தென்பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு லண்டனில் நிதி சேகரிப்பு நிகழ்வு!

அதிக மழை, மண்சரிவு, வெள்ளம் மற்றும் வேறு அனர்த்தயுங்களினால் மே 31 2017 வரை 203 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 96 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 15 மாவட்டங்கள் இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் 19876 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.

லிற்றில் எய்ட் அமைப்பு அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தில் தம்மை ஈடுபடுத்தி உள்ளது. இதற்காக வருகின்ற யூன் மாதம் 10ம் திகதி ஹவுன்சிலோவில் உள்ள White Bear இல் நிதி சேகரிப்பு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிழ்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதும் லிற்றில் எய்ட் இனால் இத்திட்டத்திற்கு £1500 பவுண்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் இந்நிவாரணத் திட்டத்தை ஹவுன்சிலோவில் இயங்கிவரும் அதுல தாசான விகாரையின் பிரதான விகாராதிபதி வண கசப்ப தேரோ, லிற்றில் எய்ட் சார்பில் முன்னெடுக்கின்றார். கசப்ப தேரோ நாளை யூன் 4 2017இல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று உதவிகளை வழங்க உள்ளார்.

மே 18 2009 இல் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட லிற்றில் எய்ட் அமைப்பு, அதற்கு முன்னதாகவே வன்னி யுத்தத்தில் இடம்பெயயர்ந்த மக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட காலங்களில், பல்வேறு உதவித் திட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. செஞ்சோலைக் குழந்தைகளை லண்டன் அகிலன் பவுண்டேசனின் உதவியுடன் பராமரித்தது முதல் பல்வேறு உதவித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. கடந்த காலங்களில் தென்பகுதியில் வெள்ள நிவாரண நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் ஈடுபட்டு இருந்தது.

லிற்றில் எய்ட் அமைப்பு பல்வேறு உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதில் எப்போதும் முன்னின்று உள்ளது. இந்த வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் லிற்றில் எய்ட்: சிலோன் யுகே, அதுல தாசான, தேசம் மற்றும் கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட்ஸ் நிதிசேகரிப்பின் செலவீனங்களைப் பொறுப்பேற்றுள்ளது.

நிதிப்பங்களிப்புச் செய்ய விரும்புவோர் கீழுள்ள லிற்றில் எய்ட் வங்கிக் கணக்கின் ஊடாக தங்கள் நன்கொடையை வழங்க முடியும்.

Account Name: Little Aid

Sort Code: 40 03 29

Account No: 91441515

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...