சுயநல வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரம் ஏறும் அது மாறாது !

விக்ரமாதித்தன்கள் எத்தனை தரம் மரம் ஏறி உடல் சுமந்து வந்தாலும் அவர்கள் உள்ளே இருக்கும் சுயநல வேதாளம் கதை கூறி தலை வெடிக்கும் என  பயம்காட்டி ஏற்றபலன் கிடைத்ததும் மீண்டும் உடலோடு  மரம் ஏறும். பாலர் பருவத்தில் நாம் படித்த அம்புலிமாமா கதை ஆகிவிட்டது எம் த .தே கூ  அரசியல்.

 சுயநல வேதாளங்கள் தேர்தல் தோறும் வருவார்கள் வீரவசனம் பேசுவார்கள் வென்ற  பின்பு முன்கதவல் உரிமைப்போர் நடத்தி  பின்கதவால் பதில் கூறி மக்களை நடைப்பிணமாக்கி தாம் மட்டும் நலம் பெறுவார்.

காலகாலமாய் நாம் இதைத்தானே பார்க்கிறோம். ஆண்டபரம்பரை மீண்டும் ஆளவேண்டும் என்றார்கள். வீட்டிற்கு வாக்களித்தோம் . சமஸ்டி   ஒப்பந்தம் போட்டார்கள் அது கிழிபடுவதையும் பார்த்தார்கள் .பின் மற்ற அரசுக்கு முண்டு கொடுத்து ஒருவரை  மத்தியில்  மந்திரியும் ஆக்கி னார்கள்.

பாதியில் இது புளிக்கும் என பதவி விலகினார்கள். இதற்கு முன் பொன்னர் கொண்டுவந்த தொழிற் சாலைகளை என்ன பெரிய சாதனை என எள்ளி நகையாடினர். ஆனால் கோணேசர் மண்ணில் புனிதநகர்  அமைக்க கூட  இவர்களால் முடியவில்லை .

இடையில் இணக்க அரசியல் மூலம் எதாவது செய்ய முடியுமா என முயன்ற துரையப்பாவை துரோகி என்று போட்டுத்தள்ள அதை பார்த்து பெருமிதம் கொண்டார்கள் .

பொடியளை உசுப்பிவிட்ட பெருமை அது. பொங்கி எழுந்த சிவகுமரனை ஈழத்தின் பகத்சிங் என்று மரணசாசனம் வாசித்தார்கள் . கேட்டுக் கொண்டிருந்த பல இளைஞர்கள் தன்னலம் மறந்து விடுதலை களமாட புறப்பட்டார்கள் .

சந்தர்ப்பத்தை சாதகமாக்க வட்டுக்கோட்டையில் தமிழ் ஈழம் என்றார்கள். அள்ளிப்போட்ட மக்களை அப்படியே விட்டு எதிர்கட்சி ( எதிர்க்கும் கட்சி அல்ல ) தலமை பெற்ற பெருமையோடும் மாவட்டசபைக்கு மண்டியிட்டர்கள்.

தம்மால்  ஈழ கனவில் மிதக்கவிடப்ட்ட இளைஞரை விட்டு  விலகி  மாவாட்டும்  உரிமை கூட இல்லாத சபைக்கு மக்களிடம் வாக்கு கேட்டார்கள். மக்களும் போட்டார்கள். வென்றபின் இதில் ஒன்றும் இல்லை என்றார்கள் .

வீறு கொண்ட இளைஞர் ஓரணியில் திரளாமல் இருக்க உள்குத்து வேலைகளை வழமை போல செய்தார்கள்.

போராட்டம் பல பாதைகளில் பயணித்ததை வெறுமனே பார்த்திருந்தார்கள் எம் மூத்த தலைவர்கள். வழிகாட்ட வேண்டியவர்களே தம் இளயோரின் திசைகட்டிகளாக மாற மறந்தனர்.

ஏனென்றல் இந்தியா எதை தந்தாலும் அதை தங்களிடம் தான் தரும் என்ற இறுமாப்பு. காரணம் அவர்கள் அப்புக்காத்துகள், மெத்தப்படித்தவர்கள்.

போராட மட்டும் தான் பொடியள் பதவிக்கு நாங்கள். சனத்துக்கு நாமம் போடா நாம் தான் ஏக போக உரித்தாளர். உவனுகள் ஓன்று பட்டால் எமக்கு ஒன்றும் கிடையாது என,

ஆடுகள் மோத ஓடும் குருதி பருகும் நோக்கில் நாக்கை தொங்கவிட்டு காத்திருந்த  நரிகள் தான்  இவர்கள். அன்றைய மூத்த நரிகளுடன் இன்று அரை நரை கண்ட நரிகளும் இணைந்ததே த . தே .கூ .

