காப்புறுதிப் பணம் பெறுவதற்காக ; 89 பவுண் நகைகள் திருட்டு என திட்டமிட்டு பொய் முறைப்பாடு – பொலிஸ் இறுதி விசாரணை அறிக்கையில் தகவல்

சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் யாழில் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்து அதன் பிரதியை  கனடா நாட்டில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ளவே 89 பவுண் நகைகள் கொள்ளையென கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் திட்டமிடப்பட்ட பொய் முறைப் பாடு என கண்டறியப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7-ம் திகதி திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணி யளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகா மம் பொலிஸ் நிலையத்தில் அடுத்தநாள் முறையிடப்பட்டிருந்தது.
இதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாகவும் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்த தாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகா மம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ. எதிரிசிங்க தலைமையில் தொடர் விசார ணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் பொலிஸாருக்கு விரைந்து நடவடிக்கை களை மேற்கொள்ளுமாறும்  உயர்மட்டத்திலிரு ந்து பாரிய அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இத்தொடர் விசாரணைகளின் போது முறைப்பாடு தொடர்பாக 6 பேரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எதிர் வரும் 16-ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதன்போது விசாரணையின் அடிப்படையில் நகைகள் கொள்ளையிடப்படவில்லை என்பதால் பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொடிகாமம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல். வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது. பொய் முறைப்பாடு செய்தவர்களை நீதிமன்ற உத்தரவின்றி மேலதிக நடவடிக் கைக்கு உட்படுத்த முடியாது.
எனினும் நீதிமன்ற அறிவுறுத்தலுக்கமைய இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...