நயினாதீவு திருவிழாவை முன்னிட்டு கடற்பிரயாண பாதுகாப்பு ஏற்பாடு!

நயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.

இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

உயிரை பணயம் வைத்து ஆலயத்துக்கு வரும் பக்த அடியார்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இச்சேவை வருடாவருடம் ஒழுங்கு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பொருட்டு அனலைதீவு-நயினாதீவு பக்த அடியார்களுக்கும்,  குறிகட்டுவான் – நயினாதீவு போக்குவரத்து சேவையில் இவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆலயத்துக்கு வரும் பக்த அடியார்கள், எதுவித பயமும் இன்றி, தமது கடற்பயணங்களை மேற்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...