அன்று விடுதலை வேட்கையுடன் ஓடிய பரிகளுடன் தாமும் பரித்தோல் போர்த்து ஓடிய நரிகளும் இன்று த. தே .கூ வில் சங்கமம். போக்கிடம் கெட்டவரின் புகலிடம் ஆகிவிட்டது த .தே .கூ  என்பதுதான் உண்மை .

உவங்கள் சனத்திற்கு ஒண்டும் செய்யமாட்டடான்கள். ஆனா தேசியம் வெல்ல வேணும் எண்டுறாங்கள் தந்தை செல்வாவும் அதை தான்  சொன்னவர் அதை மீற கூடாது எண்டுதான் போடுறம் புள்ளடி என்போரே  உங்களிடம் ஒரே ஒரு கேள்வி …

அப்படி என்றால் தந்தை செல்வா ஏன் தமிழரை கடவுள் தான் இனி காப்பாத்த வேண்டும் எண்டவர்?. தயவு செய்து கொஞ்சம் யோசியுங்கோ .

அவருக்கு தெரியும் தன்னோட இருந்த நீருக்குள்ளால நெருப்ப கொண்டுபோற ஆட்களை பற்றி . வெறும் உசுப்பேத்தல் சனத்த சந்தியில தான் நிறுத்தும் எண்டு உணர்ந்ததால தான் தள்ளாத வயதிலும் பொன்னர் வீட்டு படியேறி கரம் கோர்த்தவர்.

தமிழர் நலம் காக்க அந்த பெரிய மனுசன் காட்டின பெரும்தன்மைய சுயநல வேதாளங்கள் சுயலாபம் அடைய பாவிக்க இனியும் அனுமதிக்க போகிறீர்களா எங்கட பிள்ளைகளை அநியாயமாய் காவு கொடுத்து தாங்களும் தங்கட  பிள்ளைகள் ஏன் பேரப் பிள்ளைகளும் சுகமாக வாழும் தலைவர்களுக்கா இனியும் வாக்கு போடப்போறியள்  ?

புத்திஜீவிகளே  உங்கள் தீட்டிய அறிவு கொண்டு ஏன் மக்களை மயக்கும் உணர்ச்சி பேச்சாளர்களின் கையாலாத் தனத்தை மக்களுக்கு பகிரங்கப்படுத்த தயங்குகிறீர்கள் . விடுதலையை விலைபேசத்  தேவை இல்லை அனால் அவபிவிருத்தியையும் அலட்சியப்படுத்த தேவை இல்லை அல்லவா.  சோறா சுதந்திரமா என இரத்தத்தை சூடாக்கும் இவர்கள் செயலால் மக்கள் இரத்தசோகையால்  நோய் வைப்பட்டுள்ளதை நீங்கள் இனியும் பார்த்து மௌனிகளாக இருக்கப் போகிறீர்காளா ?

உங்கள் மேலான அறிவு கொண்டு மக்களை தெளிவு படுத்த ஏன் தயங்குகிறீர்கள். ஒவ்வொரு தேர்தலும் அதுவரும் இதுவரும் என அறிவை மயக்கும் உணர்ச்சி பேச்சுக்களால் மக்கள் பெற்றது என்ன . உள்ளதும் போய்  ஓட்டாண்டிகளாக தம் சொந்த மண்ணில் கூட அகதிகளாக மாறியது தானே நிதர்சனம். அகிலமெல்லாம் அகதிகளாக அலைவது எவ்வளவு வேதனையானது.

புலம்பெயர் தமிழர் என புகழாரம் சூடி பெருமை கொள்வதா எம் விடுதலை போரட்டம் . யூதர்கள் விரட்டப்பட்ட போது தாம் ஓரணியில் திரண்டால் தமக்கோர் தாயகம் அமைக்கலாம் என பாலைவனத்தில் கூட  இஸ்ரவேல் என்ற நாட்டை அமைத்தனர் . அதை வளம் / பலம் கொண்டதாக மாற்றினர் ஆனால் நாம் என்ன செய்தோம் ?

