காபூலில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்- 18 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் நாட்டில் முக்கிய பிரமுகர் ஒருவர் மகனின் இறுதிச்சடங்குகள் கல்லறையில் நடந்துகொண்டிருக்கும் போது மூன்று குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று பாதுகாப்புச் சூழல் முற்றிலும் சீர்கெட்டுள்ளது என போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய முக்கிய அரசியல் தலைவரான ஆலம் இஸ்தியாரின் மகன் உதூப், போராட்டத்தின்போது போலிஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார். இதன் இறுதிச்சடங்குகள் இன்று காயர் கானா என்ற இடத்தில் உள்ள கல்லறையில் நடைபெற்று வந்தது. அப்போது  அப்பகுதியில் மூன்று வெடிகுண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது.
இந்த கோர தாக்குதலில் 18 பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கான் அரசின் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆனால், அவருக்கு பாதிப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. கடந்த வியாழக்கிழமை காபூல் நகரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...