சுகதாக்கள் நினைவு தினம்…

கடந்த 1990 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ம் திகதி மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாயல்களில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 103 முஸ்லிம்களின் 27வது வருட நினைவு தினம் இன்றாகும்.

அதனையொட்டி சம்பவம் இடம்பெற்ற பள்ளிகளில் ஒன்றான காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் படுகொலை செய்யப்பட்ட சுகதாக்களை நினைவு கூர்ந்து இன்று காலை கத்தமுல் குர்ஆன் ஓதப்பட்டதுடன், அவர்களுக்காக விசேட துஆப்பிராத்தனையும் இடம் பெற்றது.

காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் ஹூசைனியா பள்ளிவாயல் ஆகிய பள்ளிவாசல்களில், 1990 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி, இரவு நேரத்தொழுகையான இசாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் குண்டுத்தாக்குதல்களில் 103 பேர் கொல்லப்பட்டதுடன் 264 பேர் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...