காபூலில் நாங்கள் குண்டு வைக்கவில்லை- பாகிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் நேற்று தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரம்பிய லாரியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலில் 90 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஹக்கானி தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஹக்கானி குழுவுக்கு பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

ஆனால், ஆப்கானிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா கூறுகையில், “ஆப்கானிஸ்தானின் இத்தகைய குற்றச்சாட்டு அணுகுமுறையானது, ஆதாரமற்றது. இது அமைதி முயற்சிக்கு உதவாது.

தீவிரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுவதற்கு மற்ற நாடுகளை விட பாகிஸ்தான் அதிக அளவிலான பங்களிப்பை செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள சில குறிப்பிட்ட சக்திகள் இருநாட்டு உறவுகளை சீர்குலைத்து வருவது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என்றார்.

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...