அறுபது அடி பாலத்தினை புனரமைக்க நடவடிக்கை!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் கடந்த 12ம் திகதி இரவு தடம் புரண்டத்தில் கொட்டகலை அறுபது அடி பாலத்திற்கு சேதம் ஏற்பட்டது.

குறித்த பாலத்தில் உள்ள பழைய இரும்புகளை அகற்றி புதிய இரும்புகளை கொண்டு பாலத்தினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறியியலாளர் ரஞ்சித் சிஜேசறி தெறிவித்தார் .

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயில் கொட்டகலை அறுபது அடி பாலத்தில் தடம்புரண்டதால் 06 வது நாளாகவும் கொழும்புக்கும் மலையகத்துக்குமான ரயில் சேவை மட்டுபடுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதனால் குறித்த பாலத்தின் திருத்த பணிகள் ஆரம்பிக்கபட உள்ளமையால் கொழும்பு – மலையகத்திற்கான ரயில் சேவையை தொடர்வதற்கு இன்னும் 03 வாரங்கள் செல்லுமென ரயில் கட்டுபாட்டு பிரிவு தெரிவிக்கிறது.

இதனால் கம்பளை நாவலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்தும் திருத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...