லண்டன் பாலத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது.
இதனிடையே, இந்த தாக்குதலின் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தோமஸ் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. தாக்குதல் நடந்த நாளில் அங்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார்.
தாக்குதல் நடந்த நேரத்தில் மூன்று பேர் தப்பிப்பதற்காக பயத்தில் பாலத்தில் இருந்து நதியில் குதித்தனர். ஒருவேளை தோமஸ் நதியில் குதித்திருக்கலாம் என்ற அச்சம் நிலவியது.
இந்நிலையில், காணமல் போன தோமஸின் சடலம் தேம்ஸ் நதியில் இருந்து போலீசாரால் நேற்று கண்டெடுக்கப்பட்டது. லண்டன் பிரிட்ஜில் இருந்து சுமார் இரண்டரை மைல் தூரத்தில் லிம் ஹவுஸ் என்ற இடத்திற்கு அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் கண்டெடுக்கப்பட்டது காணாமல் போன தோமஸின் உடல் தான் என்பது அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று ஸ்காட்லாந்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டன் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான எட்டாவது நபரின் உடல் தேம்ஸ் நதியில்!
லண்டன் பாலத் தாக்குதலில் 7 பேர் பலியாகினர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்தது. இதனிடையே, இந்த தாக்குதலின் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தோமஸ் என்பவர் காணாமல் போனது தெரியவந்தது. தாக்குதல் நடந்த நாளில் அங்கு தனது குடும்பத்துடன் சென்றிருந்தார். தாக்குதல் நடந்த நேரத்தில் மூன்று பேர் தப்பிப்பதற்காக பயத்தில் பாலத்தில் இருந்து நதியில் குதித்தனர். ஒருவேளை தோமஸ் நதியில் குதித்திருக்கலாம் என்ற அச்சம் நிலவியது. இந்நிலையில், காணமல் போன தோமஸின் சடலம் தேம்ஸ் நதியில் இருந்து போலீசாரால் நேற்று கண்டெடுக்கப்பட்டது. லண்டன் பிரிட்ஜில் இருந்து சுமார் இரண்டரை மைல் தூரத்தில் லிம் ஹவுஸ் என்ற இடத்திற்கு அருகில் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் கண்டெடுக்கப்பட்டது காணாமல் போன தோமஸின் உடல் தான் என்பது…
User Rating: Be the first one !