வாய் கூசாமல் பொய் பேசிறதுக்கு புலிகளை மிஞ்ச உலகில் யாரும் இல்லை.

ஆதவன் தொலைக்காட்சியில்  முன்னாள்   புலிப் பயங்கரவாதியான அன்பு  பேட்டியளிக்கின்றார்..

95ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலை கிபிர் அடிச்சால்  கருணா அம்மான் தலைவற்றை அனுமதி கேட்காமலே அம்பாறையில் சிங்கள  மக்களை அழிப்பாராம்..

முஸ்லிம் மக்களைக் கூட எவ்வளவு பேரை அழிச்சது கருணா அம்மான் தானாம். காத்தான்குடி பள்ளிவாசலிலை முஸ்லிம்களைக் கொன்றதும் கருணா அம்மான் தானாம்.

தலைவற்றை அனுமதி இல்லாமல் கருணா அம்மான் இவ்வளவும்  செய்திருந்தால் தலைவர் ஏன் தண்டிக்கவில்லை.

சிங்கள மக்களையும் , முஸ்லிம் மக்களையும் கொன்றதுக்கு தலைவர் ஏன் அந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை.

ஆனையிறவு முகாம் தாக்குதலுக்கு கருணா அம்மான் தலைமையில்தானே நடந்தது?

தலைவற்றை அனுமதியைக் கேட்காமல் தன்னுடைய இஸ்டத்துக்கு  செய்கிற கருணா அம்மானை தலைவர் ஏன் வெளிநாடுகளுக்கு பேச்சு வார்த்தைகளுக்கு அனுப்பினார்.

கருணாவின் நடவடிக்களால் தானாம் புலிகளுக்கு இன்றுவரை அவப்பெயராம் ஆதவன் தொலைக்காட்சிக்காரரும் கருத்துச் சொல்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அவப்பெயர் எற்படுத்தும் ஒருவரை பிரபாகரன் எப்படி உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தார்.

.பத்திரிகையாளர் மகாநாட்டுக்குக் கூட கருணாவைத்தானே பக்கத்தில் வைத்திருந்தார். தன்னுடைய அனுமதியின்றி இயங்கும் ஒருவரை தண்டிக்காமல்  அவர் பிரிந்து செல்லும் வரையில் தனக்கு மிக நெருக்கமாக பிரபாக  எப்படி வைத்திருந்தார்?

இறுதி யுத்தத்திலை கருணா குழுவும் , ஈபிடிபி குழுவும் தானாம் தங்களைக் காட்டிக் கொடுத்தது,

தனக்கு ஆட்களைத் தெரியுமாம், தெரிந்தால் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடலாம் தானே?

ஒலிபெருக்கியில் தமிழில் அறிவித்தார்களாம். அவர்கள் ஈபிடிபிதானாம், கருணா குழுதானாம்.

இராணுவத்தில் தமிழ் பேசுபவர்கள் இல்லையா?  ஏற்கனவே பிடிபட்ட புலிகள் தமிழ் பேச மாட்டார்களா?

2009ம் ஆண்டு கருணா குழு என்று அங்கு இயங்கியதாகத் தெரியவில்லை. வெளிநாடுகளில் இருக்கும் முன்னாள் புலிகள் சொல்லுகிறார்கள் இரணுவத்துடன் சேர்ந்து இன்றுவரை தங்களைக் காட்டிக் கொடுப்பவர்கள் முன்னாள் புலிகள்தான். என்று.

பாப்பா, இளம்பருதி , எழிலன் போன்ற தளபதிகள்தான் இராணுவத்தினருடன் சேர்ந்து  புலிகளைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வவுனியா முகாம்களில் ஒளிந்திருந்த  புலிகளை  இராணுவத்திடம் காட்டிக் கொடுத்தது  பொதுமக்கள்தான்.

ஈபிடிபி, கருணா குழு என்று சொல்லும் இந்த  முன்னாள் பயங்கரவாதிகளால் அவர்கள்தான் காட்டிக் கொடுத்தார்கள் என்று இவர்களால் நிரூபிக்க முடியாது..

வன்னிக்குள் இருந்த புலிகளை யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஈபிடிபியினருக்கு எப்படித் தெரியும்?

சிறுவயதில் புலிப் பயங்கரவாதிகளுடன் இணைந்த இந்த கந்தசாமி இன்பராசா புலிகள் இயக்கத்தில் இருந்தபோது மூளைச்சலவை செய்யப்பட்ட நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்.

புலிகள் தோல்வியடைந்தற்கு கருணா மீதே பழியைச் சுமத்துகிறார். புலிகள் இயக்கம் அழிந்தற்கும், முள்ளிவாய்க்காலில் மக்கள் பேரிழப்பைச் சந்தித்தற்கும் புலிகளின் தலைவர்தான் காரணம் என்பதை உணரக்கூடிய நிலையில் இந்த முன்னாள் புலிப் பயங்கரவாதி இல்லை.

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (10)

அன்று இரவு எனது கஜபா ரெஜிமெண்டை சேர்ந்த அனைத்து அதிகாரிகள் சார்பிலும் மிக முக்கியனான ...