அவசியம் வாசியுங்கள்!

வடமாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழந்தபோதே வடமாகண மக்களை பிரித்து அவர்களுகாகுள்ளே சண்டை மூட்டிவிடும் திட்டமும் வகுக்கப்பட்டுவிட்டது.

ஆயுதபோராட்டத்தை உருவாக்கியவ்களே அதனை அழித்து முடிவுக்கு கொண்டுவந்தது போல் யாழ்மைய தமிழ் தேசிய அரசியலை உருவாக்கி உரம்போடாடு வளர்தாதவர்களே அதனை அழித்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டனர்.

இலங்கையை தமது பிடிக்குள் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் யாழ் மைய தமிழ்தேசிய அரசியலையும் இதற்கு நிகர் எடையாக சிங்கள தேசியத்தையும் உருவாக்கினர். ஆனால் தமிழ் தேசியத்தை அபரிவிதமாக வளரச்செய்து தமிழ்-சிங்கள மக்களிடையே இனத்துவேசம், வெறுப்பு, குரோதம் போன்றவற்றை வளரவிட்டு இந்தநாட்டில் கோர போரை உருவாக்கியும் விட்டனர். அதேவேளை சிங்கள தேசியம் தமிழ்தேசியம் அளவுக்கு வளர்ந்துவிடாமல் பார்த்தும் கொண்டனர்.

யாழ் மைய தமிழ் தேசியத்தின் இயங்கு மையம் அல்லது அடித்தளம் வன்னியிலேயே உள்ளது. வன்னிக்கும் குடாநாட்டுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தி அவர்கள் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டால் அன்றே யாழ் மைய தமிழ்தேசியம் முடிவுக்கு வந்துவிடும். குடாநாட்டினர் மீது வெறுப்பை ஏற்படுத்தி அவர்களில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என வன்னிமக்களை தூண்டுவதற்காகவே திட்டமிட்டு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் முதலமைச்சர் “அன்புக்குரிய” விக்னேஸ். அதனால்தான் அவரின் வடமாகாண அரசு யாழ்ப்பாண அரசாக மட்டும் செயற்படுவதும் வன்னி முற்றுமுழுதாக புறக்கணிக்கப்டுவதுமாகும்.

வடமாகாணத்தை பிளப்பதன் மூலம் யாழ் மைய தமிழ் தேசிய அரசியலை அழிக்கும் திடாடம் தனது அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டது. “அன்புள்ள” விக்னேஸின் உதவியால் வன்னி மக்கள் தாங்கள் தனியான மாகாணமாக்கப்பட வேண்டும் என வெளிப்படையாகவே கோரிக்கை விடுக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலியுறுத்தும் தாராள ஜனநாயகவாதியாகிய நானே வன்னியை பாதுகாக்க வன்னி வடமாகாணம் பிரிக்கப்பட்டு வன்னி தனிமாகாணமாக வேண்டும் என நினைக்கின்றேனே!

இனி என்ன்? ஒட்டுக்குழு யார் ?
துரோகி யார்?
என நீங்களே தீர்மாணித்து கொள்ளுங்கள்.

புலிகளையே புத்திசாலித்தனமாக கையாண்டு முடித்து வைத்தவர்களுக்கு இந்த தமிழ் தேசிய பிரிவினைவாத அரசியல் ஒரு பெரிய விடயமா என்ன?

முள்ளிவாய்கால் என்ன யாழ்ப்பாணத்திலா உள்ளது?

முள்ளிவாய்காலை வைத்து பிழைப்பு நடத்தும் உங்களால் முல்லைத்தீவுக்கு ஒரு இடம் கொடுக்கமுடியவில்லையா?

அடுத்த தடவை முள்ளிவாய்காலுக்கு விளக்கு கொழுத்தவரும்போது உங்களை முல்லைத்தீவு மக்கள் கொழுத்தாமல் இருந்தால் அது உங்கள் அதிஸ்டமாகவே இருக்கும்.

மனதில் உள்ள அழுக்கை அகற்றிவிட்டு மனசாட்சியுடன் சிந்தியுங்கள். சோறுதானே உண்கின்றீர்கள்?

சமூக பொருளாதார அரசியல் மற்றும் அபிவிருத்தியில் பிராந்தியங்கள் தனித்தனியே இயங்குவதும் அவை அப்பிரதேச மக்களால் நிர்வகிக்கப்படுவதுமே முக்கியமானது. அதுவே அப்பிரதேசத்தை வளப்படுத்தும். ஒவ்வொரு பிரதேசத்தினரும் முதலில் தமது பிரதேச அபிவிருத்தியை முதலில் கணக்கில் எடுக்க வேண்டும்.

லடமாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டு குடாநாடு வன்னிபெருநிலப்பரப்பு என்கின்ற இரண்டு தனித்தனியான மாகாணங்களாகப்ட வேண்டும். இலங்கையில் தமிழர்கள் உயர்தரவாழ்வை அனுபவிக்க வேண்டும் என்றால் இது நடந்தேயாக வேண்டும்.

ஆம் இது பிரதேசவாதம்தான்.

ஆனால் பிரதேசங்களுக்கிடையேயான மக்களிடையே வெறுப்பு குரோதத்தை ஏற்படுத்தி ஒருவரை ஒருவர் இழிவாக நடத்தும் எதிர்மறை பிரதேசவாதம் அல்ல.

We want Wanniland. Separate the Province!

