சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் கூறும்போது, “இந்திய எல்லைப் பாதுகாப்பு வீரர் சீனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தார். எனவே அவரை உடனடியாக அவ்விடத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.

சமீப காலங்களில் இப்பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்குகள் இல்லாவிட்டாலும், குறுகிய இடைவெளிகளில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் மோதல் போக்கைக் கடைபிடிப்பது நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கட்டுப்பாட்டு எல்லைப்பகுதி உள்ள மேற்குப் பகுதியில் சிக்கல்கள் அதிகரித்துள்ளது.

எல்லைப்பகுதிகள் குறித்து சீனாவுக்கும் இந்தியாவுக்கு வேறுபட்ட பார்வைகள், கருத்துகள் உள்ளன, இதனால் எல்லையில் நிகழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது, இதற்கு தீர்வு காண இருதரப்பினரும் தீவிரமான பேச்சு வார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

சீன ராணுவ அமைச்சகம் சமீபத்தில் தெரிவிக்கும் போது டோங்லாங் எல்லைப்பகுதியில் சீனாவின் பகுதியில் இந்திய ராணுவம் சாலைக் கட்டுமாணப்பணிகளுக்கு இடையூறு விளைவிக்கிறது என்று கூற இந்தியத் தரப்போ சீன ராணுவம் டோகா லா பகுதியில் நுழைந்து இரண்டு பதுங்கு குழிகளை அழித்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

சீன ராணுவ அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரென் குவோகியாங் கூறும்போது, “இந்தியாவுடன் சுமுக உறவுகளை வளர்க்கவே சீனா விரும்புகிறது, ஆனால் சீனா தனது நியாயமான உரிமைகளையும் நலன்களையும் விட்டுக் கொடுக்காது” என்றார்.

இத்தகைய சூழலில்தான் நாது லா கனவாய் வழியாக சிக்கிமில் கைலாஷுக்குள் இந்தியர்கள் நுழைவதை தடை செய்துள்ளது சீனா.

ஜூ 19-23 தேதிகளில் சுமார் 47 யாத்திரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தராகண்ட் வழியாக கைலாஷ் செல்லும் பாதை திறந்துள்ளது.

அடுல் அனேஜா