முடியாது என்றால் முடியாதுதான்!

நமது மக்களின் துன்பங்கள் தொடர்வதற்கும், பிரச்சினை தீராமலிருப்பதற்கும் நம் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு காரணங்கள் இருக்கக் கூடும். சிலர் அப்போதைக்கிருக்கும் அரசாங்கம்தான் காரணம் என்று சொல்லக் கூடும்.
இன்னும் சிலர் இந்த நாட்டில் இதுவரை இருந்த, இனி வரப்போகும் எல்லா அரசாங்கங்களுமே காரணமென்னக் கூடும்.

வேறு சிலர் இந்தியாவையும் அதேபோல் அமெரிக்காவை, சீனாவை, ரஷ்யாவை, முழு சர்வதேசத்தையும் விரல் நீட்டக் கூடும். மேலும் பலர் இந்த எல்லாமே காரணங்கள்தான் என்று விளக்கம் வைத்திருக்கக் கூடும்.

யார் கண்டது, சோதிடத்தை, கிரக பலன்களைக் காரணமாய்ச் சொல்லக் கூடியவர்களும் இருக்கக் கூடும்.

நம்மிடமிருந்த – இருக்கும் பிழைகளும்தான் காரணம் என்று இன்று சிலருக்கேனும் தோன்றலாம். இவர்களோடுதான் இந்த விஷயம் குறித்து நாம் விவாதிக்க முடியும்.
தமிழ் மக்களின் தலைவர்களாகச் சொல்லிக் கொள்பவர்கள், மற்ற எல்லோரினதும் பிழைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தாங்கள் செய்யவேண்டிய முயற்சியைச் சொல்கிறார்களுமில்லை@ செய்கிறார்களுமில்லை.

உதாரணத்துக்கு, இலங்கை அரசாங்கமோ, இந்தியாவோ, சர்வதேசமோ என்ன தீர்வைச் சொல்கின்றன… ஏன் தீர்வை வைக்கவில்லை என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, இவர்கள் தாங்கள் கேட்கும் தீர்வு என்ன என்பதைச் சொல்வதில்லை.

இவர்கள் ஒரு தீர்வுத் திட்டத்தை வைத்து, அதற்கு இந்தியாவின், சர்வதேசத்தின், நாட்டிலுள்ள ஏனைய சமூகங்களின் ஆதரவைத் திரட்டி முயற்சிப்பதை விட்டுவிட்டு, இந்த நாட்டில் தீர்வொன்று சாத்தியமேயில்லை என்ற அவநம்பிக்கையையே வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வந்தால் மட்டும் பேரம் பேசித் தீர்வை எடுப்பதற்குரிய அதிக பலத்தை எமக்குத் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். பலத்தை வைத்துக்கொண்டு இதுவரை எதைத்தான் அரக்கினீர்கள் என்றால் எந்தப் பதிலுமில்லை.

இவர்கள் தங்களால் முடியும் என்று நம்பி எதையும் செய்வதில்லை@ எதுவும் முடிந்துவிடக் கூடாதே என்று நினைத்துக்கொண்டே செயற்பட்டால் எதுதான் சாத்தியப்படும்?

முதலில் நமது தேவை என்னவென்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். அதற்கான ஆதரவை நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியாகவும் திரட்டிக்கொண்டு நம்மால் பேசி, இணங்கவைத்து எடுக்க முடியும் என்று நம்பிக்கை கொள்ளாமல் எதையும் சாதிக்க முடியாது.

முடியும் என்று மனதை வைத்தால்தான் முடியும் என்பதற்கு இந்த உதாரணம் சொல்லப்படுவதுண்டு. 30 அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட ஒரு பலகையை நிலத்தில் போட்டுவிட்டு நடக்கச் சொன்னால், பலகையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்திற்கு அடிசறுக்காமல் எவராலும் நடந்துசெல்ல முடியும்.

ஆனால் இதே பலகையை உயர்ந்த இரு கோபுரங்களுக்கிடையே ஆகாயத்தில் வைத்துவிட்டு அவ்வளவு உயரத்தில் நடக்கச் சொன்னால், இரண்டடி நடக்கு முன்னரே கைகால்கள் நடுங்கத் தொடங்கும். சில அடிதூரம் நடப்பதற்குள் கால்கள் பின்னி விழுந்துவிட நேரும்.

காரணம் இதுதான்: பலகை நிலத்தில் கிடக்கும்போது நடப்பது இலகுவென்று மனம் நினைக்கிறது. ஆனால் உயர்த்தப்பட்டதும், நாம் விழுந்துவிடுவோம் என்று மனம் நினைக்கிறது. உடனே பயத்தால் நடுங்குகிறோம். நாம் விழப்போகிறோம் என்ற எண்ணம் தோன்றியதும் அதற்கு முன்னால் நமது முயற்சிகள் விணாகிவிடுகின்றன@ தோல்வி பெறுகின்றன.

ஆமாம், நம்மால் முடியாது என்று எண்ணுபவர்களுக்கு எதுவுமே முடியாதுதான்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...