உடையாற்றை திருவிழாவிலை சடையர் வெடி கொழுத்துகிறார்!…

நாட்டிலை  இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தால் உடையாற்றை திருவிழாவிலை சடையர் வெடி கொழுத்தின கதைதான் ஞாபகத்திற்கு வருகுது

முதலிலை கதையை கேளுங்கோ!…

தடல் புடலா வெடி கொழுத்தி திருவிழா நடத்துறதெண்டால் உடையாருக்கு அலாதிப்பிரியம். சீன வெடிகள், சீறு வாணங்கள், வேடிக்கை வெடிகள் என்று காதைப்பிளக்கும்.
காசை காசென்று பாராமல் உடையார் நல்லா செழவழிச்சுத்தான் தன்ரை திருவிழாவை நடத்துவார். எப்ப உடையாரின் திருவிழா வருப்போகுது என்று மூக்கை நுழைக்க காத்திருப்பார் சடையர்.

தான் செலவு செய்யாமல் உடையார் பணத்திலை வேட்டியை மடிச்சு கொடுக்கு கட்டிக்கொண்டு வெடி கொழுத்தி விலாசம் மட்டும் காட்டுவார் சடையர்.

சனம் பார்த்துப்போட்டு சடையர் நல்லா வெடி கொழுத்துறார். திருவிழா என்றால் இப்படித்தான் பாருங்கோ இருக்கோணும் என்று சடையரை புகழ்ந்து பேசுவினம்.

பிறகென்ன?…. உடையாற்றை செலவிலை வெடி கொழுத்தின சடையர் நெஞ்சை நிமிர்த்தி நடை ஒன்று நடப்பார்.

இனி விசயத்துக்கு வருவம். போர்க்குற்ற விசாரணை அறிக்கையை பிற்போடாமல் உடனடியா வெளியிடச்சொல்லி யாழ் பழ்கலைக்கழக சமூகத்தினர் பேரணி நடத்தினம்.

இந்த பேரணிக்கு தார்மீக ஆதரவு கூட வழங்க தகுதியற்று வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ஆட்சி மாற்றத்திற்கு வாக்களியுங்கோ எண்டு கேட்டிச்சினம். ஏதோ காகம் ,ருக்க பனம் பழமும் விழுந்த கதையா ஆட்சியும் மாறிப்போச்சு,…

போதாக்குறைக்கு புதிய அரசாங்கத்திலை தேசிய நிறைவேற்று சபை ஒன்று உருவாக்கப்பட்டு அதிலை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிலும் இரண்டு பேர் அங்கம் வகிக்கினம்.

வெளியுலகத்தின்ரை பார்வையிலை தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரரும் புதிய அரசிலை அங்கம் வகிக்கினம் என்றுதான் நினைக்கினம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமைச்சரவையிலை அங்கம் வகிக்க மறுத்தாலும், அதை விட உயர்ந்த ஸ்தானத்திலை இருக்கிற தேசிய நிறைவேற்று குழுவிலை இவையள் இருக்கினம் எண்டது வெளியுலகத்தாருக்கு தெரிஞ்சு போச்சு பாருங்கோ.

அதுதான் பாருங்கோ ஐ.நா விசாரணை அறிக்கை இப்போதைக்கு தேவiயில்லை என்று வெளியுலகம் தள்ளிப்போட்டிருக்கு.

தாங்களே ஐ.நா விசாரணை அறிக்கை தள்ளிப்போறதுக்கு காரணமா இருந்து கொண்டு,
அதே ஐ நா விசாரணை அறிக்யையை துரிதப்படுத்த சொல்லி தமிழ் தேசிய கூட்டமைப்பு
எந்த முகத்தோடைதான் குரல் கொடுக்க முடியும்?…

அதூன் பாருங்கோ யாழ் பழ்கலைக்கழக சமூகத்தினர் நடத்துற பேரணிக்கு ஆதரவளிக்கிற தகுதியை கூட தமிழ் தேசிய கூட்டமைப்பார் இழந்து போய் நிற்கினம்.

பல்கலைக்கழக சமூகம் ,து விடயத்திலை கடுப்பிலைதான் ,ருக்கினம். அதுதான் பாருங்கோ தாங்களே இந்த பேரணியை நடத்துறம் எண்டு சொல்லிப்போட்டினம்.

அனாலும் பாருங்கோ, பேரணி நடத்துற காரியத்தை பல்கலைக்கழக சமூகத்தினர் கையிலை எடுத்ததும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரார் கொதி கஞ்சி குடிச்ச நாய்கள் மாதிரி ஓடித்திரியினம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின்ரை தலையும் வாயும் புதிய அரசாங்கத்திலை தேசிய நிறைவேற்று குழுவென்று ஒட்டிக்கொண்டிருக்கினம். மறு புறத்திலை நறுக்கிவிட்ட வாலுகள் போல கிடந்து துடிக்கிறவை

தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்டும், தாங்களும் இந்த பேரணிக்கு ஆதரவு எண்டும் அறிக்கை விட்டிருக்கினம்.

போதாக்குறைக்கு நாற்பதினாயிரம் சவப்பெட்டி புகழ் கூட்டத்தாரும் பேரணிக்கு ஆதரவு எண்டு சொல்லி திரியினம்.

ஆனாலும் பாருங்கோ யாரும் தங்கடை பேரணிக்குள்ளை மூக்கை நுழைக்கு கூடாது எண்டதிலை பல்கலைக்கழக சமூகத்தினர் கவனமாத்தான் இருக்கினம்.

கட்சிக்கொடிகள், பொது அமைப்புகள் எண்டு பதாதைகள் அடையாளங்கள் எதுவும் கொண்டு வரக்கூடாது.

துண்டுப்பிரசுரங்கள் ஒண்டும் வினியோகிக்க கூடாது.

ஒழுங்கமைப்பாளர்கள் தயராரித்த சுலோக அட்டைகளை தவிர வேறு எவரும் சுலோக அட்டைகள் கொண்டு வரக்கூடாது,

இப்படி கட்டுப்பாடுகள் போட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாரையும், நாற்பதினாயிரம் சவப்பெட்டிக்காரர் கூட்டத்தையும் கதி கலங்க வைச்சிருக்கினம் பல்கலைக்கழக சமூகத்தினர். வீட்டுக்கு வெளியாலை நில்லுங்கோ என்று பிடிச்சு விட்டுருக்கு.

ஆனாலும் பாருங்கோ அழையாதை வீட்டுக்குள் நுழைந்த விருந்தாளிகள் போல
பேரணிக்குள்ளை புகுந்து கூனிக்குறுகி நிற்கினம்.

எங்கை ஒரு போராட்டம் நடக்கிறதோ அங்கை வந்து மூக்கை நுழைத்து, தாங்கள் சொல்லித்தான் பேரணி நடக்குது எண்டு உரிமை கொண்டாடுகிறதிலை விண்ணாதி விண்ணர்கள்.

வெட்கம் கெட்டதுகள்….

உடையாற்றை திருவிழாவிலை சடையர் வெடி கொழுத்தினது மாதிரி பல்கலைக்கழக சமூகத்தின்ரை பேரணியிலை இவையளும் கொடுக்கு கட்டிக்கொண்டு வெடி கொழுத்துகினம்.

மதகடிப்பண்டிதன்!

 

x

Check Also

VAANAVIL issue 85 – January 2018

VAANAVIL issue 85 – January 2018 has been released and is ...