ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு.. போராட்டங்களால் பற்றி எரிகிறது ஹம்பர்க் நகரம்!

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர்.

ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் ஜி-20 மாநாடு நேற்றும், இன்றும் நடைபெற்றது வருகிறது.

இதில் பயங்கரவாதம், வர்த்தகம், பருவநிலை மாற்றம் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், துருக்கி அதிபர் தையீப் எர்டோகன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

பலத்த பாதுகாப்பு உலக தலைவர்கள் ஒன்று கூடுவதால் ஹம்பர்க் நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இதனிடையே, மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலாளித்துவ கொள்கை எதிர்ப்பாளர்கள் லட்சக்கணக்கானோர் கருப்பு உடையணிந்து மாநாட்டுக்கு முதல் நாள் ஹம்பர்க் நகரில் ஒன்று கூடினர்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...