இவருக்கான பட்டமளிப்புவிழா 16/06/2017 !

பிரான்சில்MBA Management des Biotechnologies IONIS Education Group Vendredi 16 juin 2017 La MAISON DE LA MUTUALITE பட்டம் பெறும் இலங்கை வம்சாவளி தமிழ் பெண்ணான கார்த்திகா ஆறுமுகம்

பிரான்சின் தலைநகர் பாரிசில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளி தமிழ் பெண்ணான கார்த்திகா ஆறுமுகம் தனது இருபத்தியாறாவது வயதில் மருத்துவத்துறையில் கலாநிதி பட்டத்தைபெற்றார். இவர் பாரிஸ்-7ல் அமைந்துள்ள டிடெரொட் பல்கலைகழகத்தில் (universite paris diderot) தனது பட்டப்படிப்பையும் கலாநிதிபட்டத்துக்கான ஆய்வினையும் செய்து முடித்துள்ளார். 1981 ஆண்டு தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்து பிரான்சில் தஞ்சமடைந்த இவரது தந்தையார் குமாரசாமி ஆறுமுகம் யாழ்ப்பாணம் காரைநகரை பூர்வீகமாகவும் .இவரது தாயார் யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும் கொண்டவர்களாகும்.

இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதிகளான வாசுதேவ நாணயக்கார, டியு குணசேகர, திஸ்ஸவிதாரண போன்றவர்களுடன் நீண்டகாலமாக உறவை பேணிவரும் இவரது தந்தை ஆறுமுகம் பிரான்சிலும் தொழில்சங்கவாதியாகவும் பாட்டாளிகளின் போராட்டம் (lutte ouvrière)எனப்படும் இடதுசாரி கட்சியின் சார்பில் பாரிஸ் மாநகர சபைக்கான தேர்தல்களில் போட்டியிட்டும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதேவேளை சலசலப்பு இணையத்தளத்தின் ஆசிரியராகவும் ஈ.பி.டி.பி கட்சியின் சர்வதேச ஆலோசகர்களில் ஒருவராகவும் இவரது தந்தை செயலாற்றி வருபவராகும்.

x

Check Also

infographics