நடிகை கஸ்தூரியும், கொலெற்ரறல் டமேஜூம்!

எதுவோ ஒன்று தன் வாயால் கெட்டது போல சும்மா இருக்க மாட்டாமல் பிரபாகரனை பெண்ணியவாதி என்று சொல்லப் போய் நடிகை கஸ்தூரி தன்னை எல்லோரும் கழுவிக் கழுவி ஊத்திறாங்களாம்,

ஏன் கழுவிக் கழுவி ஊத்திறாங்கள்.  சர்வதேசத்தாலும் பயங்கரவாதி  என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவனை பெண்ணியவாதி என்று சொல்லலாமா?  இலங்கைக்குச் சென்று நேரடியாகப் புலிகளைச் சந்தித்தவர்கள் கூட பிரபாகரனை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிடவில்லை.

இலங்கையிலுள்ள எந்தவொரு அரசியல்வாதிகூட பிரபாகரனை ஒரு பெண்ணியவாதி என்று கூறவில்லை. மாறாக பிரபாகரன்மேல் சிறுவர்கள் பெண்களைப் பலாத்காரமாக இயக்கத்தில் இணைத்தது என்ற குற்றச்சாட்டு உலக அளவில் கூறப்பட்டது.

ராஜீவ்காந்தி தொடக்கம் பல பெண்கள்  பிரபாகரனால் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ராஜினி திராணகம , செல்வி , சரோஜினி, ரேலங்கி என்று பல பெண்கள் பிரபாகரனால் கொல்லப்பட்டார்கள்

இப்படிப்பட்ட ஒருவரை பெண்ணியவாதி என்று கூறலாமா?

குருடன் யானை பார்த்தது  போல பிரபாகரன் ஒரு போராளி என்று கூறிவிட முடியும் புலி ஆதரவு ஊடகங்களும் தமிழ்நாட்டிலுள்ள ஊடகங்களும் புலிகளின் தவறுகளை, மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில்லை. நேர்மையான நடுநிலை ஊடகங்களும் பிரபாகரனின் கொலை அச்சுறுத்தலால் உண்மைகளை எழுதத் தவறினார்கள். தமிழ்நாட்டில்  புலிகளுக்கு ஆதரவானவர்களுக்கு புலிகளின் ஒரு பக்கம்தான் தெரியும். அவர்களுள் நடிகை கஸ்தூரியும் ஒருவர்.

பிரபாகரன் ஒரு பெண்ணியவாதி என்று கஸ்தூரி சொன்னதை றெட்பிக்ஸ் யூ ரியூப் சனல் உலகிலே பிரபாகரன்  மட்டும்தான்  ஒரு சிறந்த பெண்ணியவாதி என்று கஸ்தூரி சொன்னதாக தலைப்பிட்டு வீடியோவை வெளியிட்டது. புலிகளின் லங்காசிறி இணையதளத்துக்கு இது  ஒன்றே போதும்.

உலகிலே சிறந்த பெண்ணியவாதி பிரபாகரன் மட்டும்தான் என்று நடிகை கஸ்தூரி கூறிவிட்டாராம் என்று தலைப்புச் செய்தி.

இந்தச் செய்தியைக் கேட்ட  புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை கஸ்தூரி மேல் ஆத்திரம் வருமா வராதா?

பிரபாகரனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்பு மட்டுமல்ல,  தமிழர்களின் ,கல்வி, பொருளாதாரம் என்பனவும் அழிக்கப்பட்டது.

அவர்கள் கழுவிக் கழுவி ஊற்றியதில் என்ன தப்பு.?

பிரபாகரனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்.  அவர்களில் சிலர் ஆத்திரம் கொண்டு கஸ்தூரியைத் தூற்றியதில் என்ன தப்பு?

என் நம்பிக்கை என்னுடைய கொன்விக்சன் நான் அவருடைய ஆர்மியிலை போராளிகளாக இருந்தவங்களைக் கண்கூடாகப் பார்த்தவள்.நான் வேணுன்னா அங்கை போய் நின்றிருக்க வேண்டாம். எனக்கு அதுக்கு வயசு பத்தாது. நான் என்ன பண்ண முடியும்.? போர் மூண்டபோது நான் பிறக்கவேயில்லை. அவர் செய்த தியாகத்தை நான் நம்பிறேங்க. எத்தனையோ பேரு ரிமோட் கொண்ட்ரோலிலை They are fighting wars. He was not one of those. He may have been wrong or right. நான் அதுக்கு வரேல்லை. May be he was wrong. May be it all went wrong.

May be he was even guilty. Of innocent life being lost.

