Monthly Archives: July 2017

1962-ம் ஆண்டு போருக்குப் பிறகு 1 மாதமாக நீடிக்கும் மோதல்: இந்திய – சீன எல்லையில் படைகள் குவிப்பால் பதற்றம் !

இந்தியா, சீனா இடையே 1962-ல் நடந்த போருக்குப் பிறகு கடந்த 1 மாதமாக இருதரப்பு ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இதையடுத்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் முச்சந்திப்பில் டோகா லா பகுதி உள்ளது. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்று மாறு சீன ராணுவம் கேட்டுக் கொண் டது. ...

Read More »

அமெரிக்காகூட செய்யாததைச் செய்வதற்கு துடிக்கிறது இலங்கை!

காணாமல் போனவர்களுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையை இலங்கைக்குள் அமுல்படுத்துவதற்கான சட்டமூலம், வர்த்தமானியில் பிரசுரமாகியுள்ளது. அதனடிப்படையில், இலங்கைக்குள் நபரொருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள், குற்றஞ்சாட்டப்பட்டோர் மற்றும் குற்றவாளிகள் ஆகிய எந்தவொரு நபர்களையும் தங்களிடம் கையளிக்குமாறு, எந்தவொரு வெளிநாடும் இலங்கையிடம் கோர முடியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டஎம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், அவர் நேற்று (02) அனுப்பிவைத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு, இலங்கை நடவடிக்கை எடுத்துள்ள ...

Read More »

VAANAVIL issue 78 – June 2017

VAANAVIL issue 78 – June 2017 has been released and is now available for download at the link below.  2017 ஆண்டு ஆனி மாதத்திற்குரிய வானவில் (இதழ் 78) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.  Please click on the link below to read the issue.  இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.  https://manikkural.files.wordpress.com/2017/07/vaanavil-78_2017.pdf  கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம்.  http://manikkural.wordpress.com/  ‘Vaanavil’ is a registered member ...

Read More »

முதலமைச்சர் வீசிய குண்டு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலமாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆன சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கப் போவதில்லை என்றும், அவர் கஜேந்திரகுமார் அணிக்கே சாதகமாகப் பேசி வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் தொடர்பாக தன் நிலையை விளக்கி முதலமைச்சர் இப்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் – வட மாகாண முதலமைச்சர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்பதாக அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தான் இந்த நாடாளுமன்றப் பொதுத் ...

Read More »

அவதூறு பொழியும் அரசியல்!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அலை ஒன்று ஏற்படுவது போன்ற மாயை ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இப்படி தமிழ் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் கூட்டமைப்புக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கும் நிலை எதனால் ஏற்பட்டது?” இப்படியொரு தூண்டில் கேள்வியை தமிழரசுக் கட்சிப் பத்திரிகை தமிழரசுக் கட்சித் தலைவரிடம் வீசி, தங்களது கட்சிக்கெதிரான அலையை ஆராய்ந்து மக்களுக்கு விளக்கமளிக்க முற்பட்டிருக்கிறது. முதலில் தெரிவது, இம்முறை தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான அலை எழுந்திருப்பதைக் கூட்டமைப்பு தெரிந்து கொண்டிருக்கிறது என்பதும், அதுகுறித்து வெகுவாகப் பதற்றமுற்றிருக்கிறார்கள் என்பதுமாகும். அதற்கான நீண்ட ...

Read More »

வாக்களிக்க முன்பு ஒரு தடவை சிந்தியுங்கள் கிழக்கு சகோதர்களே!

கிழக்கு மாகாண தமிழர்கள் வலுவான போர்குணமுள்ள பிரதேச தலைமை உருவாகி ஆட்சியை பிடிக்கும் வகையில் ஒன்றினைந்து வாக்களிக்காமல் பாரம்பரிய அரசியலை நம்பி பொதுத்தலைமை உள்ள கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அவர்கள் செய்யும் மிகபெரிய வரலாற்று தவறாகவே காலம் பதிவு செய்யும். பின் அவர்களை அல்லாதான் காப்பாற்ற வேண்டும். இதுவே கிழக்கு தமிழர்களுக்கான இறுதி சந்தர்ப்பகும். குறித்து வைத்து கொள்ளுங்கள். கிழக்கு மாகாண இளைஞர்கள் தொலைநோக்குடன் சிந்தித்து மக்களை இந்த இலக்கை நோக்கி நகரும் வகையில் இத்தேர்தலில் அதிகளவில் பங்காற்ற வேண்டும். பிகு: பொது தலைமையுள்ள ...

Read More »

குடாநாட்டுக்குள் குவிந்திருக்கும் உல்லாச சுற்றுலா மையங்கள்!

இலங்கையில் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தியைக் கண்டு, பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி, நீர்கொழும்பு உட்பட தென்கடற்கரையோர நகரங்கள் இதற்குச் சிறந்த உதாரணங்களாகும். போரின் நேரடித்தாக்கம் பெருமளவு இல்லாத இந்த இடங்கள், அரசாங்க நிறுவனங்களினாலும் தனியார் துறையினராலும் பெருமளவு ஊக்குவிக்கப்பட்டு, பரந்தளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு உல்லாசப்பயணிகள் அழைத்து வரப்படுகின்றார்கள். ஆனால் இத்தகைய இடங்களுக்கு சற்றேனும் சோடைபோகாததும் நிகரானதும் இன்னும் மேன்மையான பல இடங்கள் வடமாகாணத்தில் காணப்படுகின்றன. இனம்காணப்பட்டுள்ள இந்தச் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி ...

Read More »

பிரெக்ஸிட் ஓராண்டின் பின்னே: இருளின் ஒளியில் வழிதேடல்!

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும் பூவுலகில் தான் வாழப்படுகிறது. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பதால் அது இறுதிவரை நிலைக்கும் என்பதற்கான எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. அரசியலில் ஏற்படுத்தப்படும் கூட்டிணைவுகளும் அவ்வாறுதான். மிகவும் வலுவான அடித்தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டாலும் கூட, அக்கூட்டிணைவு நிலைப்பதற்கான உத்தரவாதத்தை யாரும் வழங்க முடியாது. திருமணங்களை விட விவாகரத்துகள் விவகாரமானவை. திருமணத்துக்குக் குறைந்த காலத்தில் உடன்படிக்கைகள் எட்டப்படக்கூடியதாக இருக்கின்றன. ஆனால், விவாகரத்துகளின்போது, உடன்படிக்கைகளை எட்டுவது எளிதல்ல. அவை நீண்ட காலத்துக்கு முடிவின்றி இழுபடுவதுண்டு. இது உலக அரசியலில், கூட்டிணைவிலிருந்து ஒரு நாடு பிரிந்து போகும்போதும் ...

Read More »