புலிகளின் ஒழுக்கமும் ,யானை பார்த்த குருடர்களும்!

புலிகள் இயக்கத்தின்  ஒழுக்கம் பற்றி புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களுக்குத்தான் தெரியும். புலிகள் இயக்கத்திலிருந்து வெளியில் வந்த பல  உறுப்பினர்கள்  அந்த இயக்கத்தின்  மறைந்திருக்கும் பல உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆரம்ப காலம் முதல் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்த முக்கிய சகா தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கிறார். மதுவும் சிகரெட்டும் அவருக்கு அத்துப்படி. அவர்களுடைய தனிப்பட்ட பல  விடயங்களை எழுத அவசியம் இல்லயென்று படுகிறது

பிரபாகரனே இன்னொருவருடைய காதலியைக் கடத்திச் சென்று கர்ப்பமாக்கி திருமணம் புரியலாம் என்றால் அவரது சகா மட்டும் விதிவிலக்கா?

பாலியல் பிரச்சனை புலிகள் இயக்கத்தில் நிறையவே இருந்திருக்கிறது. கட்டுவன் பகுதியில் புலிகளின் பங்கர் ஒன்றை இராணுவம் கைப்பற்றியபோது அங்கே ஆணுறைகள் காணப்பட்டன. இந்த செய்தி ஆதாரங்களுடன் வெளியில் வந்தபோது தங்கள் துப்பாக்கிக் குழல்கள் பழுதடையாமலிருக்க தாங்கள் அதற்கு ஆணுறையப் பாவிப்பதாக  புலிகள் விளக்கமளித்தார்கள்.

புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் சுய இன்பம் அனுபவித்தமை கண்டு பிடிக்கப்பட்டு அவர்களின் விரல்கள் புலிகளால் துண்டிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

கிழக்கில் இராணுவம் கைப்பற்றிய  புலிகளின் கஞ்சிகுடிச்சாறு முகாமில் ஆணுறைப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன, அதுமட்டுமில்லாது அந்த முகாம் பகுதியில் கஞ்சாச்செடிகள் புலிகளால் பயிரிடப்பட்டிருந்தன.

வெளிநாடு ஒன்றில் வசிக்கும் “யோ.கர்ணன்” என்ற முன்னாள் புலி உறுப்பினர் புலிகள் இயக்கத்தில் தனது அனுபவங்களை விபரித்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.  அந்தக் கட்டுரையில் புலிகளின் முகாம்களில் ஒன்றாகத்  தங்கியிருந்த உறுப்பினர்கள் இரவு வேளையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

புலிகள் அழிக்கப்பட்டபின் புலிகள் இயக்கத்தில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் தாங்கள் புதைத்து வைத்திருந்த  புலிகள் இயக்கத்தின் ரகசியங்கள் பலவற்றை வெளிக் கொணர்ந்தார்கள். இதில் தமிழினி, தமிழ்க்கவி போன்றோர் தங்கள் எழுத்துகளில் பல உண்மைகளைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தமிழ்க்கவியின் கட்டுரையில் புலிகள் இயக்கத்தில் ஆட்சேர்ப்பு தளபதிகளின் பெண்கள் வல்லுறவு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பிரபாகரன் இதைக் கண்டும் காணாமல் விட்டிருக்கிறார். காரணம் அதை விசாரிக்கப் போனால் பல உறுப்பினர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியேறிவிடுவார்கள் என்பதுதான். தமிழ்க்கவியின் கட்டுரையில் புலிகள் இயக்கத்திற்குள் சாதி முரண்பாடுகள் இருந்தமையையும் குறிப்பிட்டுள்ளார்..

புலிகள் இயக்கத்தில் சாதி வேறுபாடுகள் இல்லை என்று பலர் கூறுவதனால் இதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

பிரபாகரன் மது அருந்துவதில்லை. சிகரட் புகைப்பதில்லை, தேநீர் கோப்பி அருந்துவதில்லை என்று பெருமை பாடுகிறார்கள். மதுவும் , சிகரெட்டும், தேநீர் , கோப்பி பழக்கம்  இல்லாவிட்டால் அவர் ஒழுக்கமானவர் என்பது அர்த்தமல்ல.

அல்கைதா, ஐசிஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் மது, சிகரெட் பழக்கமற்றவர்கள். அல்கைதாவின் தலைவனாக இருந்த “ஒசாமா பின்லாடன்”  கூட மது, சிகரெட் பழக்கமற்றவன். அது மட்டுமல்லாது தனது சகபாடிகளுடன் ஒரே தட்டில் சாப்பிடுபவன். அதற்காக அவனுக்கு ஒழுக்க நற்சான்றிதழ் வழங்க முடியுமா?

உலக மக்களால் புனிதமான போராட்ட  இயக்கத் தலைவனாக போற்றப்படும்  “சேகுவேரா” நன்றாக சுருட்டு புகைப்பார், கோடி மக்களால் போற்றப்படும் கியூபா நாட்டின் மறைந்த தலைவரும் சுருட்டுப் புகைப்பார். பல நாடுகளில் உன்னதமான தலைவர்கள் மது அருந்துவார்கள்,புகைத்தல் பழக்கமுடையவர்கள், என்ன் பெண் சகவாசமும் கொண்டவர்கள். அவர்கலையெல்லாம் ஒழுக்கம் அற்றவர்கள் என்று யாரும் முத்திரை குத்தவில்லை..

பிரபாகரனுக்கு மட்டுமேன் இப்படி விளம்பரம்?

ஒழுக்கம் என்பது மது,மாது,சிகரெட், தேநீர் ,கோப்பியில் அடங்கியதல்ல.