That is thae coleteral  damage of war.   நடிகை கஸ்தூரி இப்படிக் கூறினார்.–

தான் போராளிகளை கண்ககூடாகப் பார்த்தவள் என்கிறார் கஸ்தூரி. போர் மூண்டபோது தான் பிறக்கவில்லை என்கிறார்? அப்படிப் பிறக்கத நீ எதற்கு  உனக்குத் தெரியாத விடயங்களை  தமிழ்நாட்டிலிருந்து  பேசுகிறாய். இவருக்கு ஏனைய போராட்ட இயக்கங்கள் பற்றி என்ன தெரியும்.?

பிரபாகரனின் கொள்கை பற்றிப் பேசும் இவருக்கு இலங்கையில் இருந்த ஏனைய போராட்ட இயக்கங்களின் வரலாறு தெரியாது, பிரபாகரனின் கொள்கை ஈழம் என்றா?  அதே கொள்கையில்  போராடிய தமிழ் இயக்கங்களை பிரபாகரன் நசுக்கிய வரலாறு தெரியாது..

தான் சொல்கிற கருத்துக்கே இவ்வளவு எதிர்ப்பென்றால் ஒரு இனத்துக்காக போராடுகிற பிரபாகரனுக்கு எவ்வளவு எதிர்ப்பு வரும் என்கிறார் கஸ்துரி.  பிரபாகரன் மட்டும்தான் இனத்துக்காகப் போராடுகிறார் என்று கூறும் இவரிடம் இலங்கையில் போராட்ட வரலாறு தெரிந்திருக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எத்தனையோ பேரு ரிமோட் கொண்ட்ரோலிலை

They are fighting wars. He was not one of those. He may have been wrong or right. நான் அதுக்கெ வரேல்லை. May be he was wrong. May be it all went wrong.

May be he was even guilty. Of innocent life being lost.

That is thae collateral   damage of war. என்று கூறுகிறார் கஸ்தூரி.

பலர் ரிமோட் கொன்றோலிலை சண்டை பிடிக்கிறார்கள். பிரபாகரன் அப்படியல்ல., பிரபாகரன் செய்தவை தவறாக இருக்கலாம்,  பல அப்பாவிகளின் உயிரிழப்பிற்கு அவர் குற்றவாளியாக இருக்கலாம்.  இவை எல்லாம் போரினால் வரும் சேதம் என்கிறார் கஸ்தூரி! .

அரசியல் தலைவர்களை, புத்திஜீவிகளை, ஊடகவியலாளர்களை, மாற்றுக் கருத்தாளர்களைத்   திட்டமிட்டுக் கொல்வதும் அப்பாவி மக்களை தற்கொலைத் தாக்குதல்மூலம் கொல்வதும் “collateral   damage” என்று கஸ்தூரி சொல்ல வருகிறாரா?

அப்படியென்றால் இராணுவத்தினரின் தாக்குதல்களில்  கொல்லப்பட்டவர்களையும்  “collateral damage” எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே? பிறகெதுக்கு போர்க்குற்ற விசாரணை?

பிரபாகரன் றிமோட் கொண்ட்ரோலில் சண்டை பிடிக்கவில்லையாம். தனது பிள்ளைக்கு அமெரிக்காவரை கொண்டு சென்று வைத்தியம் செய்யும் கஸ்தூரிக்கு ஏழை எளியவர்களின்  பிள்ளைகளை பிரபாகரன் பலாத்காரமாகப் பிடித்துச் சென்று மூளைச்சலவை செய்து யுத்தத்தில் சாகடிப்பது சாதாரணமாகத் தெரிகிறதா?

 பிரபாகரன் உன்னை மட்டும் அனுப்பவில்லை  தானும் இறங்கிச் செய்தாராம், தனது பிள்ளைகளையும் அனுப்பினாராம்!

பிரபாகரன் எங்கே தனது பிள்ளைகளை யுத்தத்துக்கு அனுப்பினார். ஏழைகளின் பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டு முளைச்சலவை செய்யப்பட்டு  யுத்தமுனையில் நிறுத்திவைக்கப்பட்ட வேளையில் பிரபாகரனின் பிள்ளைகள் நீச்சல் தடாகத்திலும், கம்பியூட்டர்களிலும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

மூளைச்சலவை செய்யப்பட்ட சிறார்களை தன்னுடன் இருந்து உணவருந்த வைத்துவிட்டு போட்டோக்களும் , வீடியோவும் எடுத்துவிட்டு நெஞ்சில் வெடிகுண்டைக் கட்டி சாக அனுப்பும் பிரபாகரன் களத்தில் நின்று போராடினானா?