நீர்வளம், நிலவளம், கடல்வளம், காடுவளம் கொண்ட எம் பிரதேசங்களை அகதி முகாங்களாகவும் சுடுகாடுகளகவும் தானே இன்று

மா றவைத்துளோம். காரணம் வெறும் உணர்சிகர பேச்சுக்களும் எம்முள்  நாமே மோதிக்கொண்ட ஒற்றுமை இன்மையும்தான் .             

உணர்சிகர பேச்சுகளால் வாக்குகளை பெறமுடிந்தது . எம்மண்ணை வளமாக்க முடிந்ததா . உரிமைகளை கேட்ட அதே நேரம் அபிவிருத்தியும் நடந்திருந்தால் எம்மக்கள் சொந்த காலில் நின்றிருப்பர். அரச  குடியேற்றம் நடப்பதாக அலறியவர்கள் தம் சொந்த மக்களை பரந்து குடியேற வேண்டிய ஒழுங்குகளை செய்தார்களா ?.

வளமான வன்னி காடுகளில் தம் சொந்த முயற்சியால் களனி கண்டவர்களுக்கு அன்றே வசதி, தம் பாராளுமன்ற பதவி கொண்டு ஏன் செய்யவில்லைகுண்டுச்சட்டிக்குள் குதிரையை யாழ்ப்பாணத்தில் ஓட்டினார்கள் . பக்கத்தில் இருந்த கிளிநொச்சியை  தனி மாவட்டமக்கிய  சங்கரியாரை  கூட அப்போது திட்டித் தீர்த்தார்கள்.

தனி மாவட்டமானால் தனியான அபிவிருத்தி நிதியால் அந்த மாவட்டம் அவிவிருத்தி அடைந்து விடும் என்பதால்.

அபிவிருத்தி அடைந்தால் மக்கள் நலமடைந்து விடுவார்கள் . அப்போது மத்திய அரசு மாற்றந்தாயாக நடக்கிறது என பிலாக்கணம் பாடமுடியாது , அவர்களை தம் சுயநல செயலுக்கு செவிசாய்க்க செய்ய முடியாது,

எனவே அவர்களின் உரிமைபற்றி உணர்ச்சி ஏற்றி  எமக்கு வேண்டும் சமஸ்டிமாவட்ட சபை, தமிழ்ஈழம் என ஏதாவது  தேர்தல் மேடைகளில் கூறி பாராளுமன்றம் போவதே இவர்கள் பணியாக பல்லாண்டு தொடர்ந்ததை

புத்திஜீவிகளே நீங்கள் அறிந்தும் மக்களுக்கு ஏன் அப்போதே அறிவிக்கவில்லை . உங்களுக்கு அரசியல் வாதிகளால்  பதவி சுகமா ???? பதில் கூறுங்கள் மூத்த புத்திஜீவிகளே .

ஆயுத போரட்டம் ஆரம்பித்த போது ஆங்காங்கே மனித உடல்களை மின்கம்பங்களில் பின்னால் கை கட்டி நெற்றி , நெஞ்சு , காது என குண்டு துளைத்தவர் தோளில் தொங்கும் துரோகிக்கு மரணடன்ன்டனை என்ற துண்டொன்று. கூடிப்பார்த அறிவில் உங்களைவிட குறைந்த அப்பாவி மக்கள் தம்முள் குசு குசுப்பர், எங்கட  பொடியள் கெட்டிக்காரர்  பிடிச்சுபோட்டாங்கள்.

ஆனால் புத்திஜீவிகளான நீங்கள் அப்போது கேட்டதுண்டா  ஏன் பிடித்தீர்கள் என்னகுற்ரம் செய்தவர்  எந்தமன்றம் விசாரித்தது எந்த சட்டபடி தண்டனை கொடுக்கப்பட்டது  என்று . முதலாவது மின்கம்ப கொலையை கேள்வி கேட்டிருந்தால் பிறகு நடந்த பல சகோதர படுகொலைகள் கூட தவிர்க்கப்பட்டிருக்கும் .

ஏனெண்ட படித்தவர்களை எங்கட சமூகம் கனம் பண்ணின காலம் அது. அத உங்கட மெளனம் தான் மாத்தினது .

ஒரு உதாரணம் சொல்லுறன். முந்தி தெருவால முன்னாள் ஆசிரியர் வேட்டி நசனலில (வலாமணி ) கையில மான் மார்க் குடையோட கம்பீரமா நடந்து வருவார். எதிர சயிக்கிளில வாற பொடியன் முன்னாள் வைத்தியரை கண்டதும் சயிக்கிலால குதிச்சு வடலிவேலியோட சஞ்சபடி வணக்கம் சொல்லும் . வாத்தியர் ஒரு வித்தக செருக்கு பார்வை பார்த்து  ம், ம் எண்டு சின்னதா வணக்கத்த ஏற்பார் .

