ஒழுக்கம் என்பதன் அர்த்தம் தான் என்ன? – ரமேஸ்

நான் 24 வயது பெண்ணாக இருந்த போது 20 ஆண் “விடுதலைப் புலிகளோடு” ஓர் இரவில் அடர்ந்த காட்டில் தனியாக இருந்தேன்.

இருபது ஆண் ” விடுதலைப் புலிகளோடு”
ஓர் இரவில் தனியாக இருந்தேன், ஒரு நொடிப்பொழுது கூட பெண் பாதுகாப்பின்மையை நான் உணரவில்லை-     அனிதா பிரதாப்

அனிதா பிரதாப் புலிகள் ஒழுக்கமானவர்கள் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.  புலிகளைச் சந்திக்கச் செல்லும் எந்த வெளிநாட்டுப் பிரநிதிகளும் புலிகளின் பின்புலங்களை அறிந்து கொள்வதில்லை. அவர்களால் அறிந்து கொள்ளவும் முடியாது. அது யாராக இருந்தாலும் அவர்கள் யானை பார்த்த குருடர்களே!

புலிகள் இயக்கத்தில் யாரும் மது அருந்தக் கூடாது,

சிகரெட் புகைக்கக் கூடாது ,

பெண் சேஷ்டைகள் இருக்கக் கூடாது.

ஆம் அது புலிகளின் இயக்க விதிகள்.

புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல எல்லா இயக்கங்களிலும் இந்த விதிகள் இருந்தன. புலிகள் இயக்கதில் பெண்கள் இணைக்கப்படுமுன்பே ஏனைய போராட்ட இயக்கங்களான , ரெலோ, ஈபிஆர் எல்எஃப், புளொட் இயக்கங்களில் பெண்கள் இணைக்கப்பட்டுவிட்டார்கள். புலிகள் இயக்கம் ஒழுக்கமானவர்கள் என்று கூறுவதானால் ஏனைய  இயக்கங்களில் ஒழுக்கம் இல்லை என்று கூறிவிடமுடியாது.

பிரபாகரனோடு ஒப்பிடும்போது , பத்மநாபாவும், சிறீ சபாரத்தினமும் மிகவும் ஒழுக்கமானவர்கள்,  அந்த  இயக்கங்களின் உறுப்பினர்கள் , புலிகள் இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட  பல ஏனைய இயக்கத்தவர்கள் மிகவும் ஒழுக்கமுள்ளவர்கள். புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களிடம் இல்லாத சிறந்த ஒழுக்க குணங்கள் அவர்களிடம் இருந்தன.  அது

என்ன என்பதை பின்ன்னால் எழுதுகிறேன்

பெண்கள் விடயத்தில் கிட்டுவைப்பற்றிய பல முறைப்பாடுகள் உண்டு. கிட்டு  திருமணமான பெண்களை வைப்பாட்டியாக வைத்திருந்தார், யாழ்ப்பாணத்தில் தனது வைப்பாட்டியிடம் சென்றுவிட்டு வரும்போதுதான் கிட்டுவுக்குக் கைக்குண்டு வீசப்பட்டது.

கிட்டுவின் காதலியான சிந்தியாவின் தாயார்தான் கிட்டுவின் முதல் வைப்பாட்டி என்று வெளிநாடுகளில் வசிக்கும் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான கிட்டுவின் சகாக்கள் கூறிகின்றார்கள். அதைவிட கிட்டு வெளிநாடு சென்ற ஒரு      பொறியியலாளரின் மனைவி ஒருவரைத் தன்வசப்படுத்தியதை  தற்போது ஐரோப்பிய நாடு  ஒன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர்  ஆதராங்களுடன் வெளியிட்டுள்ளார்.

