தொடரும் முஸ்லிம்கள் எதிர்ப்புப் பிரச்சாரம்

முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் சில இணையதளங்களும் , தொலைகாட்சிகளும் செய்திகளை மிகைப்படுத்தியும், திரிவுபடுத்தியும் வெளியிட்டு வர்கின்றன. ஐபிசி தொலைக்காட்சி இதை முன்னின்று செய்து வருகின்றது,

இன்னொன்று தீவிர புலிகளின் இணையதளமான பத்திநாசம்.கொம். இந்த இணையதளம் பொய்யான படங்களைப் போட்டு முஸ்லிம்கள் தான் தமிழர்களைக் கொன்றார்கள் என்று செய்திகளை மிகைப்படுத்தி முஸ்லிம்கள் மீது தமிழ் மக்கள் மேலும் வெறுப்புக் கொள்ள வைக்கிறார்கள்.

முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவில்லையென்ற காரணத்தினால் புலிகள் காட்டுத்தனமான முறையில் முஸ்லிம்களை வெளியேற்றியும் அவர்கலைக் கொன்றும் முஸ்லிம் மக்களை ஆயுதமேந்த வைத்தவர்கள் புலிகள். புலிகள் முஸ்லிம்களைக் கொல்வதற்கு முன்பு முஸ்லிம் மக்கள் வடக்கிலோ கிழக்கிலோ தமிழ் மக்களைக் கொன்றது கிடையாது.

முஸ்லிம் ஊர்காவல் படை ஒன்று ஆரம்பிக்க வேண்டிய நிலை வந்ததே புலிகளால்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. புலிகள் இர்ந்த காலத்தில் கூட முஸ்லிம்களுக்கெதிராக இப்படிப் பிரச்சாரம் நடைபெறவில்லை. ஆனால் இன்று ஐபிசி தொலைக்காட்சியில் நிராஜ் டேவிட், என்பவரும் தினேஸ் என்பவரும் இணைந்து முஸ்லிம்களுக்கெதிரான தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

பத்திநாசம்.கொம் இணைய தளங்களில் வெளியிடப்பட்ட படங்களில் ஒன்றூ கென்ற் பாமில் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிச் சிங்களவர்கள். இன்னொரு படம் இந்தியாவில் கொல்லப்ட்ட நக்சல் எதிர்ப்பாளர்கள். இன்னொரு கறுப்பு வெள்ளை படம் வெள்ளையர்களால் எரித்துக் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்கள்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...