வாக்களிக்க முன்பு ஒரு தடவை சிந்தியுங்கள் கிழக்கு சகோதர்களே!

கிழக்கு மாகாண தமிழர்கள் வலுவான போர்குணமுள்ள பிரதேச தலைமை உருவாகி ஆட்சியை பிடிக்கும் வகையில் ஒன்றினைந்து வாக்களிக்காமல் பாரம்பரிய அரசியலை நம்பி பொதுத்தலைமை உள்ள கட்சிகளுக்கு வாக்களித்தால் அது அவர்கள் செய்யும் மிகபெரிய வரலாற்று தவறாகவே காலம் பதிவு செய்யும்.

பின் அவர்களை அல்லாதான் காப்பாற்ற வேண்டும்.

இதுவே கிழக்கு தமிழர்களுக்கான இறுதி சந்தர்ப்பகும். குறித்து வைத்து கொள்ளுங்கள்.

கிழக்கு மாகாண இளைஞர்கள் தொலைநோக்குடன் சிந்தித்து மக்களை இந்த இலக்கை நோக்கி நகரும் வகையில் இத்தேர்தலில் அதிகளவில் பங்காற்ற வேண்டும்.

பிகு: பொது தலைமையுள்ள பாரம்பரிய தமிழ் அரசியலில் கிழக்கு மாகாணத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் அவர்களிடம் கிழக்கு தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்கின்ற உணர்வுக்கு பதில் அவர்களை அழியவிட்டு அதில் அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்கின்ற சிந்தனையே உண்டு.

சகோதரர்களே!
யாழ் குடாநாட்டினரும் வன்னி மக்களும் முதலில் தமிழர்கள் ஒரே இனத்தவர் என்பதை மறக்க கூடாது. அண்ணன்- தம்பி- மாமன்-மச்சான்கள், உறவினர்களிடையை குரோதம், வெறுப்பு துவேசம், ஏற்படக்கூடாது. அதற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கவும் கூடாது. வன்னி தனிமாகாண கோரிக்கையாளர்கள் இந்த விடயத்தில் அவதானமாக செயற்ப்பட வேண்டும். எமது கோரிக்கை மூலம் குடாநாட்டினருக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும் அவர்களின் விமர்சனங்களுக்கும் பொறுமையாக பதிலலிக்க வேண்டும். அவர்களுடன் நீ பெரிதா நான் பெரிதா என சண்டையிட்டு சவால்விடும் நிலைக்கு செல்ல வேண்டாம்.

அவரவர் தங்கள் பிரதேசங்களை நிர்வகித்து அதனை அந்நியரிடம் இருந்து பாதுகாத்து வளப்படுதுதிக்கொள்ள வேண்டும் என்பதுதான் எமது வன்னி தனிமாகாண கோரிக்கையின் நோக்கமாகும். குடாநாட்டினர் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாம் புரிய வைக்க வேண்டும்.

1949க்கு முன்பு போன்று தமிழர்கள் தரம் உயர வேண்டும் என்றால் யாழ் மேலாதிக்க தமிழ் தேசிய அரசியலை ஒழித்துக்கட்ட வேண்டும். அது யாழ்ப்பாணத்தை மட்டுமே வளப்படுத்தியது. கிழக்கை அழித்து பறிகொடுத்துவிட்டது. வன்னியை அழிக்கின்றது. இன்னும் 10 ஆண்டுகளில் வன்னியும் பறிபோய்விடும். தன்னை வளப்படுத்த குடாநாட்டு அரசியல் வன்னியை பலியிட ஒருபோதும் தயங்காது. இதைத்தான் நாம் எதிர்கின்றோம். வன்னி தனிமாகாணமாகினால் குடாநாடும் வன்னியும் தனித்தனியே வளர்ச்சியடையும். இருவரும் சேர்ந்து எமது கிழக்கு தமிழருக்கும் உதவ முடியும். ஏன் மலையகவாழ் தமிழருக்கு கூட அவர்களின் அரசியல் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவ முடியும்.

அதிகார பரவலாக்கல் கோரிக்கை பிரிவினை அல்ல என்பதை குடாநாட்டினர் உணர வேண்டும். சிங்களவர் செய்த அதே தவறை குடாநாட்டினர் செய்யக்கூடாது. படித்த பண்பட்ட யாழ் சமூகம் வன்னி மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். எமது கோரிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு எமது வன்னி தனி மாகாண கோரிக்கைகை வலுப்படுத்த முன்வர வேண்டும். யாழ் இளைஞர்கள் போலி அரசியலை விரட்டிவிட்டு இனம் சார்ந்த உண்மையான அரசியலை தங்களுக்கென்று உருவாக்கி கொள்ள வேண்டும். எமக்கும் உதவ வேண்டும். யாழ் தலைமையை வன்னி- கிழக்கிற்கு திணிப்பதை குடாநாட்டினர் கைவிட வேண்டும். என்பதே எமது வேண்டுகோள். பிரதேச தலைமைகள் உருவாக வழிவிட வேண்டும்.

Lets together raise our hands for separate Wanni Province!. WE WANT WANNILAND. SEPARATE THE PROVINCE.

Rajh Selvapathi
x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...