ஒழுக்கம் என்பது மனித நேயம் சம்பந்தப்பட்டது. போராட்டம் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிரை எடுப்பதும் , நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்துவதும் மாபெரும் ஒழுக்கக் கேடு!

ஒழுக்க சீலன் என்று கூறப்படும் பிரபாகரனால் பல்லாயிரக்கணக்கான  பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளர்கள்.

பல்லாயிரக் கணக்கான சிறுவர்கள் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளர்கள்.

பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என்று பேதமில்லாமல் பிரபாகரனால் அப்பாவிப் பொது மக்கள் பலர் கொல்லப்படுள்ளார்கள்.

பிள்ளைகள் பெற்றோர்களிடமிருந்து பலாத்காரமாகக் கடத்தப்படு ஒரு வலிந்த யுத்தத்திற்காகப் பலி கொடுக்கப்பட்டுள்ளார்கள்.

ஆயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

கல்விமான்கள் , புத்திஜீவிகள், மனித நேயவாதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுக் கருக்கள் கொண்டோர்  பலர் ஒழுக்க சீலன் என்று கூறப்படும் பிரபாகரனால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த ஒழுக்க சீலன் பிரபாகரன்  இறுதி யுத்தத்தில்  தனது உயிரைப் பாதுகாக்க அப்பாவி மக்களைக் கேடயமாக வைத்து யுத்தம் செய்து அந்த மக்களைப் பலி கொடுத்துள்ளான்.

பச்சிளம் குழந்தைகள் குண்டுகளால் உடல் சிதறி இறந்தபோதும், பட்டினியால் பரிதவித்த போதும் தனது ஆயுதங்களைக் கீழே போட்டு அவர்களைக் காப்பாற்றும்  இரக்க குணம்  ஒழுக்க சீலன் பிரபாகரனுக்கு இருக்கவில்லை.

மாறாக தனது பிடியிலிருந்து தப்பியோட முயன்றவர்களை ஒழுக்கசீலன் சுட்டுக் கொன்றுள்ளான்.

தனது சொந்த இனத்திற்காகப் போராடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் அழிவில் தான் வாழ நினைத்த இரக்கமேயற்ற ஒருவனை ஒழுக்கசீலன் என்று குறிப்பிடலாமா?

இப்படி இருக்கும்போது  வன்னிக்கு ஒரு நாள் சென்று தங்கிவிட்டு நான் 20 புலிகளுடன் படுத்திருந்தேன் . நான் ஒரு பெண் என்று உணரவில்லை என்று “பத்திரிகையாளர்”அனிதா பிரதாப்” புலிகள் நற்சான்றிதழ் வழங்குகிறார்.

பல  நுற்றுக்கணக்கான பெண்களை விதவையாக்கி, பல்லாயிரக்கணக்கான பெண்களின் கல்வியைச் சீரழித்து,  பல நூற்றுக்கணக்கான பெண்களின் எதிர்காலத்தையே சீரழித்த பிரபாகரனை என்று இலங்கைக்கு என்றுமே கால் வைத்திராத நடிகை” கஸ்தூரி” ‘பிரபாகரன் ஒரு பெண்ணியவாதி’ என்று நற்சான்றிதழ் வழங்கியதும் வேடிக்கையானது.

பிரபாகரன் ஒரு பெண்ணியவாதி என்று நடிகை கஸ்தூரி  சொன்னதை ஊதிப் பெருப்பித்து  “பிரபாகரன் மட்டுமே உலகத்தில் சிறந்த பெண்ணியவாதி” என்று சொன்னதாக புலிகளின் ஆதரவு இணைய தளங்களும் , சமுக வலைத்தளங்கள், புளகாங்கிதப் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால் புலிகள் பற்றிய உண்மையான விமர்சனங்களை வைப்பவர்களைத் துரோகிகளாக்கி விடுவார்கள். அல்லது இலங்கை அரசின் கைக்கூலிகளாக்கிவிடுவார்கள்.

புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று 32 நாடுகள் புலிகளைத் தடை செய்துள்ளன.

புலிகள் ஒரு கொலைகார இயக்கம் என்று “நவநீதம்பிள்ளை” பகிரங்கமாகவே  பட்டம் அளித்துள்ளார்.

Ruthless Terrorist என்று பல நாடுகள் புலிகளுக்குப் பட்டம் வழங்கியுள்ளன.

மலேசியா சென்ற வை. கோபால்சாமி மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படாமல் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதற்குக் காரணம் பயங்கரவாத அமைப்பான புலிகள் இயக்கத்துடன் வைகோவுக்கு  தொடர்பு தான்.

2009ம் ஆண்டு சீமான் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். காரணம் புலிப் பயங்கரவாதிகளின் தீவிர ஆதரவாளர் என்பதுதான்.

புலிப் பயங்கரவாதிகளின் தீவிர  ஆதரவாளர்களுக்கு வெளிநாடுகள் அனுமதி  மறுக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம் புலிகளின் மனித குல விரோத நடவடிக்கைகள்தான்.

மது, பீடி ,சிகரெட், பெண் சகவாசம் இப்படியானவைகளை உலகம் ஒழுக்கத்துக்குள் சேர்க்கவில்லை.

யார் மனித குல விரோத நடவடிக்கைகள் செய்கிறார்களோ? யார் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் உலக நாடுகளில் தடை செய்யப்பட வேண்டியவர்கள்..

பிரபாகரன் ஒழுக்க சீலன் என்று எந்த உலக நாடுகளும் நற்சான்றிதழ் வழங்கி புலிகளை அங்கீகரிக்கவில்லை, புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஆதரவைத்தான் வழங்கின.

 

 

 

.

 

.