பிரபாகரன் மதிவதனியைத் திருமணம் முடிக்கும் போது மதிவதனி கர்ப்பமாக இருந்தார். இதனைக் கேள்வி கேட்ட மன்னாரைச் சேர்ந்த பிரபாகரனின் சகாவைப் புலிகள் கொல்லத் தேடிய போது அவர் தப்பி வெளிநாடு வந்துவிட்டார்,

யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாடில் இருந்தபோது புலி உறுப்பினர்கள் யாழ்ப்பாணப் பகுதிகளில் வெளிநாட்டில் கணவன் மார்கள் உள்ள அக்காமார் ,அன்ரிமார்களின் ஆதரவுகளைப் பெற்றார்கள்.  இவர்களில் பெரும்பாலானோர் கிட்டுவின் சகாக்களாவார்கள். இந்தியப்படையுடன் புலிகள் யுத்தம் செய்துகொண்டிருந்த போது கிட்டுவின் சகாக்கள் சந்தர்ப்பம் பார்த்து தமிழ்நாட்டுக்குத் தப்பி ஒடினார்கள். இவர்களுடன் தொடர்புகளிலிருந்த வெளிநாட்டில் கணவன்மார்களைக் கொண்ட பெண்களும்  சென்னைக்குச் சென்றுவிட்டார்கள்.  பெரும்பாலானவர்கள் அண்னாநகர், வேளச்சேரிப் பகுதிகளில் தங்கியிருந்தார்கள்.  வெளிநாடுகளில் கணவன்மார்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் அந்தப் பெண்கள் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் உல்லாசம் அனுபவித்தார்கள். இரவு நேரங்களில் மொட்டை மாடிகளில் சல்லாபம் புரிவதைப் அந்தக் கட்டிடங்களில் வசிக்கும்  ஏனைய தமிழர்கள் கண்டிருக்கிறார்கள்.

கனடாவில் வசிக்கும் முன்னாள் புலியும் கிட்டுவின் சகாவுமான ஒருவர்  தன் வாயாலே  ஒரு உண்மையைக் கூறினார். எங்கள் இயக்கத்தை வெளியில் இருப்பவர்கள் உத்தமர்கள் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது  ஸ்ரான்லி வீதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் மேல்ப் பகுதியில் எங்களுக்கு சகல வசதிகளும், உண்டு. மது அருந்துவோம், சிகரெட் புகைப்போம் பிரியாணிப் பொட்டலங்கள்  எல்லாம் எங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரிய வர்த்தகர்கள் தங்கள் நன்மைகளுக்காக புலிகளின் பல உறுப்பினர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தம்வசம் புலிகளை வைத்திருந்தார்கள்,  புலிகள் ரெலோ இயக்கத்தை அழித்தபோது சோடாவும் ஆட்டிறைச்சியுடன் விருந்து படைத்தவர்களும் இப்படியான வர்த்தகர்கள்தான்.

கிட்டு ஒருதடவை தனது சகாவின் காதலியுடன் உடலுறவு கொண்டுவிட்டு அவளது உள்ளாடையைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்து இது உனது காதலியின் உள்ளாடைதானே என்று கொடுத்தாராம். வெளிநாடுகள் வசிக்கும் கிட்டுவின் சகாக்கள்  மனம்திறந்து  பல சுவாரஸ்யமான உண்மைகளைக் கூறுவார்கள்.

அன்ரன் பாலசிங்கம்  புலிகளின் அரசியல் ஆலோசகர் மட்டுமல்ல புலிகளின் முக்கிய உறுப்பினரும் கூட! ஆனால் அன்ரன் பாலசிங்கம் போல மது அருந்தும் ஒருவர் வேறு எந்த இயக்கத்திலும் இருக்கவில்லை.

பிரபாகரன் மதிவதனியைக் கடத்திக் கொண்டுபோய் உடலுறவு கொண்டுவிட்டுத் திருமணம் முடித்தபோது மதிவதனிக்கு ஒரு காதலர் இருந்தார்.

திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்ளக் கூடாது என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

புலிகள் இயக்கத்தில் யாரும் திருமணம் செய்யக்கூடாது,

பெண்களுடன் உடலுறவும் கொள்ளக் கூடாது,

என்பது புலிகள் இயக்கத்தின் கொள்கைகளில் ஒன்று.

ஆனால் பிரபாகரன் தனது இயக்கவிதிகளைத் தானே மீறியதும் இல்லாமல் , தமிழர்களின் கலாச்சாரத்தையும் மீறியிருந்தார், கர்ப்பமான பெண்ணுக்கு ஆலயத்தில் திருமணம் நடத்த மாட்டார்கள். ஆனால் மதிவதனி கர்ப்பமாக இருந்தபோதே ஆலயத்தில் திருமணம் நடந்தது.

 புலிகள் இயக்கத்தின்   ஒழுக்கக்கேடுகள் தொடரும்!
x

Check Also

One year ago Jo Cox was tragically taken from us. Celebrate her life this weekend at your local event: