கருணாநிதிக்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலய முகவரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அந்த வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி இருப்பதாவது:-

உங்களுடைய பிறந்தநாளுக்கு என்னுடைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை நான் தெரிவிக்கிறேன். மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை இறைவன் உங்களுக்கு வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.

மேலும் கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர்.

x

Check Also

100 கிளைகளுடன் ஒரு பனைமரம் !