நியூயார்க்… பாரீஸ்… டோக்கியோ…

பொருளாதார கொள்கைகள் தளர்த்தப்பட்டப் பிறகு நகரங்களை மையப்படுத்திய பொருளாதாரமே வளர்ச்சி அடைந்து வருகிறது. நகரங்களை நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நகரங்கள் சிறந்த பொருளாதார வளர்ச்சியும் மனித வள மேம்பாட்டையும் அடைந்து வருகின்றன. அந்த நகரங்களுக்கு இடம்பெயர்வதற்கு மக்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் எளிதாக கிடைக்கின்றன. அதிலும் படித்தவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ளமுடிகிறது. இப்படியான நகரங்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நியூயார்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. இன்றைய இளைஞர்களின் கனவு நகரமாக நியூயார்க் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிக பிரபலமடைந்த நகரங்களை பற்றிய சில தகவல்கள்….

நியூயார்க்

# மொத்த மக்கள் தொகை 1,97,45,289

# நியூயார்க் மாகாணத்துக்கு அதிகாரப்பூர்வ மொழி என்று ஒன்று கிடையாது. ஆனால் ஆங்கிலம் மொழி பேசுபவர்கள் 69 சதவீதம் பேர் உள்ளனர்.

# 2015-ம் ஆண்டு படி மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.44 டிரில்லியன் டாலர்

# உலகின் இரண்டாவது பெரிய பெருநகர பொருளாதாரத்தை கொண்டது நியூயார்க்

# நியூயார்க் நகரத்தில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் பங்கு 13.6 சதவீதம்

# நியூயார்க் நகரத்தில் உள்ள வேலைவாய்ப்பின்மை 5.2 சதவீதம்

# உலகின் மிகப் பெரிய பங்குச்சந்தை இந்த நகரத்தில்தான் உள்ளது.

# உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள சிலிக்கான் வேலி இந்த நகரத்தில்தான் உள்ளது.

லண்டன்

# மொத்த மக்கள் தொகை 87,87,892

# மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.2 டிரில்லியன்

# தனிநபர் வருமானம் ஜிடிபியில் 1,62,200

# இங்கிலாந்து நாட்டு ஜிடிபியில் லண்டன் நகரத்தின் பங்கு 20 சதவீதம்

# முக்கிய தொழில் நகரங்கள் – சிட்டி ஆப் லண்டன், கனேடி வார்ப்

# லண்டனில் கிட்டத்தட்ட 480 வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் உள்ளன.

# உலகின் முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக லண்டன் உள்ளது.

# 32 லட்சம் ஊழியர்கள் சேவைத்துறையில் பணிபுரிகின்றனர்.

# பாங்க் ஆப் இங்கிலாந்து, லண்டன் பங்குச்சந்தை போன்றவற்றின் தலைமையிடம் இங்குதான் உள்ளது.

பாரிஸ்

# மொத்த மக்கள் தொகை 22,29,621

# மொத்த உள்நாட்டு உற்பத்தி 687 பில்லியன் டாலர்

# பிரான்ஸ் நாட்டு ஜிடிபியில் பாரிஸ் நகரத்தின் பங்கு 30 சதவீதம்

# பாரீஸ் நகரத்த்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 3,90,4800

# இதில் 80.6 சதவீத நிறுவனங்கள் காமர்ஸ், போக்குவரத்து துறையில் இயங்கும் நிறுவனங்கள்.

# பாரிஸ் நகரத்தில் 54 லட்சம் பேர் மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

# உலகின் முன்னணி நிதி நிறுவனமான பிஎன்பி பரிபாஸ் நிறுவனத்தின் தலைமையிடம் பாரீஸ் நகரத்தில் உள்ளது.

# வாழ்வதற்கு அதிக செலவாகும் நகரங்களில் பாரீஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ

# யோக்யோ நகரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 டிரில்லியன் டாலர்

# மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானம் 70,000 டாலர்

# மொத்த மக்கள் தொகை 3,80,00,000

# உலகின் மிக அதிக மக்கள் தொகையை கொண்ட பெருநகரம் டோக்யோ

# அதாவது ஒரு கிலோமீட்டருக்கு 2,642 பேர் வசித்து வருகிறார்கள்

# உலகின் பெருநகர பொருளாதாரத்தில் டோக்யோ நகரம் முதலிடத்தில் உள்ளது.

# பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் 51 நிறுவனங்கள் டோக்யோ நகரத்தை மையமாக கொண்டு இயங்கி வருகின்றன.

# முக்கிய நிதி நிறுவனங்கள் – நொமுரா ஹோல்டிங்க்ஸ், மிட்சூபிஷி பைனான்ஷியல் குழுமம்

லாஸ் ஏஞ்சல்ஸ்

# அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ்

# மொத்த மக்கள் தொகை 37,92,621

# அமெரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகையை கொண்ட நகரம்

# அமெரிக்காவின் முக்கிய திரைத்துறை நிறுவனங்களான யுனிவர்சல் ஸ்டூடியோஷ், 20 செஞ்சுரி நிறுவனம் ஆகியவை இங்கு உள்ளன.

# பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 4 நிறுவனங்கள் இங்கு உள்ளன.

# மொத்த உள்நாட்டு உற்பத்தி 78970 கோடி டாலர்

# 2013-ம் ஆண்டின் படி இந்த நகரத்தின் தனிநபர் வருமானம் (ஜிடிபியில்) 59,092 டாலர்

# 2018-ம் ஆண்டில் தனிநபர் வருமானம் (ஜிடிபியில்) 62,171 டாலராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...