இறுதி யுத்தத்தில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியே பிள்ளைகளைப் பலாத்காரமாக கடத்தும் செயலில் ஈடுபட்டிருந்தான்.  தடுத்த பெற்றோரைத் தாக்கினான்   என்று சாட்சிகள் கூறுகின்றன. தனது பிள்ளைகள் இறுதி யுத்தத்தில் கொல்லப்படுவார்கள் என்று பிரபாகரன் எதிர்பார்க்கவில்லை.

பிரபாகரன் புறமுதுகிட்டு ஓடிப்போய் அரசாங்கத்தின் காலில் விழவில்லையாம். புறமுதுகிட்டு ஓடாதவர் எப்படி முள்ளிவாய்க்கால் வரை சென்றார்? இராணுவத்திடம்தான் சரணடைந்தார்?

தன்னுடைய உறுப்பினர்களைச் சயனைட் கடித்துத் தற்கொலை செய்ய நிர்ப்பந்தித்த பிரபாகரன் தான் ஏன் சயனைட் கடித்து இறக்கவில்லை. அல்லது இராணுவத்துடன் போராடி நெஞ்சிலே குண்டினை ஏந்தவில்லை? மக்களைக் கேட்யமாக வைத்து யுத்தம் செய்து ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுத்துவிட்டு இராணுவத்திடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தானே இவனா கொள்கைக்காக இறந்தவன்?

தனது  உயிரைக் காக்க தமிழ் மக்களைக் கேடயமாக வைத்து யுத்தம்  செய்வதும், தப்பி ஓடும் மக்களைச் சுட்டுக் கொல்வதும் போராட்ட வீரனுக்கு அழகோ?  இவையெல்லாம் கஸ்தூரிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பிரபாகரனுக்கெதிராக எத்தனை ஆதாரங்களோடு வந்தாலும்கூட “I will not change one  conviction I have about Prabaharan” என்று அடித்துக் கூறுகிறார் கஸ்தூரி!

உன்னுடைய கொன்விக்சனும் நீயும்! Who cares?

ஆதாரங்களைக் கொண்டு வந்து உன்னிடம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு எதற்கு?

கஸ்துரி நீ யாரம்மா?  அதை  முதலில் சொல்?

நீ நம்பாவிட்டால் யாருக்கென்ன கவலை”

நீ என்ன ஐநா சபைத் தலைவியா?

அல்லது நீ  இந்தியப் பிரதமரா?

அல்லது தமிழ்நாட்டில் பெரிய அரசியல்வாதியா?

அல்லது  நீ உலகத் தமிழர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியா?

அல்லது சிறந்த கல்வி மேதையா?

நீ ஒரு வெறும் சினிமா நடிகை. பேசும்போது  இரண்டு ஆங்கிலமும் கலந்து பேசிவிட்டால் மேதையாகி   நீ கூறும் கருத்துக்கள் சரி  என்பதாகிவிடுமா?

அல்லது நீ பிரபாகரனைப் பற்றி சான்றிதழ் வழங்குவதால் பிரபாகரனை பயங்கரவாதி என்று சொன்ன நாடுகள் அவனைப் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து அகற்றிவிடுமா?

உலகில் எந்த ஒரு நாடும் பிரபாகரனை  ஒரு போராளியாக அங்கீககரிக்கவில்லை.

சர்வதேசப் பொலிசாரால் தேடப்படும் ஒரு பயங்கரவாதியாக இருந்தவன் பிரபாகரன்.

உலகில் 32 நாடுகளால் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பிரபாகரன்.

“World Ruthless Terrorist” என்று உலகநாடுகளை அழைக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவன் பிரபாகரன்.

எல்.ரி.ரி.ஈ இயக்கம் ஒரு கொலைகார இயக்கம் என்று ஐ.நா சபைப் பிரதிநிதி நவநீதம்பிள்ளை பகிரங்கமாகக் கூறினார்.

புலிகள் இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள் சர்வதேச நாடுகளால் கண்டிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேர்த்த்வர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள்.

புலிகள் சார்பான அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன.

பிரபாகரன் மக்களுக்காகப் போராடும் ஒரு உண்மைப் போராளியென்றால் இவையெல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை நடிகை கஸ்தூரி அவர்களே?

இலங்கை முஸ்லிம்கள் பற்றிய நடிகை  கஸ்தூரியின் முட்டாள்தனமான கருத்து.

இலங்கையில் முஸ்லிம்கள் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லையாம்.