இந்த நிலை பிறகு மாறிபோச்சு. இப்ப பொடியன் கையில ஏ கே 47 ஓட  சாரதத்த  துடை தெரிய கட்டியபடி நடந்து வருவான் . எதிர்ல சைக்கிலில வந்த வாத்தியார் பாஞ்சு குதிச்சு வடலிக்க சயிக்கிலோட சாஞ்சபடி எப்படி தம்பி எண்டுகேட்க  பொடியன்  வாத்தியாரை ஒரு விறுக்கா பார்வை பாப்பன் . இந்த நிலை ஏன் வந்தது. படிப்புக்கு இருந்த மரியாதயை  இரும்புக்கு  மாத்தின உங்கட உயிர் பயமா ?

முந்தி அற படிச்ச அப்புக்காத்துகளிண்ட அடாவடிக்கு உங்கட பதவிக்காக அமாஞ்சாமி போட்டியல் பிறகு பொடியளின்ர இரும்பை பார்த்து உயிர் பயத்தில் அம்மாஞ்சி ஆனீர்கள் . ஆக மொத்தத்தில் உங்களுக்கு பதவிஉயர்வும்  உயிர்மேலான அசையும்  தான் கற்ற கல்வியால்கூட பெற்றதா கூறுங்கள் புத்திஜீவிகளே.

என்றாவது இந்த ஏமாற்றப்படும் மக்கள்பற்றி எண்ணிப்பார்ததுண்டா. உசுப்பேர்த்துபவர்கள் கூறும் புலுடாக் கதைகளை மக்களுக்கு தெளிவு படுத்தி அவர்கள்  சுயமாக சிந்திக்கும் அளவிற்கு ஊக்கம் தரும் கட்டுரைகளை எழுதியதுண்ட?. நீங்கள் ஒட்டி உறவாடும் மற்ற சமூக புத்திஜீவிகளுடன் எம்மக்களின் மண்ணின் நலம் பற்றிய நல் விவாதங்களில் கலந்து கொண்டீர்களா?

இருபக்க சுயநல அரசியல் வாதிகளால் ஏற்பட்ட  இனமுறுகலை தீர்ப்பதற்கு உங்கள் புத்தி கூர்மை பயன்படக்கூடாதா? . இணக்க அரசியல் மூலம் இந்த நாட்டில் மூவினமும் இணைந்து வாழ மூவின புத்திஜீவிகளும் முன்முயற்சி செய்யகூடாதா? . எதிர்ப்பு அரசியலால் அடைந்த பின்னடைவை ஆக்கபூர்வமான இணக்க அரசியல் மூலம் முன்னகர்த்த முயலக்கூடாதா ? .

நீங்கள் மௌனம் கலைப்பதன் மூலம் தான் எம்மக்களின் வாழ்வில் மற்றம் வரும். உங்களின் வெளிப்டையான விமர்சனங்கள் , கண்டிப்புகள் , ஆலோசனைகள் தான் சுயநல வேதாளங்களை அரசியல் அரங்கில் இருந்து அகற்றும். அண்மைய ஜனாதிபதி தேர்தல் அந்த படிப்பினையை தந்துள்ளது. தலைமைக்கு முன்பு மக்களை  தாமே  சரியான முடிவெடுக்க செய்த முஸ்லிம் புத்திஜீவிகளை பாராட்டவேண்டும்.

அரபுவசந்தம் வீசாமலே தெற்கில் பலகட்சி கூட்டால் ,அசைக்கமுடியாது என எண்ணிய ஆலமரம் வேரோடு வீசப்பட்டது.

அது சாத்தியமானால் 67வருடங்களாக கூறியதையே கூறி வரும் இந்த கூட்டமைப்புக்கு புது அறிவு ஊட்டபடவேண்டும் . புத்திஜீவிகளான நீங்கள் தான் அதனை செய்ய வல்லவர்கள். சுயநல வேதாளங்களை வீழ்த்தி , நல்லிணக்கம் மூலம்  மக்கள் நல திட்டங்களை வரவேற்று வரலாறு சமைப்பீர்களா ? சாதித்து காட்டுவீர்களா ???????           

காரியசித்தான்

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...