அமெரிக்க கடற்படை வீரர்கள் 7 பேர் உடல்கள் கிடைத்தன!


ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்காவின் “Fitzgerald””  என்ற போர்க்கப்பல் சென்று கொண்டிருந்தது. இது யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 56 கடல் மைல் தொலைவில் வந்த போது எதிரே பிலிப்பைன்ஸ் கொடியுடன் “ACX Crystal” என்ற சரக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த இரு கப்பல்களும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த கப்பலில் அமெரிக்க போர்க் கப்பல் கடும் சேதம் அடைந்தது.

கப்பல்கள் மோதிய விபத்தில் அமெரிக்க போர்க் கப்பலில் இருந்த 7 கடற்படை வீரர்கள்  காணாமல் போனார்கள்.. இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு வீரர்களின் உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  மீட்கப்பட்ட கடற்படை வீரர்களின் உடல்கள் கடற்படை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, வீரர்கள் யார் என கண்டறியப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...