லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு, 48 பேர் காயம்!

லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர்.

லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது.

மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார்.

சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.

அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன.

இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார்.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார்.

மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு போலிசார் உட்பட ஐந்து பேர், கொல்லப்பட்டனர்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...