விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தமிழரசுகட்சிக்குள் நடக்கும் குடுமிப்பிடி சண்டை அவர்களின் உட்கட்சி விவகாரம்.

இதில் மற்றைய கட்சியினருக்கு என்னவேலை?
ஒரு கட்சியின் ஊழல் / திருட்டு அரசியல்வாதிகளிடையே பதவிக்காக நடைபெறும் குழப்பங்களில் மக்களை ஏன் இழுத்துவிட பார்கின்றீர்கள்?

உங்களுக்கு அறிவில்லையா?

சில்லரைஅரசியலை மக்களிடம் ஏற்படுத்தாதீர்கள்.

மக்கள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டித நேரம் இது.

நீங்கள் சமூகத்தை பற்றி சிந்திப்பவர் என்றால் வடமாகாண சபைக்குள் நடக்கும் கேலி கூத்துக்களுக்கும் விக்னேஸ்வரனுக்கு ஆதரவு- எதிர்ப்பு என்கின்ற சில்லரை வேலையை விடுத்து இன்று வயிற்றுப்பிழைப்புக்காக போராடும் கிளிநொச்சி/ வன்னி மக்களை சென்று பாருங்கள். திருட்டு அரசியல்வாதிகளுக்கு கொடிபிடிக்கும் பழக்கத்தை கிளிநொச்சி / வன்னி மக்கள் மத்தியில் உருவாக்காதீர்கள். அவர்கள் பலதடவை அழிவை சந்தித்தவர்கள். இனியும் தவறான வழிநடத்தல் வேண்டாம். தயவு செய்து மக்களை அவர்கள் இயல்பிலேயே வாழவிடுங்கள்.

வன்னியில் உள்ள இளம் ஊடகவியலாளர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய நேரம் இது. தவறான ஒன்றை மக்கள் மத்தியில் விதைத்துவிடாதீர்கள்.

குடாநாட்டில் நடக்கும் கோமாளி கூத்துகளை கணக்கில் எடுக்காது தங்கள் நாளாந்த வேலைகளில் வழமைபோல வன்னி பெருநிலப்பரப்பினர் ஈடுபடுவதே அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.

யாழ் முதலமைச்சராக மட்டும் தொழிற்படும் ஒருவரையும் யாழ் அவையாக மட்டுமே செயற்படும் வடசபையாலும் வன்னி மக்களுக்கு விடியல் ஏற்பட போவதில்லை.

இனி வரும் தேர்தல்களில் இந்த அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்காமல் உங்களது எதிர்ப்பை பதிவு செய்யுங்கள்.

புரிந்து நடந்துகொள்ளுவது நன்று.

இலங்கையில் உள்ள தமிழர்களே!

சிங்களவரிடம் ,
– ஒற்றுமையையும் அரசியல் தந்திரத்திரத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்

முஸ்லிம்களிடம்
– இனத்தினை மேம்பாட்டையும், நடைமுறை அரசியலையும் கற்றுக்கொள்ளுங்கள்

இன்னும் மூன்றே வருடங்களில் அவர்கள் இருவரும் தமது இனத்தினருக்கு கூறிக்கொண்டிருப்பார்கள்

“ இலங்கையில் வெற்றிகரமாக வாழவேண்டும் என்றால் தமிழரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்.”

யாழ் சபையில் sorry வடக்கு மாகாண சபையில் நடைபெறும் அதிகார போட்டியின் பின்னணி திரையை விலக்கி பார்த்தால் அங்கு உண்மையில் பலபரீட்சையில் ஈடுபட்டிருப்பவர்கள் மகிந்தவும் ரணிலுமே!

இது மிக ஆழமான விடயம்.சற்று யோசித்தால் விளங்கிக்கொள்ளலாம்.

புரிந்தவர்கள் புத்திசாலிகள்.

பி.கு: யாழ் மையை தமிழ் அரசியல் தலைமைகள் அன்று பிரிடிஷ் கைகூலிகளாகவும் பின் இந்திய கைகூலிகளாகவும் இப்போது சிங்கள கைகூலிகளாகவுமே இருக்கின்றனர். சொந்த ஆற்றலோ இன விசுவாசமோ இல்லாதவர்கள். மற்றவனுக்கு துரோகிபட்டம் சூட்டும் உணாமையான துரோகிகள்.

Rajh Selvapathi
x

Check Also

One year ago Jo Cox was tragically taken from us. Celebrate her life this weekend at your local event: