“நந்திக்கடலின் இறுதி நாள்”

வன்னியைச் சுடுகாடாக்கியன் யார்?

தமிழ் மக்களைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்றவன் யார்?

முள்ளிவாய்க்காலில் தமிழர்களைப் பலி கொடுத்தவன் யார்?

கால்வாய்கள் பரந்த வன்னியில் கல்லறைகள் கட்டியவன் யார்?

மகிந்த ஆட்சிக்கு வந்த பிறகு கூட வெளிநாட்டு மத்தியஸ்தர்களின் உதவியுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தை களையெல்லாம் புறந்தள்ளியவன் யார்?

சேனைப் பயிர்ச் செய்கையும், சிக்கன வாழ்வும் வாழ்ந்த வன்னி மக்களின் வாழ்வில் இடியேறு வீழ்த்தியவன் யார்?

உழைத்துண்ணும் மக்கள் வாழ்ந்த புமி வன்னி!

 

பிரபாகரன் வன்னியில் காலடி வைக்கும் வரை அமிதிபூங்காவாக இருந்தது வன்னி!

பூட்ஸ் கால்களும், இராணுவ வாகனங்களும் ஏறிச்செல்லாத வன்னி நிலம்!

இராணுவத்தின் வாசனை அறியாத பூமி வன்னி!

இரணைமடுவும், முத்தையன்கட்டும், விசுமடுவும், , உடையார்கட்டும் இராணுவம் பார்த்திராத குளங்கள்!

யுத்தம் தான் முடிவு என்றான்!

வன்னியில் யுத்தம் நடத்தப் பணத்தைக் கொட்டிக் கொடுத்தவர்கள் இன்று இனப்படுகொலை என்று அழுகிறார்கள்!

மக்கள் அழிவில்லாமல் விடுதலை கிடைக்காது என்றவர்கள் எதற்கு முள்ளிவாய்க்காலில் ஒப்பாரி வைக்கிறார்கள்.!

சர்வதேச நாடுகள் பார்த்துக்கொண்டிருந்தன!
இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது!

ஐ நா தடுக்கவில்லை!

எதற்கு இந்த ஒப்பாரி?

மக்களின் சாவு உன் கையிலப்பா?

ஐ நா எதற்கு?
இந்தியா எதற்கு?
சர்வதேசம் எதற்கு?

உனக்கு மக்களின் அழிவில் அக்கறையிலையா?

ஒரு சிறிய விடயமப்பா!

மக்களை வெளியே விட்டு ஆயுதங்களைக் கேழே போட்டிருந்தால் உனக்குச் சர்வதேசம் எதற்கு?

முள்ளிவாய்க்காலின் எல்லையில் சென்று ஆயுதங்களைப் போட்டு காலில் வீழ்ந்தாயே!

அதை ஏன் நீ முதலில் செய்ய முடியாமல் போனது?

வன்னியை இராணுவ மயமாக்கி நீயும் அழிந்துவிட்டாயே?

இனப்படுகொலை ஒப்பாரி வைக்கும் புலம் பெயர் கூட்டமே! நீங்கள் கொடுத்த நிதியில் நடந்த யுத்தத்தில்தானே மக்கள் கொல்லப்பட்டார்கள்?

இனப்படுகொலையில் உங்களுக்கும் பங்குதானே?
பிறகே இந்த ஒப்பாரி?

மக்களை வைத்து யுத்தம் செய்யாதே!
மக்களை வெளியேற விடு, ஆயுதங்களைப் போடு என்று புலிகளைக் கேட்டீர்களா?

பிறகேன் இந்த ஒப்பாரி?

Rahu Rahu Kathiravelu

x

Check Also

100 கிளைகளுடன் ஒரு பனைமரம் !