ஒரு மாகாண சபை அமைச்சரவையில் முதல்வர் உட்பட 05 பேர் உள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் 05 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் வடமாகாண சபை என்கின்ற உத்தியோகபூர்வ பெயரில் மாழ் மாகாண சபையாகவே இயங்கும் இந்த சபையில் முதல்வர் உளுபட 03 யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிநிதித்துவம் இல்லை. ஒப்புக்காக வவுனியா மன்னாருக்கு இடம் வழங்கப்பட்டாலும் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தூக்கிவீசப்படலாம் என்கின்ற நிலைதான் வடமாகாண நிர்வாகம் உள்ளது.

இப்போது கூறுங்கள். இது வடமாகாண சபையா அல்லது யாழ்ப்பாண சபையா?

வன்னி பெருநிலப்பரப்பில் வாழும் மக்களே!
வன்னி தனிமாகாண நிர்வாகம் என்பதை முன்னெடுக்க வேண்டும் என்பதை தயவு செய்து இனியாவது உணருங்கள். இந்த கேவலமான போலி அரசியல் நம்மோடு முடியட்டும் நமது சந்தியாவது ஐரோப்பிய தரத்தில் வாழட்டும்.

யாழ் முதலமைச்சர் “அன்புக்குரிய” விக்னேஸுகாகு ஆதரவாக வன்னியில் குறிப்பாக கிளி-முல்லையில் ஆர்ப்பாட்டம் ஹர்த்தால் என்று கொடிபிடித்தவர்கள் வரிசையில் வந்து இஞ்சி பிளேன்ரீ குடியுங்கள். போலி தமிழ் அரசியல் பித்தம் தெளியட்டும்.

2009க்கு பிறகு தமிழ் அரசியல் நகர்வதே கிளி-முல்லை பிரதேசத்தை வைத்துதான். ஆனால் இந்த மக்களை ஒரு ரூபாய் கடாபி டொபிக்கூட கணக்கெடுப்பதில்லை யாழ் மைய தமிழ் அரசியல்.

இனியாவது புரிந்து கொண்டு குடாநாட்டினர் கூறுவதற்கு எல்லாம் தலையாட்டிக்கொண்டு அவர்கள் பின்னே செல்லாமல் உங்களுக்கென்று ஒரு பிரதேச அரசியலையும் தலைமையையும் உருவாக்க்கி கொள்ளுங்கள்.

வடக்கு மாகாண அமைச்சரவையில் முதல்வர் உட்பட மொத்தமாக உள்ள 05 பேர் கொண்ட அமைச்சரவையில் முதல்வர், மற்றும் இரு அமைச்சர்கள் யாழ் மாட்வட்டத்தை சேர்ந்தவர்கள். அதாவது 03 பேர் யாழ்குடாநாட்டினர்.

ஏனைய இருவரில் ஒருவர் மன்னார் மற்றையவர் வுவுனியா. இந்த இருவரையும் பதவியை பறிகொடுக்கும் நிலையில் முதல்வர் வைத்திருக்கின்றார்.
முல்லைத்தீவு-கிளிநொச்சியில் நடந்த 2006-2009 இறுதிப்போரை வைத்துத்தான் இந்த முதல்வர்”அன்புக்குரிய”விக்னேஸ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் அரசியல்வாதிகளே தமது வயிற்று பிழைப்பு பார்கின்றனர். ஆனால் இந்த பிரதேசம் உள்ளடங்கியுள்ள வன்னி பிரதேசத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்துக்கின்றனர். குடாநாட்டு அரச அதிகாரிகளை பயன்படுத்தி வன்னியின் வளங்களை சூறையாடுவதுடன் கள்ள காணிகள் பிடித்து முஸ்லிம்களுக்கு விற்கின்றனர். இதைனை வெளிப்படையாக கூறினால் பிரதேசவாதம் பேசுவதாக கூறி சில குடாநாட்டினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த முதலமைச்சருக்கு ஆதரவாக வன்னியில் ஆர்ப்பாட்டம்,ஹத்தால் நடத்தியவர்கள் தயவுசெய்து உண்மைதான அரசியலை விளங்கிக்கொள்ளுங்கள். யாழ்குடாநாட்டினரின் தாளத்துக்கு ஆடுவதை நிறுத்திவிட்டு எமது வன்னிக்கான அரசியலை கட்டியெழுப்புங்கள். எமக்கான தலைமையை உருவாக்குங்கள். எமது நிலத்தையும், வளத்தையும், உரிமைகளையும் காப்பாற்ற நாம் குடாநாட்டு அரசியல்வாதிகளை நம்பியதன் விளைவை கடந்த 60 ஆண்டுகளாக அனுபவித்துவருகின்றோம்.

அரச கைக்கூலியான பிரித்தானியர் உருவாக்கிவிட்ட யாழ்மைய குடாநாட்டு போலி தமிழ்தேசிய அரசியல் மாயையில் இருந்து வெளிவாருங்கள். எமக்கான அடையாள அரசியலை உருவாக்குவோம். ஒன்றிணையுங்கள்.

வன்னி தனி மாகாணம் ஒன்றே எமது வாழ்வில் வெளிச்சத்தை கொண்டுவரும்.

“We Want Wanniland, Separate the Province!”

Rajh Selvapathi
x

Check Also

Road to Nandikadal அத்தியாயம் 50:: வில்லனின் வீழ்ச்சியும் ஈழத்தின் ஈமசடங்கும் (8)

நந்திக்கடல் நீரேரியின் வடக்கு கரையில் கிடக்கும் பிரபாகரனின் உடலை பார்த்து முடிவில்லாமல் சாரைசாரையாக வந்த ...