையினர் இலங்கையில் அல்ல, மியன்மாருக்குச் சென்ற படையினர் ஆவார்கள்.புலிகள் அழிக்கப்பட்டு 8 வருடங்களாகியும் புலி ஆதரவாள‌ர்களின் பொய்ப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது

 

 

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...