அவர்கள் தமிழ் பேசுகிறார்களாம் ஆனால் அவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லுவதில்லையாம்.

 தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் நிறைய வித்தியாசமாம்.

ஆம் நிறைய வித்தியாச்ம்தான்.

இந்தத் தகவலை நடிகை கஸ்தூரி சொல்லும் போதே தெரிகிறது யாரோ ஒரு புலிகளின் முக்கியஸ்தர் அல்லது பினாமி அல்லது தீவிர ஆதரவாளர் ஒருவருக்கும் கஸ்தூரிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதென்று!

அப்படிப்பட்ட ஒருவரால் கஸ்தூரி நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்.

காரணம்! கருணா தலைவர் பிரபாகரனைக் காட்டிக்கொடுத்தார் என்று சொல்வதும், இலங்கை முஸ்லிம்களைப்பற்றி இப்படிப் பேசுவதும் இவருக்கு யாரோ புலிப்பினாமி  சொல்லிக்கொடுத்ததால்தான்  இவரால் இப்படிப் பேச முடிகிறது என்று ஊகித்துக்கொள்ள முடிகிறது.

இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கும் வித்தியாசம் இருக்கின்றதென்பது உண்மை. ஆனால் அதற்கான காரணத்தையும் நாங்கள்  விளங்கிக் கொள்ளவேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் முஸ்லிம்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைத் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கிறார்கள். அவர்களை ஒதுக்கி வைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டு தமிழர்கள் அப்துல் கலாமுக்குக் கொடுக்கும் மதிப்பு  இலங்கையில் ஒரு முஸ்லிம் அறிஞருக்கு கொடுக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இலங்கையில் வாழ்வது போல வாழவில்லை. இன்று மாட்டிறைச்சிப்பிரச்சனையால் முஸ்லிம்களுக்கு கொடுக்கும் இன்னல்கள் போல தொன்றுதொட்டு இலங்கை முஸ்லிம்கள் ஏனைய தமிழர்களால் அனுபவித்து வருகிறார்கள்.

“நக்கற் கான்” என்ற மும்பை முஸ்லிம் பெண்ணான குஷ்பூ இன்று ஒரு தமிழ்ப்பெண்ணாக தமிழ்நாட்டில்  தலைநிமிர்ந்து வாழ்வது போல இலங்கையில் ஒரு முஸ்லிம் பெண் இலங்கையில் தமிழ்ப்பகுதிகளில் வாழமுடியாது.

இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறிய இந்தியாவின் புகழ் பெற்ற  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் போல இலங்கையில் ஒரு இந்து முஸ்லிம்மாக மாறி வாழ்ந்துவிட முடியாது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் அறிஞர்கள், கலைஞர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு இலங்கையில் முஸ்லிம்களுக்கு தமிழர்கள் கொடுக்க மாட்டார்கள்.

அப்படி வெறுப்புணர்வோடு ஏனைய தமிழர்களால் வழிநடத்தப்படும் முஸ்லிம் இனம் எப்படித் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள்.

முஸ்லிம்கள் யாழ்ப்பானத்தை விட்டு வெளியேற்றப்பட்டதும், கொன்று தள்ளப்பட்ட வரலாறு கஸ்தூரிக்குத் தெரிந்திருக்கவில்லையா? அப்படியான நிலைமை தமிழ்நாட்டு முஸ்லிம்களுக்கு இருந்ததா?

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துகோருவதற்காக பிரபாகரனை குறை   கூறுகிறார்களாம் !

பிரபாகரன் பெயர் சொல்லி யாரும் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துக் கோரவில்லை. இலங்கை அரசாங்கத்தால் தங்களுக்கு ஆபத்து என்றே எல்லோரும் அரசியல் அந்தஸ்துக் கோரினார்கள். அங்கு யுத்தம் நடக்கிறது எங்களால் அங்கு வாழமுடியாது என்று அரசியல் அந்தஸ்துக் கோரினார்கள்.

பிரபாகரன் பெயர் சொல்லி அகதி அந்தஸ்து கோரினார்கள் என்று இவருக்கு யார் சொன்னார்கள்?

கருணா பற்றியோ இலங்கை முஸ்லிம்கள் பற்றியோ, அல்லது புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியோ விமர்சனங்கள் கூற நடிகை கஸ்தூரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதே எங்கள் கருத்து. இவர் ஊடகங்களில் வந்து தன்னுடைய முட்டாள்தனமான கருத்துக்களை வைப்பதால் இவர் கூறுவது போல கழுவிக் கழுவி ஊற்றத்தான் செய்வார்கள்.

 

 

 

x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...